கொரோனா பரவலால், நாடு மிகப்பெரிய சவாலை எதிர்கொள்கிறது – வடகொரிய அதிபர் கிம் ஜான் உன்

கொரோனா பரவலால், நாடு மிகப்பெரிய சவாலை எதிர்கொள்வதாக வடகொரிய அதிபர் கிம் ஜான் உன் தெரிவித்துள்ளார். கடந்த இரு தினங்களுக்கு முன் வடகொரியாவில் முதன்முறையாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், உடனடியாக நாடு முழுவதிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அந்நாட்டில் புதிதாக 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. ஒரே நாளில் 21 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இந்நிலையில், கொரோனா பரவல் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட அதிபர் கிம் ஜான் உன், கொரோனா பரவலை தடுப்பதற்கான … Read more

டெல்லியில் 47 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகும்… எச்சரிக்கும் வானிலை ஆய்வுத் துறை

டெல்லியில் கடந்த இரு நாட்களாக வெயில் சுட்டெரித்த நிலையில் இன்று பகல்நேர அதிகப்பட்ச வெப்பநிலை 47 டிகிரி செல்சியசைத் தொடும் என வானிலை ஆய்வுத் துறை எச்சரித்துள்ளது. டெல்லியில் வெள்ளியன்று பகல்நேர அதிகப்பட்ச வெப்பநிலை 42 புள்ளி 5 டிகிரி செல்சியஸ் பதிவாகும் எனக் கணிக்கப்பட்டது. இந்நிலையில் நஜப்கரில் 46 டிகிரி செல்சியசும், ஜாபர்பூர் மங்கேஸ்பூரில் 45 டிகிரி செல்சியசும், சப்தர்ஜங்கில் 44 டிகிரி செல்சியசும் வெப்பநிலை பதிவானது. இன்று நகரின் பல பகுதிகளில் 47 டிகிரி … Read more

துவங்கியது ரஷ்யாவின் பழிவாங்கும் படலம்: பின்லாந்துக்கு மின்சாரம் கட்!

பின்லாந்து நேட்டோ அமைப்பில் இணைந்தால் பழிவாங்கும் நடவடிக்கைகள் துவங்கும் என எச்சரித்திருந்தார் ரஷ்ய வெளியுறவு அமைச்சர். அவர் சொன்னதுபோலவே, ரஷ்யாவின் பழிவாங்கும் நடவடிக்கைகள் துவங்கியாயிற்று எனலாம். ஆம், பின்லாந்துக்கு ரஷ்யாவிலிருந்து வரும் மின்சாரம், உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 1.00 மணியிலிருந்து நிறுத்தப்படுவதாக பின்லாந்தின் மின்சாரம் வழங்கும் அமைப்பான RAO Nordic நிறுவனம் தெரிவித்துள்ளது. மின்சாரத்துக்கான கட்டணம் செலுத்தாததால் மின்சாரம் வழங்குதல் நிறுத்தப்படுவதாக ரஷ்ய தரப்பு கூறினாலும், உண்மையான காரணத்தை உலகமே அறியும். இதற்கிடையில், ரஷ்யாவிலிருந்து வரும் … Read more

இந்தியாவில் கோதுமை ஏற்றுமதிக்குத் தடை ஏன்? : முழு விவரம்

டில்லி இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குக் கோதுமை ஏற்றுமதிக்குத் தடை விதித்துள்ளது குறித்த விவரம் இதோ இந்தியா சர்வதேச அளவில் அதிக அளவில் கோதுமை உற்பத்தி செய்யும் நாடாக விளங்குகிறது.   ஆனால் கடந்த சில நாட்களாக கோதுமை விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  குறிப்பாகக் கடந்த 2 மாதங்களாக நாட்டின் பல பகுதிகளிலும் கோதுமை விலை கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது. எனவே தனியார் நிறுவனங்கள் விவசாயிகளிடம் இருந்து அதிக விலை கொடுத்து வாங்கி ஏற்றுமதி செய்து வருகின்றனர்.  இதனால் விவசாயிகள் அரசு … Read more

ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கருணாநிதி சிலை 28ந்தேதி திறப்பு

