இந்தியாவில் புதிதாக 2,858 பேருக்கு கொரோனா பாதிப்பு

புதுடெல்லி: கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,858 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. நேற்று முன்தினம் பாதிப்பு 2,827 ஆக இருந்தது. நேற்று 2,841 ஆக உயர்ந்த நிலையில், இன்று சற்று அதிகரித்துள்ளது. நேற்று அதிகபட்சமாக டெல்லியில் 899 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. கேரளாவில் 419, அரியானாவில் 439, மகாராஷ்டிராவில் 263, உத்தரபிரதேசத்தில் 175, கர்நாடகாவில் 156 பேர் … Read more

வடகொரியாவில் கொரோனா பரவலுக்கு மத்தியில் மர்ம காய்ச்சலுக்கு மேலும் 21 பேர் பலி

பியாங்யாங்: சீனாவின் உகான் நகரில் 2019ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் முதன்முறையாக கொரோனா பெருந்தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு வெளியுலகிற்கு தெரிய வந்தது. தற்போது கொரோனா வைரஸ் 225க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இவற்றில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளும் தப்பவில்லை.  எனினும், ஒரு சில நாடுகளில் கொரோனா பெருந்தொற்று பாதிப்பு ஏற்படுத்தவில்லை என தகவல் வெளியானது.  வடகொரியாவில் கொரோனா தொற்று ஏற்படவேயில்லை என அரசு தொடர்ந்து கூறி வந்தது. இந்நிலையில், அந்நாட்டில் முதன்முறையாக … Read more

சென்னையில் தசைத்திறன் குறைபாடுள்ளோருக்கான சிறப்பு பள்ளியில் புதிய கட்டடத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் தசைத்திறன் குறைபாடுள்ள குழந்தைகள் சிறப்பு பள்ளியில் புதிய கட்டடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ரூ.50 லட்சம் மதிப்பில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் பள்ளி கட்டிடம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு கோதுமை ஏற்றுமதி செய்ய தடை விதித்தது ஒன்றிய அரசு..!!

டெல்லி: இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு கோதுமை ஏற்றுமதி செய்ய தடை விதித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. அனைத்து வகையான கோதுமை ஏற்றுமதிக்கும் விதிக்கப்பட்டுள்ள தடை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அரசின் அனுமதி பெற்று குறிப்பிட்ட நாடுகளில் உணவு பாதுகாப்புக்காக கோதுமை அனுப்ப மட்டும் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. நாடு முழுவதும் கோதுமை விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. சர்வதேச அளவில் கோதுமை விலை உயர்ந்து வருவதால் பதுக்கல் அதிகரிக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது. இத்தகைய சூழலில் கோதுமை … Read more

தமிழ்நாட்டில் வங்கிப் பணிகளுக்கு தமிழ் கட்டாயமில்லை – IBPS அறிவிப்பால் சர்ச்சை

தமிழ்நாட்டில் வங்கிப் பணிகளுக்கு தமிழ் கட்டாயமில்லை என்ற வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனமான வங்கி பணியாளர் தேர்வு நிறுவனத்தின் அறிவிப்பால் சர்ச்சை எழுந்துள்ளது வங்கிகளில் கிளர்க் பணிகளுக்கு மாநில அலுவல் மொழி கட்டாயமில்லை என வங்கி பணியாளர் தேர்வு நிறுவனமான IBPS அறிவித்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதனால், தமிழ்நாட்டில் உள்ள வங்கிகளில் பணியாற்ற 843 பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டதில், சுமார் 400 பேர் வெளிமாநிலத்தவர் என்று தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக ஆங்கில நாளேடுக்கு பேட்டி அளித்துள்ள அகில … Read more

