டாடா-வுக்கு அடித்த ஜாக்பாட்.. ஒரே ஆர்டரில் 10000 எலக்ட்ரிக் கார் விற்பனை..!

இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களுக்கான டிமாண்ட் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் தனிநபர் வாடிக்கையாளர்களைத் தாண்டி தற்போது பல்வேறு வர்த்தக நிறுவனங்களும் எலக்ட்ரிக் வாகனங்களைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளது. இதன் மூலம் எலக்ட்ரிக் வாகனங்களைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய வர்த்தகம் உருவாகியுள்ளது.

அதிலும் குறிப்பாக எலக்ட்ரிக் வாகனங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் முன்னோடியாக இருக்கும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு மிகப்பெரிய ஜாக்பாட் கிடைத்துள்ளது.

எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தீ பிடிக்க ‘இதுதான்’ காரணம்..! உண்மையை உடைத்த DRDO..!!

ப்ளூஸ்மார்ட்

ப்ளூஸ்மார்ட்

இந்தியாவில் ஓலா, உபர் நிறுவனத்தைப் போலேவே எலக்ட்ரிக் வாகனங்களை மட்டுமே வைத்து ஆன்லைன் டாக்சி சேவை அளித்து வரும் நிறுவனம் தான் ப்ளூஸ்மார்ட் எலக்ட்ரிக் மொபிலிட்டி. குர்கிராம்-ஐ தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்நிறுவனம் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய முடிவெடுத்துள்ளது.

 Xpres-T கார்

Xpres-T கார்

இதற்காக ப்ளூஸ்மார்ட் எலக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனம் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திடம் இருந்து சுமார் 10,000 எலக்ட்ரிக் செடான் காரான Xpres-T வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது. இது தான் இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் ஆர்டர் செய்யப்பட்ட எலக்ட்ரிக் கார்கள் ஆகும்.

10000 கார்கள்
 

10000 கார்கள்

ப்ளூஸ்மார்ட் எலக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனம் ஏற்கனவே 3500 Xpres-T கார்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திடம் இருந்து வாங்கியுள்ள நிலையில், தற்போது 10000 கார்களை ஆர்டர் செய்துள்ளது. டாடா மோட்டார்ஸ் விரைவில் கார்களை டெலிவரி செய்யத் துவங்க உள்ளது.

டாடா மோட்டார்ஸ்

டாடா மோட்டார்ஸ்

சமீபத்தில் ப்ளூஸ்மார்ட் நிறுவனம் 50 மில்லியன் டாலர் முதலீட்டை பெற்ற நிலையில், புதிய கார்களை ஆர்டர் செய்து தனது வர்த்தகத்தை வேகமாக விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. இதேபோல் டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் தனது உற்பத்தியை அதிகரிக்க முதலீட்டையும், குஜராத் ஃபோர்டு தொழிற்சாலையும் வாங்க உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Tata Motors got 10000 electric car delivery order from Blusmart electric mobility

Tata Motors got 10000 electric car delivery order from Blusmart electric mobility டாடா-வுக்கு அடித்த ஜாக்பாட்.. ஓரே ஆர்டரில் 10000 எலக்ட்ரிக் கார் விற்பனை..!

Story first published: Monday, June 6, 2022, 19:12 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.