திருப்பூர் அருகே தாய் மற்றும் 2 குழந்தைகள் அடித்துக்கொலை: தலைமறைவாக இருந்த வடமாநிலத்தவர் தற்கொலை

திருப்பூர்: சேடர்பாளையம் பகுதியில் தாய் மற்றும் 2 குழந்தைகளை கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த வட மாநிலத்தவர் தற்கொலை செய்துகொண்டார். படியூர் அருகே தண்ணீர் இல்லாத கிணற்றில், சைக்கிளுடன் தப்பியோடிய குற்றவாளி சடலமாக மீட்கப்பட்டார்.

குஜராத்தில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில் தொடங்கியது கல்வி அமைச்சர்கள் மாநாடு

காந்திநகர்: குஜராத்தில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையிலான கல்வி அமைச்சர்கள் மாநாடு தொடங்கியது. மாநில கல்வி அமைச்சர்கள், கல்வித் துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

“சசிகலா பாஜக-வுக்கு வந்தால் வரவேற்போம்; அதற்கான முயற்சிகளில் உள்ளோம்”- நயினார் நாகேந்திரன்

“பாஜக-விற்கு வந்தால் சசிகலாவை வரவேற்போம். சசிகலா பாஜக-வுக்கு வருவது, பாஜக வளர உதவியாக இருக்கும்” என நயினார் நாகேந்திரன் பேசியுள்ளார். புதுக்கோட்டைக்கு திருமண விழாவில் கலந்துகொள்ள வந்த தமிழக சட்டமன்ற பாஜக தலைவரும் முன்னாள் அமைச்சருமான நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “அதிமுகவில் சசிகலாவை சேர்த்தால் அதிமுக வலுப்பெறும். ஒருவேளை அதிமுகவில் சசிகலாவை சேர்க்க விருப்பம் இல்லை என்றால், அவர் பாரதிய ஜனதா கட்சிக்கு வந்தால் நாங்கள் அவரை வரவேற்போம். அது எங்களுக்கு வளர உதவியாக இருக்கும் என்பதால், … Read more

`ரூ.1 கோடி வைப்பு தொகையை செலுத்திவிட்டு செல்லலாம்’-நடிகை ஜாக்குலினுக்கு நீதிமன்றம் உத்தரவு

சுகேஷ் சந்திரசேகர் வழக்கில் தொடர்புடைய நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ், 1 கோடி ரூபாய் வைப்பு தொகையை செலுத்திவிட்டு வெளிநாடு செல்லலாம் என டெல்லி உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. தனியார் மருந்து நிறுவனத்தின் உரிமையாளரை மிரட்டி 200 கோடி பணம் பறித்த வழக்கில் திகார் சிறையில் உள்ள சுகேஷ் சந்திரசேகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடந்துவந்த நிலையில், நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸூடன் சுகேஷ் சந்திரசேகர் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்கள் சில வெளியானது. … Read more

கிரிக்கெட் சங்க ஊழல்: பரூக்கிடம் விசாரணை

புதுடில்லி: கிரிக்கெட் சங்க ஊழல் தொடர்பாக, ஜம்மு – காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவிடம், அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். ஜம்மு — காஷ்மீர் முன்னாள் முதல்வரான பரூக் அப்துல்லா, தேசிய மாநாட்டு கட்சியின் தலைவராக உள்ளார். இவர் ஜம்மு — காஷ்மீர் மாநிலமாக இருந்தபோது, அதன் கிரிக்கெட் சங்க தலைவராக பதவி வகித்தார். அப்போது, கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் நியமனத்தில் ஊழல் நடந்ததாகவும், அதில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்ததாகவும் புகார் … Read more

இந்தியாவில் இன்று சற்று அதிகரித்த தினசரி கொரோனா பாதிப்பு…!

புதுடெல்லி, இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது. அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 745 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பான 2 ஆயிரத்து 338-ஐ விட அதிகமாகும். இதனால், நாட்டில் கொரோனா பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 31 லட்சத்து 60 ஆயிரத்து 832 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா … Read more

பிரெஞ்சு ஓபன் : நடப்பு சாம்பியன் ஜோகோவிச்சை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார் ரபேல் நடால்..!

பாரீஸ், ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது.இந்நிலையில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே இன்று நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் பிரெஞ்சு ஓபனை 13 முறை வென்றவரான ரபெல் நடாலும் (ஸ்பெயின்) ,உலகின் ‘நம்பர் ஒன்’ வீரரும், நடப்பு சாம்பியனுமான நோவக் ஜோகோவிச்சும் (செர்பியா), மோதினர் .டென்னிஸ் உலகின் இரு நட்சத்திரங்கள் விளையாடுவதால் ரசிகர்களிடையே இந்த போட்டிக்கு பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது . பரபரப்பான இந்த … Read more

மெக்சிகோவை புரட்டி எடுத்த சூறாவளி ; 10 பேர் பலி – 20 பேர் மாயம்

மெக்சிகோ சிட்டி, வட அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு மெக்சிகோ. இந்நாட்டை நேற்று சூறாவளி புயல் இன்று தாக்கியது. அஹதா என பெயரிடப்பட்டுள்ள இந்த சூறாவளி புயல் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள அஹ்சகா மாகாணத்தை தாக்கியது. கடுமையான சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்தது. இதன் காரணமாக மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும், நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த சூறாவளி, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 20 பேர் … Read more

Ietamil impact: 10 ஆண்டுகளுக்குப் பிறகு தூர்வாரப்படும் திருத்து வாய்க்கால்

தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகேயுள்ள திறுத்து வாய்க்கால் என்ற பாசன வாய்க்கால் கடந்த 10 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் செடி கொடிகள் முளைத்து புதர்கள் மண்டி கிடப்பதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவித்ததைத் தொடர்ந்து அதுகுறித்த செய்தி தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையதளத்தில்  திங்கள்கிழமை இரவு வெளியானது.( Read here: https://tamil.indianexpress.com/tamilnadu/thanjai-farmers-request-stalin-to-visit-thirutthu-drain-460816/ ) அச்செய்தியின் விளைவாக,  திறுத்து வாய்க்காலில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் 5 இயந்திரங்கள் உதவியுடன் தூர்வாரும் பணிகள்; போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. மேற்படி தூர்வாரும் … Read more

#BREAKING || தமிழகம் – 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல்., 13 பேரில் 6 பேரின் வேட்புமனு ஏற்கப்பட்டதாக அறிவிப்பு.!

தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு அடைந்துள்ளது. இந்த 6 இடங்களுக்கான தேர்தலில் 13 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். அரசியல் கட்சி சார்பாக ஆறு பேரும், சுயேச்சையாக 7 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதில், கட்சி சார்பாக அதிமுகவை பொறுத்தவரை இரண்டு வேட்பாளர்களும், திமுக சார்பில் மூன்று வேட்பாளர்களும், காங்கிரஸ் சார்பில் ஒரு வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். சுயேட்சையாக வேட்புமனுத் தாக்கல் செய்தவர்களுக்கு முன்மொழிவதற்கான சட்டமன்ற உறுப்பினர்கள் … Read more