”இன்ஸ்டா” காதலனுடன் டூர்.. இடையில் வந்த வில்லங்கம்.. பொய் போலீஸ் லாரி ஓட்டுநர் சிக்கினார்..!

இன்ஸ்டாகிராமில் பழகிய காதலனுடன் சென்னைக்கு வந்த சிறுமியை போலீசார் எனக் கூறி மிரட்டி லாரி ஓட்டுநர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சம்பவம் அரங்கேறி உள்ளது. படிக்கின்ற வயதில் மனதை அலையவிட்டு, ஊர் ஊராக அலைந்தால் என்ன மாதிரியான விபரீதம் நடக்கும் என்பதற்கு சான்றாக நிகழ்ந்த சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு….. மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த 9ஆம் வகுப்பு பயின்று வந்த 14 வயது சிறுமிக்கு, இன்ஸ்டாகிராம் மூலம் சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த 19 வயது … Read more

மதுரை மாநகராட்சியில் ‘பவர்’ இழக்கும் அதிமுக: திமுகவினருடன் நெருக்கம் காட்டும் கவுன்சிலர்களால் பின்னடைவு

மதுரை: மதுரையில் அதிமுக கவுன்சிலர்கள் திமுகவினருடன் அதிக நெருக்கம் காட்டுவதால், மாநகராட்சியில் அக்கட்சி பின்னடைவைச் சந்தித்துள்ளது என்றும், மாநகராட்சியில் தங்களின் உரிமையையே கேட்டுப்பெற முடியாதவர்கள் மக்கள் பிரச்சினையை எப்படி எதிரொலிப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. மதுரை மாநகராட்சியில் அதிமுகவிற்கு 15 கவுன்சிலர்கள் உள்ளனர். இவர்களில், மாநகராட்சியின் எதிர்கட்சித் தலைவராக 64-வது வார்டு கவுன்சிலரும், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளருமான சோலை எம்.ராஜாவும், எதிர்கட்சி துணைத்தலைவராக 48-வது வார்டு ரூபிணி குமார், கொறடாவாக 45-வது கவுன்சிலர் கே.சண்முகவள்ளி … Read more

மத்திய சிரியாவில் உள்ள ராணுவ தளங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதலில் 5 பேர் உயிரிழப்பு

மத்திய சிரியாவில் உள்ள ராணுவ தளங்களை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதல்களில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 7 பேர் காயமடைந்தனர். ஹமா மாகாணத்தில் உள்ள மாஸ்யஃப் பகுதியில் உள்ள ராணுவ தளங்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் கட்டிடங்கள் சேதமடைந்ததுடன், அங்குள்ள வனப்பகுதியிலும் தீப்பிடித்துள்ளது. பன்யாஸ், டார்டவுஸ், ஜாப்லே கடற்கரை நகரங்களிலும் வெடிச்சத்தங்கள் கேட்டுள்ளன. இந்நிலையில், பெரும்பாலான ஏவுகணைகளை வானிலேயே தடுத்து அழித்திருப்பதாக சிரியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.     Source link

சசிகுமாரின் சம்பவங்கள்.. முகநூல் ஓய்வு போஸ்டால் பாய்ந்தது போக்சோ வழக்கு..! 38 ஆண்டு சேட்டைகளுக்கு எண்டு கார்டு..!

பள்ளியில் நீண்ட காலம் பணியாற்றி ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு , முன்னாள் மாணவர்கள் சங்கத்தில் இருந்து பாராட்டுவிழா நடத்துவது வழக்கம் ஆனால் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் 38 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஒருவர் மீது முன்னாள் மாணவர் சங்கத்தினர் அளித்த புகாரால் அவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலம் மலப்புரம் நகராட்சியில் 3 வது முறையாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கவுன்சிலராக இருப்பவர் சசிக்குமார் , … Read more

இலங்கை வெலிகமவில் துப்பாக்கிச் சூடு!

