இந்தியாவில் 3 மாதங்களில் இல்லாத வகையில் கொரோனா அதிகரிப்பு

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் புதிதாக 4 ஆயிரத்து 518 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சுமார் 3 மாதங்களுக்கு பிறகு நேற்று 4 ஆயிரத்து 270 ஆக உயர்ந்தது. இந்நிலையில் இன்று பாதிப்பு நேற்றை விட சற்று அதிகரித்துள்ளது.

இதில் அதிகபட்சமாக கேரளாவில் 1,544, மகாராஷ்டிராவில் 1,494 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் 107 பேருக்கு தொற்று உறுதியாகிவுள்ளது.

கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து 2 ஆயிரத்து 779 பேர் குணமாகி வீடு திரும்பினர். இதுவரை குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 26 இலட்சத்து 30 ஆயிரத்து 852 ஆக உயர்ந்தது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் புதிதாக 4 ஆயிரத்து 518 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 31 இலட்சத்து 81 ஆயிரத்து 335 ஆக உயர்ந்தது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பால் மேலும் 9 பேர் இறந்துள்ளனர். இதனால் இதுவரை உயிரிழந்தவர்கலின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 24 ஆயிரத்து 701 ஆக உயர்ந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.