படிப்பிற்கு திருமணம் தடையில்லை: திருமணம் முடிந்த கையோடு தேர்வெழுதிய புதுமணப்பெண்

கர்நாடக மாநிலத்தில் திருமணம் முடிந்த கையோடு புதுமணப்பெண் பி.காம் தேர்வு எழுதினார். கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் பாண்டவபுரா தாலுகா லிங்கபுரா கிராமத்தைச் சேர்ந்தவர் ஐஸ்வர்யா (19). இவர் பாண்டவபுராவில் உள்ள எஸ்.டி.ஜி. கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் ஐஸ்வர்யாவுக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இந்நிலையில், ஐஸ்வர்யாவுக்கு நேற்று திருமணம் நடந்தது. அதே வேளையில் பி.காம் முதலாம் ஆண்டு செமஸ்டர் தேர்வும் நேற்று தொடங்கியது. படிப்புக்கு … Read more

சூப்பர் சரிவில் தங்கம் விலை.. யாருக்கெல்லாம் பலன்.. இன்னும் குறையுமா?

தங்கம் (gold) விலையானது இன்று சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக ஆபரணத் தங்கம் விலையானது தடுமாற்றத்தில் காணப்படுகின்றது. இது சர்வதேச சந்தை, இந்திய சந்தை என இரண்டிலும் தடுமாறி வந்தாலும், ஆபரண சந்தையில் சரிவினைக் கண்டிருப்பது ஆர்வலர்களுக்கு மிகச் சரியான சான்ஸ் ஆக பார்க்கப்படுகின்றது. எனினும் தங்கம் விலையானது இனியும் தொடர்ந்து குறையுமா? இன்று வாங்காலாமா? வேண்டாமா? அடுத்து என்ன செய்யலாம்? தற்போது சர்வதேச சந்தையில் என்ன நிலவரம்? இந்திய சந்தையில் என்ன நிலவரம்? ஆபரண தங்கத்தின் விலை … Read more

டெல்லி வணிக வளாகத்தில் தீ விபத்து… குறைந்தது 27 பேர் பலி, பலர் காயம்

Delhi Fire accident: டெல்லியில் முண்ட்கா மெட்ரோ நிலையம் அருகே 4 மாடி வணிக கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 27 பேர் உயிரிழந்துள்ளனர். தீயணைப்பு வீரர்களும், மீட்பு படையினரும் இரவு முழுவதும் போராடி தீயை அணைத்தனர். உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். வீடியோவில், தீப்பிடித்த கட்டிடத்தில் இருந்து மக்கள் கயிறு மூலம் தப்பிப்பதும், உடைந்த ஜன்னல் கண்ணாடியில் தொங்கிட்டு இருப்பதையும் காண முடிகிறது. பலர், அங்கிருந்து வேறு கட்டிடங்களுக்கு … Read more

டெல்லி தீ விபத்து.. தமிழக முதலமைச்சர் மு‌.க ஸ்டாலின் இரங்கல்.!

டெல்லி தீ விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். டெல்லியின் முண்ட்கா மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள வணிக வளாக கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய 27 பேர் உயிரிழந்தனர். Extremely pained by the tragic loss of so many lives in #DelhiFire accident. I extend my heartfelt condolences to the families of victims and wishing … Read more

“என்னய்யா… உனக்கு எந்த டிபார்ட்மென்ட்?" – கலகலக்கும் அமைச்சரவை மாற்ற பேச்சுகள்

தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன், முதல்முறையாக கடந்த ஜனவரி மாதம் அமைச்சர்கள் கவனித்து வந்த துறைகளில், சில பிரிவுகள் மாற்றித் தரப்பட்டன. தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வசமிருந்த சர்க்கரை ஆலைகள் பிரிவு, வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வசம் கொடுக்கப்பட்டது. அப்போதைய போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பனிடமிருந்து, விமானநிலையங்கள் துறை பிரித்தெடுக்கப்பட்டு, தொழில்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது. தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் வசமிருந்த அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம், அமைச்சர் மஸ்தான் வசம் அளிக்கப்பட்டது. நிர்வாக வசதிக்காக இந்த … Read more