நகை கடையில் இருந்து இரண்டரை கிலோ தங்க நகைகளை திருடிச்சென்ற கடை ஊழியரை 5 மணி நேரத்தில் கைது செய்த போலீசார்

ஆந்திராவில் உள்ள கடப்பா மாவட்டத்தில் நகை கடையில் இருந்து சுமார் இரண்டரை கிலோ தங்க நகைகளை திருடிச்சென்ற கடை ஊழியரை 5 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர். மஸ்தான் என்பவருக்கு சொந்தமான நகைக்கடையில் பணிபுரிந்து வந்த ஷேக் மசூத், கடன்பிரச்சனையில் சிக்கித் தவித்த வந்த நிலையில், கைவரிசை காட்டியதாக, போலீசாரிம் வாக்குமூலம் அளித்துள்ளார். முன்னதாக, ஜூவல்லரி உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் செல்ஃபோன் சிக்னல் மூலம் மசூத்தின் இருப்பிடத்தை டிராக் செய்த கடப்பா போலீசார், ரயில்வேகோடூர் … Read more

குடியிருப்பில் இருந்து இனி பணியாற்ற முடியாது: பிரித்தானிய பிரதமர் அதிரடி

பிரித்தானியாவில் குடியிருப்பில் இருந்து பணியாற்றுவது இனி வேலைக்கு ஆகாது என பிரதமர் போரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார். இதனால், ஊழியர்கள் அனைவரும் அலுவலகம் திரும்ப வேண்டும் என்ற கோரிக்கையும் அவர் முன்வைத்துள்ளார். சமீபத்தில் நாளேடு ஒன்றில் நேர்காணல் ஊடாக குறித்த தகவலை போரிஸ் ஜோன்சன் வெளிப்படுத்தியுள்ளார். குடியிருப்பில் இருந்து பணியாற்றுவதால் உற்பத்தித்திறன் குறைவதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், வேலையும் மெதுவாக நகர்வதாக போரிஸ் ஜோன்சன் குறிப்பிட்டுள்ளார். சக ஊழியர்களுடன் பணியாற்றும் போது உற்பத்தித்திறன் அதிகரிக்கும், அதிக ஆற்றலுடன் பணியாற்ற முடியும், … Read more

நூல் விலை உயர்வை கண்டித்து வரும் 16, 17ம் தேதிகளில் கடையடைப்பு போராட்டம்

திருப்பூர்: நூல் விலை உயர்வை கண்டித்து வரும் 16, 17ம் தேதிகளில் கடையடைப்பு போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து வெளியான அறிவிப்பில், நூல் விலை உயர்வை கண்டித்து வரும் 16, 17ம் தேதிகளில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட உள்ளது என்றும், இதில் ஜவுளித்துறை சார்ந்த 25 சங்கத்தினர் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே உள்நாட்டு ஆடை உர்ப்த்தியாலர்குள் சங்கம் சார்பில் 500-க்கும் மேற்பட்டோர் திரண்டு போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சத்குருவின் 'மண் காப்போம்' இயக்கத்திற்கு உலக முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் ஆதரவு

மண் வளத்தை பாதுகாப்பதற்காக 100 நாட்களில் 30,000 கி.மீ. மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ள சத்குரு, கடந்த மார்ச் மாதத்தில் லண்டனில் இருந்து பயணத்தை துவங்கினார். ஐரோப்பா, மத்திய ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து தமிழகம் வந்துகொண்டிருக்கிறார். தற்போது 50 நாட்களைக் கடந்து தற்போது மத்திய கிழக்கு நாடுகளில் பயணித்து வருகிறார். மண்ணைக் காப்பாற்றுவதற்கான அவசரக் கொள்கை சார்ந்த நடவடிக்கைகளுக்கு உலகளாவிய ஒருமித்த கருத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.  சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத் … Read more

2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்- கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்