சென்னை: ஜூன் 3ந்தேதி முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்த தினமாகும். அன்றைய தினம் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். இதையடுத்து கருணாநிதி பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடும் வகையில் கருணாநிதிக்கு ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் ரூ.1.56 கோடி செலவில் சிலை அமைக்கப்பட்டு வருகிறது. கருணாநிதி சிலை திறப்பு விழா வருகிற 28ந்தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது. சிலையை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு திறந்து … Read more

மே 21-ஆம் தேதி பயங்கரவாத எதிர்ப்பு நாள்- உள்துறை அமைச்சகம் கடிதம்

புது டெல்லி: நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் மே 21-ஆம் தேதியை பயங்கரவாத எதிர்ப்பு நாளாக கடைபிடிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம், மத்திய அரசு துறைகள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கடிதம் எழுதியுள்ளது. ‘உடனடியாக’ என குறிப்பிடப்பட்டு எழுதப்பட்ட அந்த கடிதத்தில் கூறியதாவது:- ஒவ்வொரு ஆண்டும் மே 21-ஆம் தேதி பயங்கரவாத எதிர்ப்பு நாளாக கடைபிடிக்க வேண்டும். இதன் நோக்கம் நம் இளையர்களை பயங்கரவாதம் மற்றும் வன்முறையில் இருந்து அந்நியப்படுத்துவதே ஆகும். பயங்கரவாதத்தால் … Read more

ரனிலை ஏற்க எதிர்க்கட்சிகள் மறுப்பு- இலங்கையில் மீண்டும் போராட்டம் வெடித்தது

கொழும்பு: இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார சீரழிவு காரணமாக ஆத்திரமடைந்த பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அத்தியாவசிய பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு இன்னமும் விலகாததால் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் மக்களுக்கு உணவு பொருட்கள் கிடைப்பதில் கடும் சிரமம் நிலவுகிறது. மக்களின் போராட்டம் காரணமாக பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகினார். அவருக்கு பதில் புதிய பிரதமராக நேற்று முன்தினம் ரனில் விக்ரமசிங்கே பதவி ஏற்றார். அவர் மக்களுக்கு 3 வேளை உணவு கிடைப்பதை விரைவில் உறுதி … Read more

திருவாரூரில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதால் அண்ணாமலை,கருப்பு முருகானந்தம் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

திருவாரூர்: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் உள்ளிட்டோர் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திருவாரூர் தெற்கு வீதி பெயரை டாக்டர் கலைஞர் சாலை என பெயர் மாற்றியதற்கு எதிராக பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

டெல்லியில் 30 பேரின் உயிர்களைப் பறித்த தீ விபத்து குறித்து நீதி விசாரணை நடத்த உத்தரவு!: உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க முதல்வர் ஆணை..!!

டெல்லி: டெல்லியில் 30 பேரின் உயிர்களைப் பறித்த தீ விபத்து குறித்து நீதி விசாரணை நடத்த டெல்லி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. தீ விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். டெல்லி முந்த்கா மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அருகில் இருக்கும் வணிக வளாகத்தில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் சுமார் 27 பேர் உயிரிழந்தனர். தற்போது சம்பவ இடத்தில் இடிபாடுகளுக்கு இடையே சிக்கி இருந்த … Read more

புதுக்கோட்டை: பிறந்து சில தினங்களே ஆன குழந்தையின் சடலத்தை நாய் இழுத்துச் சென்ற அவலம்

கறம்பக்குடி அருகே பிறந்து சில தினங்களே ஆன ஆண் குழந்தையின் சடலத்தை நாய் ஒன்று இழுத்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே ஒடப்பவிடுதி ஊராட்சியில் உள்ள சின்னான்கோன் விடுதி பெரியார் சமத்துவபுரம் குடியிருப்பு பின்புறம், பிறந்து சில நாட்களே ஆன ஆண் குழந்தையின் சடலத்தை நாய் ஒன்று கவ்வி இழுத்து வந்துள்ளது. இதனைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் நாயை விரட்டி விட்டு அக்குழந்தையின் சடலத்தை மீட்டு காவல்துறையினருக்கும், வருவாய் துறையினருக்கும் … Read more