இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தீவிர கமல் ரசிகர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. மாநகரம், கைதி, மாஸ்டர் என விகரம் படத்துக்கு முன்பாக தான் இயக்கிய படங்களின் போதே கமல் தான் தனது ஆதர்சம் எனப் பல இடங்களில் தெரிவித்திருக்கிறார். தனது ஆதர்சமான கமலை வைத்து படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்ததை தன்னால் இன்னும் நம்ப முடியவில்லை என படம் வெற்றி பெற்ற பிறகான கடிதத்தில் எழுதியிருக்கிறார். தற்போது கமல் ஹாசன் தன் ரசிகரும், விக்ரம் பட இயக்குநருமான லோகேஷ் கனகராஜுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். அந்தக் கடிதத்தை நெகிழ்ச்சியுடன் லோகேஷ் கனகராஜ் தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

அந்தக் கடிதத்தில்,
அன்பு லோகேஷ் பெயருக்கு முன் திரு போடாமல் விட்டது விபத்தல்ல திரு கனகராஜ் அவர்களுக்கு உங்கள் பால் உள்ள உரிமையை உங்களைக் கேட்காமலே நான் எடுத்துக் கொண்டு விட்டேன். இது நமக்குள்ள தனிப்பட்ட கடிதம் என்பதால்.மற்றபடி உங்கள் சாதனைகளுக்கான பதவிக்கான மரியாதை பழையபடியே தொடரும் பொதுவெளியில் என் ரசிகர்கள் மற்ற ரசிகர்களை விட வித்தியாசமானவர்கள் ஆக இருப்பது அவசியம் என்ற என் ஆசை பேராசை என்றனர் என் விமர்சகர்கள் ஆனால் அதையும் தாண்டி என் முன்னணி ரசிகர் முன்னணி திறமையாளராகவும் இருப்பது நான் ஆசைப்பட்டதைவிட அதிகம். உங்களைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை என்று நான் உட்பட யார் சொன்னாலும் நம்ப வேண்டாம் யூடியூபைத் திறந்தால் வார்த்தைகளின் களஞ்சியமே தென்படும். அதில் உள்ள திரு லோகேஷ் கனகராஜ் தோத்திர மாலையில் இருந்து யார் வேண்டுமானாலும் வார்த்தை மலர்களையும் எடுத்துக்கொள்ளலாம். இவை எல்லாம் தொடர வாழ்த்துக்கள்.
அயராது…
விழித்திருங்கள்
தனித்திருங்கள்
பசித்திருங்கள்
உங்கள் அன்ன பாத்திரம்
என்றும் நிறைந்திருக்கும்
உங்கள் நான்
கமல்ஹாசன்
“Life time settlement letter”
Words can’t express how emotional I’m feeling reading this!
Nandri Andavarey @ikamalhaasan pic.twitter.com/5yF4UnGnVj— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) June 6, 2022
உங்களைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை என நான் உட்பட யார் சொன்னாலும் நம்ப வேண்டாம் என தன் பாணியில் அந்தக் கடிதத்தை எழுதியிருக்கிறார் கமல்.