முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் ,வாடகைக்கு சென்ற பெண் ஒருவரிடம் ,ரூபாய் 8 இலட்சம் பெறுமதியான நகைகள் மற்றும் பணம் உட்பட பல ஆவணங்களை கொள்ளையடித்து சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண் தனது தனிப்பட்ட தேவை நிமித்தம் கொடகமைக்குச் சென்று மீண்டும் வீடு செல்வதற்காக வீதியில் நின்று கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் அவ்விடத்திற்கு வந்த முச்சக்கரவண்டியில் சென்ற போதே சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸில் செய்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முச்சக்கர வண்டி சாரதி ,பெண்ணை பாழடைந்த இடம் ஒன்றிற்கு அழைத்துச் சென்று அச்சுறுத்தி கொலைமிரட்டல் விடுத்து, அவரிடமிருந்த தங்க மாலை, மோதிரம், வளையல், காதணிகள், பணப்பை மற்றும் தேசிய அடையாள அட்டை உட்பட பல அத்தியாவசிய ஆவணங்களையும் கொள்ளையடித்து சென்றுள்ளார்.