டெல்லி தீ விபத்து: பலி எண்ணிக்கை 30ஆக உயர்வு!

மேற்கு டெல்லி முண்ட்கா மெட்ரோ நிலையம் அருகே உள்ள அடுக்குமாடி வணிக கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 30ஐ எட்டியுள்ளது. தீயணைப்பு வீரர்களும், மீட்பு படையினரும் இரவு முழுவதும் போராடி தீயை அணைத்தனர். கட்டிடத்தில் சிசிடிவிகள், வைஃபை ரவுட்டர்கள் மற்றும் பிற மின் உபகரணங்கள் தயாரிக்கப்பட்டன. ஜெனரேட்டர் வைக்கப்பட்டிருந்த முதல் தளத்திலிருந்து ஏற்பட்ட தீ, 2 மற்றும் 3 ஆவது மாடிகளுக்கு பரவியிருக்கலாம் என கூறப்படுகிறது. மாலை 4.40 மணியளவில் தீப்பிடிக்க தொடங்கியது. பின்னர், … Read more

ரணில் பிரதமரானதன் பின்னர் டொலர்களை வழங்கும் இன்னுமொரு நாடு!

இலங்கைக்கு 500,000 நியூஸிலாந்து டொலர்களை வழங்குவதாக நியூசிலாந்து வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. நியூசிலாந்தின் வெளிவிவகார அமைச்சர் நனையா மஹுடா டுவிட்டர் பக்கத்தில் இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளார். பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கும் இலங்கை விவசாயிகளுக்கு உதவுவதற்கும், பாதிப்புக்கு உள்ளாகும் சிறுவர்களுக்கு உணவு வழங்குவதற்கும் இந்த நிதி வழங்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உலக உணவுத் திட்டம் மற்றும் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு ஆகியவற்றின் ஊடாக இலங்கைக்கு இந்த நிதியுதவி வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. This … Read more

பின்லாந்துக்கு மின் விநியோகத்தை நிறுத்துகிறது ரஷ்யா.!

நேட்டோவில் இணைய விண்ணப்பித்ததை கண்டித்து பின்லாந்துக்கு மின்சார விநியோகத்தை ரஷ்யா நிறுத்த உள்ளது. உக்ரைன் போர் விவகாரத்தை அடுத்து ரஷ்யாவுடன் எல்லையை பகிர்ந்து கொள்ளும் ஐரோப்பிய நாடான பின்லாந்து நேட்டோவில் இணைவதில் உறுதியாக உள்ளது. இதனைக் கண்டித்து பின்லாந்துக்கு வழங்கி வரும் அனைத்து மின் விநியோகத்தையும் ரஷ்யா நிறுத்த உள்ளது. ரஷ்யாவிடம் இருந்து மின்சார வாங்குவதை நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும், ஏற்கன்வே வாங்கிய மின்சாரத்திற்கு பணம் செலுத்த முடியாது என்றும் பின்லாந்து தெரிவித்துள்ளது.  Source link

மணக்கோலத்திலேயே தேர்வெழுதிய புதுப்பெண்.. குவியும் பாராட்டு!

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் திருமணம் முடிந்த கையோடு தேர்வு எழுதிய புதுமணப்பெண்ணுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. கர்நாடக மாநிலம் மாண்டியாவைச் சேர்ந்த ஐஸ்வர்யா என்ற 19 வயது இளம்பெண்ணுக்கு நேற்றைய தினம் திருமணம் நடந்தது. அவர் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் நிலையில் பெற்றோர்களால் இந்த திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. ஆனால் திருமணம் நடந்த நாள் அன்றே அவருக்கு செமெஸ்டர் தேர்வும் இருந்துள்ளது. படிப்பை தொடர வேண்டும் ஆவலில், தனது கணவர் மற்றும் பெற்றோரிடம் செமஸ்டர் … Read more

வெளிநாடுகளுக்கு இந்தியாவில் இருந்து கோதுமை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை

டில்லி வெளிநாடுகளுக்கு இந்தியாவில் இருந்து கோதுமை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது. உலக அளவில் இந்தியாவில் கோதுமை விவசாயம் அதிக அளவில் நடைபெறுகிறது.    பல்வேறு வகையான கோதுமைகள் இங்கு உற்பத்தி ஆகின்றன.  எனவே அவை அதிக அளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தற்போது சர்வதேச அளவில் கோதுமைக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை அதிகரித்துள்ளது. இந்தியாவில் உணவு பாதுகாப்புக்கு வெளிநாட்டு ஏற்றுமதி மிகவும் தடங்கல் ஏற்படும் என்பதால் ஏற்றுமதிக்குத் தடை விதிக்க வேண்டும் என வல்லுநர்கள் … Read more