இலங்கையில் வெலிகமவில் இன்று துப்பாக்கிச் சூடு இடம்பெற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெலிகம பிரதேசத்தில் இன்று (மே 14) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. வெலிகம கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ள கடையொன்றுக்கு அருகில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உதவுங்கள்… இலங்கை மக்களை நாடும் காவல்துறை  பாதிக்கப்பட்ட இருவரும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது. கடந்த மே மாதம் … Read more

லிஃப்ட் விபத்து விவகாரம்: கைது செய்யப்பட்ட மூன்று பேருக்கு 27ம் தேதி வரை நீதிமன்ற காவல்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று திடீரென லிஃப்ட் அறுந்து விழுந்தது. இதில், லிஃப்டிற்குள் இருந்த 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர் உயிரிழந்தார். மேலும் இரண்டு பேர் காயமடைந்தனர். உணவு பொருட்களை எடுத்துச் செல்லும்போது லிஃப்டின் இரும்பு கயிறு அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக திருமண மண்டப மேலாளர் திருநாவுக்கரசு, மேற்பார்வையாளர் வெங்கடேசன், லிஃப்ட் ஆபரேட்டர் கக்கன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், கைது செய்யப்பட்ட மூன்று … Read more

புதிய முதல்வராக தேர்வு: ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமை கோரினார் மாணிக் சாஹா

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவில் முதல் மந்திரி பதவியை பிப்லப் குமார் தேவ் இன்று ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை ராஜ்பவன் சென்று ஆளுநரிடம் சமர்ப்பித்துள்ளேன் என தெரிவித்தார். அவரது ராஜினாமாவை தொடர்ந்து மாநில பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. இதையடுத்து திரிபுரா மாநிலத்தின் புதிய முதல் மந்திரியாக மாணிக் சாஹா தேர்வு செய்யப்பட்டுள்ளார் என பாஜக தலைவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், திரிபுரா மாநிலத்தின் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாணிக் சாஹா இன்று … Read more

இலங்கையில் 4 புதிய அமைச்சர்களை நியமித்தார் அதிபர் கோத்தபய ராஜபக்சே

கொழும்பு: இலங்கையில் 4 புதிய அமைச்சர்களை அதிபர் கோத்தபய ராஜபக்சே நியமித்தார். தினேஷ் குணவர்த்தனே(பொதுப்பணித்துறை), மின்சாரத்துறை அமைச்சராக காஞ்சனாவும் பதவியேற்றனர். ஜி.எல்.பெரீஸ் நிதித்துறை, பிரசன்ன ரணதுங்கா நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றார்.   

வனப்பகுதியில் ரோந்து சென்ற போது எஸ்ஐ உட்பட 3 போலீஸ்காரர்கள் இன்று அதிகாலை சுட்டுக் கொலை

குணா: குணா வனப்பகுதியில் போலீசார் ரோந்து சென்ற போது, அங்கு மறைந்திருந்த மான் வேட்டை கும்பல், போலீஸ் எஸ்ஐ உட்பட 3 போலீஸ்காரர்களை சுட்டுக் கொன்ற சம்பவம் மத்திய பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் மான்கள் அதிகமாக வாழ்கின்றன. இந்நிலையில் மான்களை வேட்டையாடும் கும்பல் ஒன்று, அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்த மூன்று காவலர்களை சுட்டுக்கொன்றனர். இதுகுறித்து குணா போலீஸ் எஸ்பி ராஜீவ் மிஸ்ரா கூறுகையில், ‘அரோன் … Read more

‘அதிமுக 10 வருடத்தில் செய்ததை திமுக ஒரே வருடத்தில்..’ – அமைச்சர் சேகர்பாபு சொன்ன தகவல்

”ஓராண்டு திமுக ஆட்சியில் 2666 கோடி மதிப்பிலான கோவில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன” என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி மேலூர் திருவுடையம்மன் கோயில், பழவேற்காடு ஆதிநாராயண பெருமாள் கோயில் உள்ளிட்டவற்றில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். அப்போது, செய்தியாளர்களிடம் பேசியவர், “தமிழ்நாட்டில் கடந்த ஓராண்டில் 2666 கோடி மதிப்பிலான கோயில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன. கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் 3400 கோடி ரூபாய் சொத்துக்கள் மட்டுமே மீட்டகப்பட்டது. வரலாற்றில் … Read more