“ரெளடிகளைப் போல செயல்பட்டால் வேடிக்கை பார்க்க மாட்டோம்!" – அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்துகொண்டார். பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த செந்தில் பாலாஜி, “தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கடந்த ஓராண்டில் 45 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன.

செந்தில் பாலாஜி

புதிய கடைகள் எங்கும் திறக்கப்படவில்லை. ஆங்காங்கே சில பகுதிகளில் கடைகள் வேறு பகுதிகளுக்கு இடமாற்றம்தான் செய்யப்பட்டுள்ளன. மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் இடங்களில் டாஸ்மாக் கொண்டு வரப்படாது.

டாஸ்மாக் கடைகளை குறைப்போம் என்று தி.மு.க தேர்தல் வாக்குறுதியில் சொல்லவில்லை. கோவை மாவட்ட மக்களின் குறைகளை தீர்க்கும் வகையில், 24×7 சேவை மையம் தொடங்கப்பட்டது. தற்போதுவரை 8,407 அழைப்புகள் வந்துள்ளன. அவற்றில், 4,637 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன” என்றார்.

கோவை திருச்சி சாலை மேம்பாலம்

அவரிடம், “கோவையில் பணிகள் முடிந்தும் திறக்கப்படாமல் இருக்கும், கவுண்டம்பாளையம் மேம்பாலத்தை நாங்கள் திறப்போம் என பா.ஜ.க-வினர் அறிவித்துள்ளார்களே?” என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதிலளித்த செந்தில் பாலாஜி, “சட்டத்தைக் கையில் எடுக்க யாருக்கும் அதிகாரம் இல்லை. அப்படி செயல்பட்டால் வழக்கு பதிவுசெய்யப்படும். நான், ஆட்சியர், ஆணையர், மேயர் என்று யாராக இருந்தாலும் அரசு விதிகளை பின்பற்றித்தான் செயல்பட முடியும்.

செந்தில் பாலாஜி

குண்டர்களைப் போலவும், ரெளடிகளைப் போலவும், வன்முறையாளர்களைப் போலவும் செயல்பட்டால் அரசு அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.