துண்டு, துண்டாக வெட்டி கொல்லப்பட்ட தி.மு.க. பிரமுகர்- தலையை அடையாறு ஆற்றில் தேடும் தீயணைப்பு வீரர்கள்

ராயபுரம்: சென்னையை அடுத்த மணலி செல்வ விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சக்கரபாணி (வயது65). திருவொற்றியூர் 7வது வார்டு தி.மு.க. பிரதிநிதி. வட்டிக்கு பணம் கொடுத்து வந்தார். கடந்த 10ந்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற சக்கரபாணி மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது மகன் நாகேந்திரன் இது தொடர்பாக மணலி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அவரது செல்போன் சிக்னல் மூலம் துப்பு துலக்கிய போலீசார் ராயபுரம் கிரேஸ் கார்டன் 3-வது தெருவில் உள்ள தமீம்பானு என்பவர் … Read more

மக்களை திசை திருப்பவே மதமாற்றத்துக்கு எதிராக அவசர சட்டம்: சித்தராமையா

பெங்களூரு : பெங்களூருவில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:- மதமாற்றம் செய்வதற்கு எதிராக ஏற்கனவே சட்டங்கள் உள்ளது. தற்போது சிறுபான்மையினத்தவரை மிரட்டுவதற்காகவும், அவர்களுக்கு தொல்லை கொடுப்பதற்காகவும் மதமாற்றத்துக்கு எதிராக அவசர சட்டத்தை அரசு கொண்டு வருவதாக அறிவித்துள்ளது. பா.ஜனதா ஆட்சியில் தான் சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறைகள், அவர்களது தார்மீக உரிமைகளுக்கு எதிராக தாக்குதல் நடத்துவது நடந்து வருகிறது. இதற்கு இந்த நாடே சாட்சியாக இருக்கிறது. கர்நாடகத்தில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது நடந்த … Read more

ஏ.டி.எம். கார்டுகளில் கொரோனா வைரஸ்: 48 மணி நேரம் உயிர் வாழும்- ஆய்வில் தகவல்

லண்டன்: கடந்த 2019ம் ஆண்டு சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியது. கொரோனா வைரஸ் பல்வேறு பொருட்களில் பல மணிநேரம் உயிர் வாழும் தன்மை கொண்டது என்று தெரிவிக்கப்பட்டது. காகிதம், பிளாஸ்டிக், பாத்திரங்கள் உள்ளிட்டவற்றில் படர்ந்து இருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. குறிப்பாக மக்களிடம் அதிகமாக புழங்கும் ரூபாய் நோட்டுகள் மூலம் கொரோனா வைரஸ் பரவும் என்று தெரிவிக்கப்பட்டது. அதனால் ரூபாய் நோட்டுகளின் பயன்பாடு குறைத்து ஏ.டி.எம். மற்றும் கிரெட் கார்டுகளை பயன்படுத்தலாம் என்று … Read more

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வரை சந்தித்த தமிழ்நாடு -புதுச்சேரி பார் கவுன்சிலர் தலைவர்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் தமிழ்நாடு -புதுச்சேரி பார் கவுன்சிலர் தலைவர் அமல்ராஜ் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் சந்திப்பு நடத்தினர். தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரை சந்தித்து வழக்கறிஞர்கள் சேமநல நிதியை உயர்த்தியது, கொரோனா நிவாரண நிதியை அதிகரித்து வழங்கியது ஆகியவற்றுக்காக நன்றி தெரிவித்தனர். 

டெல்லி தீ விபத்து: நீதி விசாரணை நடத்த மாநில அரசு உத்தரவு

டெல்லி: டெல்லியில் 27 பேரின் உயிர்களைப் பறித்த தீ விபத்து குறித்து நீதி விசாரணை நடத்த டெல்லி மாநில அரசு உத்தரவிட்டது. தீ விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்றும், தீ விபத்தில் தீக்காயமடைந்தோருக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார். தீ விபத்து நிகழ்ந்த இடத்தில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா ஆய்வு நடத்தினர்.