புதுடில்லி: இந்திய ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தியின் படத்தை மாற்றப்படாது என ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.
இந்திய ரூபாய் நோட்டுகளை அச்சடித்து வழங்கும் ரிசர்வ் வங்கி, ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தியின் படத்துடன் ரவீந்திரநாத் தாகூர், அப்துல் கலாம் ஆகியோரின் படங்களை பயன்படுத்த உள்ளதாக செய்திகள் பரவி வந்தன. இதற்கு ரிசர்வ் வங்கி தற்போது விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக ரிசர்வ் வங்கியின் தலைமை பொது மேலாளர் யோகேஷ் தயால் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‛தற்போதைய ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தியின் புகைப்படத்தை மாற்றுவது குறித்து ரிசர்வ் வங்கி பரிசீலித்து வருவதாக சில ஊடகங்களில் வெளியான செய்திகள் உண்மையில்லை. காந்தியின் படம் மாற்றப்படாது. அவ்வாறு மாற்ற வேண்டும் என எந்த கோரிக்கையும் வரவில்லை’ என விளக்கமளித்துள்ளார்.
புதுடில்லி: இந்திய ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தியின் படத்தை மாற்றப்படாது என ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.இந்திய ரூபாய் நோட்டுகளை அச்சடித்து வழங்கும் ரிசர்வ் வங்கி,
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.