ராஜபக்ச குடும்பத்தில் ஒருவர் கூட இனி நாடாளுமன்ற உறுப்பினராக முடியாது – ரணில் தகவல்

ராஜபக்ச குடும்பத்தினரில் ஒருவருக்கேனும் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராகக் கூட வர முடியாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தான் ராஜபக்சர்களை பாதுகாக்கும் நோக்கத்திலோ அல்லது அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு ஒத்துழைப்பு வழங்கும் விதத்திலோ செயற்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பிபிசி செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். கேள்வி : மிகவும் தீர்க்கமான சந்தர்ப்பத்தில் பிரதமராக பதவி ஏற்றுள்ளீர்கள். பொருளாதார நெருக்கடிகளை தீர்ப்பதற்கு எவ்வாறான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு எதிர்பார்த்துள்ளீர்கள் ? … Read more

பிரித்தானியாவில் மேலும் இருவருக்கு குரங்கம்மைத் தொற்று கண்டுபிடிப்பு

பிரித்தானியாவில் மேலும் இருவருக்கு குரங்கம்மை என்னும் நோய்த்தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய சுகாதார அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது. ஏற்கனவே இங்கிலாந்தில் இம்மாதம் 7ஆம் திகதி ஒருவருக்கு குரங்கம்மைத் தொற்று கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அதற்கும், இப்போதைய தொற்றுக்கும் தொடர்பில்லை என சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளார்கள். தொற்றுக்கு ஆளானவர்களில் ஒருவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொற்றுக்கு ஆளான இந்த இருவருக்கும், எப்படி, எங்கிருந்து தொற்று பரவியது என்பதைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். குரங்கம்மை என்பது ஒரு வைரஸ் தொற்றாகும். … Read more

திருமணம் செய்வதாக 100 பெண்களை ஏமாற்றி ரூ.1 கோடி பணம் பறித்த வாலிபர்

புதுடெல்லி: சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர் பர்கான் தசீர்கான் (வயது 35). 2015-ம் ஆண்டு இவர் காண்டிராக்டராக இருந்து வந்தார். இவருக்கு சொந்தமாக வாகனங்களும் இருந்தது. இந்த நிலையில் அவரது தாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். இதற்காக பர்கான் தசீர்கான் வாகனங்களை விற்று தாய் சிகிச்சைக்காக செலவு செய்தார். இதனால் கடனில் தத்தளித்த அவர் ஒடிசாவுக்கு சென்று பழைய கார்களை வாங்கி விற்பனை செய்து வந்தார். ஆனால் அதில் அவருக்கு போதிய அளவு வருமானம் கிடைக்கவில்லை. இவருக்கு ஏற்கனவே திருமணம் … Read more

அம்பேத்கரின் சிலைக்கு அனுமதி; முதல்வருக்கு எஸ்சி, எஸ்டி பணியாளர் சங்கம் கடிதம்

சென்னை:தொழில் நுட்பக்கல்வித் துறை டாக்டர் அம்பேத்கர்  எஸ்.சி/எஸ்.டி பணியாளர் நலச்சங்கம் மாநில பொது செயலாளர் டி.மகிமைதாஸ், மாநில தலைவர் மணிமொழி ஆகியோர் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் சட்டப்பூர்வமான உரிமைகளை பாதுகாத்திட மாநில ஆதிதிராவிடர் ஆணையம் அமைக்க அரசாணை வெளியிட்டு நடைமுறைப்படுத்தி சமூக நீதிக்காக்க அயராது பாடுபட்டுவரும் தங்களை இச்சங்கம் நெஞ்சார வாழ்த்துகிறது. மேலும், அம்பேத்கரின் மார்பளவு சிலை அமைத்திட இச்சங்கம் எண்ணுகிறது. இதற்கான இடத்தை ஒதுக்கி தர வேண்டும்.

