அத்தியாவசிய அரச சேவையை தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்கென பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளை பாராளுமன்றத்தில் 69 ஆயிரத்து 500 கோடி ரூபாவுக்கான குறைநிரப்பு பிரேரணையை சமர்ப்பிக்கவுள்ளார்.
குறைநிரப்புப் பிரேரணை தொடர்பான விவாதம் நாளை மாலை 5.30 வரை இடம்பெறவுள்ளது. பிரேரணையை சமர்ப்பித்ததன் பின்னர், நாட்டின் தற்போதைய நிலை குறித்து விசேட கூற்றொன்றை முன்வைத்து பிரதமர் உரையாற்றயுள்ளார்.
சபை ஒத்திவைப்பு மீதான விவாதமும் நாளை இடம்பெறவிருக்கிறது. பாராளுமன்றம் இம்மாதம் 10ஆம் திகதி வரை கூடவிருக்கிறது.