திருவனந்தபுரம்:  கேரளாவில் உள்ள எர்ணாகுளம் மற்றும் இடுக்கி ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை (ரெட் அலர்ட்) விடுக்கப்பட்டுள்ளது. மேலும், திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம் திட்டா, ஆலப்புழா, கோட்டயம் மற்றும் திருச்சூர் ஆகிய பகுதிகளுக்கு வரும் 16ம் தேதி வரை மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் 16ம் தேதி வரை மலப்புரம், கோழிக்கோடு மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  ரெட் அலர்ட் என்பது 24 மணி … Read more

திரிபுரா மாநிலத்தின் புதிய முதல்வராக மாணிக் சஹா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்

திரிபுரா: திரிபுரா மாநிலத்தின் புதிய முதல்வராக மாணிக் சஹா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலமைச்சராக இருந்த பிப்லப் குமார் தேவ் திடீர் ராஜினாமா செய்ததால் மாணிக் சஹா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கோடைவிடுமுறையில் தடையின்றி அதிக பக்தர்கள் தரிசிக்க ஏற்பாடு; தேவஸ்தானம் தகவல்

திருமலை: திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் செயல் அதிகாரி தர்மா ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது: கோடை விடுமுறையில் திருமலை ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஏப்ரல் 15ம் தேதி முதல் ஜூலை 15ம் தேதி வரை வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விஐபி பிரேக் தரிசனம் புரோட்டோகால் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும். இதனால் அதிகளவான பக்தர்கள் சுவாமியை தரிசிக்க முடியும். மேலும், பக்தர்களுக்கு காலை சிற்றுண்டி … Read more

‘மனம் திருந்த வந்தவரை தீர்த்துக் கட்டியது ஏன்?’ -மறுவாழ்வு மையமும்… தொடரும் விசாரணையும்!

சென்னையில் போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றவர் அடித்து கொல்லப்பட்ட வழக்கில் மறுவாழ்வு மைய உரிமையாளரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை ராயப்பேட்டையில் மெட்ராஸ் கேர்ஸ் சென்டர் என்ற பெயரில் நடந்துவந்த போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்காக சென்ற ராஜி என்பவர் அடித்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அண்ணாசாலை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் மையத்திற்கு எதிராக செயல்பட்டதாக ராஜியை, அந்த மையத்தின் ஊழியர்கள் 7 பேர் அடித்து கொலைசெய்ததாக … Read more

”பான் இந்தியா ரெளடிஸ் பார்த்திருக்கியா?”-தெறிக்கவிடும் லிங்குசாமியின் ’தி வாரியர்’ டீசர்!

லிங்குசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ’தி வாரியர்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ’சண்டக்கோழி 2’ படத்திற்குப் பின்னர் ராம் பொத்தினேனி நடிப்பில் தமிழ், தெலுங்கில் உருவாகும் படத்தினை இயக்கி முடித்துள்ளார் லிங்குசாமி. நாயகியாக கீர்த்தி ஷெட்டி நாயகியாகவும் ஆதி வில்லனாகவும் மற்றும் நதியா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். பிருந்தா சாரதி வசனங்கள் எழுத தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். வரும் ஜூலை 14 ஆம் தேதி வாரியர் திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், இன்று டீசர் வெளியாகியுள்ளது. ரெடின் கிங்ஸ்லி குரலில் ‘இந்தப் … Read more

ஏப்ரலில் நாட்டின் ஏற்றுமதி 30.7 சதவீதம் அதிகரிப்பு| Dinamalar

புதுடில்லி :கடந்த ஏப்ரல் மாதத்தில், நாட்டின் ஏற்றுமதி 30.7 சதவீதம் அதிகரித்து, 3.09 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. அதே சமயம், வர்த்தக பற்றாக்குறை 1.55 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.இது குறித்து, மத்திய வர்த்தக துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:நாட்டின் ஏற்றுமதி, கடந்த ஏப்ரலில் 30.7 சதவீதம் அதிகரித்து, 3.09 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. பெட்ரோலிய பொருட்கள், மின்னணு சாதனங்கள், ரசாயனம் ஆகிய துறைகளில் அதிக அளவில் ஏற்றுமதி மேற்கொள்ளப்பட்டதை அடுத்து, இந்த உயர்வு எட்டப்பட்டு … Read more