பாஜ.வில் உட்கட்சி பூசல் திரிபுரா முதல்வர் திடீர் ராஜினாமா: அமித்ஷா உத்தரவால் விலகல்

அகர்தலா: திரிபுராவில் பாஜ ஆட்சி நடக்கிறது. இம்மாநில முதல்வராக பிப்லாப் குமார் தேவ் பதவி வகித்து வந்தார். இம்மாநிலத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. கடந்த 2 ஆண்டுகளாக பிப்லாப்பின் செயல்பாட்டுக்கு திரிபுரா பாஜ.வில் கடும் எதிர்ப்பு உள்ளது. சமீபத்தில், இவரை கண்டித்து சில பாஜ எம்எல்ஏ.க்கள், காங்கிரசுக்கு தாவினர்.இந்நிலையில், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் உத்தரவின்படி, கடந்த வியாழக்கிழமை பிப்லாப் டெல்லிக்கு சென்றார். பாஜ தேசிய தலைவர் நட்டா, அமித்ஷா உள்ளிட்டோரை சந்தித்துப் பேசினார். பின்னர், … Read more

‘என் அண்ணன் மகனுக்கு ஏன் கஞ்சா கொடுத்தீங்க’ – தட்டிக்கேட்டவர் அடித்துக் கொலை !

நாமக்கல்லில் பள்ளி மாணவனுக்கு கஞ்சா வழங்கியதை தட்டிக்கேட்டதால் ஏற்பட்ட கோஷ்டி தகராறில் கார் டிரைவரின் வீடு புகுந்து சராமரியாக குத்தியும், கல்லால் அடித்தும் கொலை செய்தது விசாரணையில் அம்பலமானது. நாமக்கல் நகராட்சி எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவரது மகன் பிரபாகரன்(வயது 29). கார் டிரைவரான இவரும், செல்லப்பா காலனியைச் சேர்ந்த சுரேந்தர் என்பவரும் செல்லப்பா காலனி பகுதியில் மது அருந்தி உள்ளனர். அப்போது பிரபாகரன் 10ஆம் வகுப்பு படிக்கும் தனது அண்ணன் மகனுக்கு ஏன் கஞ்சா … Read more

கமலின் புது விக்ரம் : லிசியின் வருத்தமும் மகிழ்ச்சியும்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்துள்ள விக்ரம் படம், வரும் ஜூன் மூன்றாம் தேதி வெளியாக இருக்கிறது. கிட்டத்தட்ட 36 வருடங்களுக்கு முன்பு இதே டைட்டிலில் கமல் நடித்த விக்ரம் படம் வெளியான போது ரொம்பவே பரபரப்பாக பேசப்பட்டது. சொல்லப்போனால் தமிழ் சினிமாவில் உருவான ஜேம்ஸ்பாண்ட் பாணியிலான படம் என்றுகூட சொல்லப்பட்டது. இந்த படத்தில் நடித்த மூன்று கதாநாயகிகளில் ஒருவர் நடிகை லிசி. இயக்குனர் பிரியதர்ஷனை திருமணம் செய்துகொண்டு கடந்த சில வருடங்களுக்கு முன்பு அவரிடமிருந்து விவாகரத்து … Read more

எமிரேட்ஸ் அதிபராகஷேக் முகமது நியமனம்| Dinamalar

துபாய்:ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபராக ஷேக் முகமது பின் அல் நஹ்யான் நியமிக்கப்பட்டு உள்ளார்.மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபராக இருந்த ஷேக் கலிபா பின் சயீத், 73, உடல் நலக்குறைவால் நேற்று முன்தினம் காலமானார். இதையடுத்து, எமிரேட்சின் ஆட்சிக் குழு கூட்டம், அபுதாபி அரண்மனையில் நேற்று நடந்தது. இதில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபராக ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான், 61, தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டார். இவர் அபுதாபியின் மன்னராகவும் பொறுப்பேற்றார். … Read more

பொருளாதார கொள்கைகளை மாற்றி அமைக்க வேண்டும்- ப.சிதம்பரம்

பொருளாதாரத்தில் முற்றிலும் தோல்வி… ராஜஸ்தான் மாநிலம், உதய்ப்பூரில் காங்கிரஸ் சிந்தனை அமர்வு மாநாட்டில் நாட்டின் பொருளாதார பிரச்சினைகளை விவாதிக்கும் குழுவின் தலைவரான முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம், அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் நாட்டின் பொருளாதார நிலைமை மிகவும் கவலைப்படத்தக்க அளவில் இருப்பதாக குறிப்பிட்டார்.  தொடர்ந்து அவர் கூறியதாவது:- பொருளாதாரத்தை பொறுத்தமட்டில் மத்திய அரசு முற்றிலும் தோல்வி கண்டுள்ளது. நிலைமையை எவ்வாறு சரிசெய்வது என்று தெரியாமல் நிற்கிறது. விலைவாசி உயர்வையும், வேலையில்லா திண்டாட்டத்தையும் … Read more