உலக வங்கியின் உள்ளூர் அபிவிருத்தி உதவிச் செயற்திட்டத்தின் பங்களிப்புடன் புனரமைப்புச் செய்யப்பட்ட மட்டக்களப்பு, மாநகர சபையின் பொதுச் சந்தை இறைச்சி மற்றும் மீன் விற்பனை கடைகள் மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் திறந்து வைக்கப்பட்டன.
மட்டக்களப்பு மாநகரசபை சந்தையிலே குறித்த விற்பனை நிலயங்கள் நீண்ட காலமாக மேல்த்தளத்தில் இயங்கி வந்த நிலையில் மேல்த்தளத்திற்கு சென்று மீன் மற்றும் இறைச்சியை கொள்வனவு செய்வதில் நுகர்வோர் எதிர்கொண்ட சிக்கல் நிலைமையினை கருத்திற் கொண்டு குறிப்பாக மாற்றுத் திறனாளிகள் மற்றும் வயது முதிர்ந்தவர்கள் முதல் மேல் தளத்திற்கு சென்று கொள்வனவு செய்ய முடியாத நிலை காணப்பட்டது .
இந்த நிலமையினை கருத்திற் கொண்டு மட்டக்களப்பு மாநகரசபையினால் உலக வங்கியின் “உள்ளூர் அபிவிருத்தி உதவிச் செயற்திட்டத்தின் (LDSP PT-1)” பங்களிப்புடன் புனரமைப்புச் செய்யப்பட்டு தரைத் தளத்துக்கு மாற்றப்பட்ட மீன் மற்றும் இறைச்சி விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டன.