ஒரு வாரம் தள்ளிப்போன நிவின்பாலியின் துறமுகம் ரிலீஸ்

நிவின்பாலி நடித்த கனகம் கலகம் காமினி படம் கடந்த வருடம் நேரடியாக ஒடிடி தளத்தில் வெளியானது. இது கொரோனா காலகட்டத்திலேயே குறுகிய கால தயாரிப்பாக உருவாக்கி வெளியான படம்.. ஆனால் கொரோனா முதல் அலைக்கு முன்பாகவே நிவின்பாலி நடிப்பில் துவங்கப்பட்ட படம் தான் துறமுகம். துல்கர் சல்மான் நடித்த கம்மட்டிப்பாடம் படத்தை இயக்கிய ராஜீவ் ரவி தான் இந்தப்படத்தை' இயக்கியுள்ளார். கடந்த வருடமே இந்தப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒருவழியாக வரும் ஜூன்-3ஆம் தேதி திரையரங்குகளில் … Read more

பத்ம விருதுக்கு பரிந்துரை : மத்திய அரசு அறிவிப்பு| Dinamalar

புதுடில்லி :’பத்ம விருதுகளுக்கு பரிந்துரை செய்யலாம்’ என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ள அறிவிப்பு: அரசியல், சமூகம், நிர்வாகம், கலை, கலாசாரம், சினிமா, சேவை உட்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு ஆண்டுதோறும் பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ விருதுகள் மத்திய அரசால் வழங்கப்படுகின்றன. வரும், 2023-ம் ஆண்டுக்கான விருது பெறுவோர் பட்டியல் தயாரிக்கும் பூர்வாங்க பணிகள் துவங்கியுள்ளன. பத்ம விருது பெற தகுதி உடையவர்களை பொதுமக்களும் பரிந்துரை … Read more

மேலும் 4 கோடி கிலோ டீசல் இலங்கைக்கு அனுப்பிவைப்பு

கொழும்பு: இலங்கைக்கு இந்தியா மேலும் நான்கு கோடி கிலோ டீசலை நேற்று அனுப்பி வைத்துள்ளது. நம் அண்டை நாடான இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ளது.அன்னியச் செலாவணி பற்றாக்குறை விலைவாசி உயர்வு எரிபொருள் கட்டுப்பாடு அத்தியாவசியப் பொருட்களுக்குதட்டுப்பாடு மின் வெட்டு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை அந்நாடு சந்தித்து வருகிறது. இந்நிலையில் இந்தியா இந்தாண்டு மட்டும் 26 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கடனுதவிகளை வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி மார்ச் ஏப்ரல் மாதங்களில் 40 கோடி … Read more

12 மணி நேரம் பெட்ரோலுக்காக காத்திருக்கும் பெண் ஆட்டோ ஓட்டுனர்!

இலங்கையை சேர்ந்த பெண் ஆட்டோ டிரைவர் ஒருவர் தனது ஆட்டோவில் பெட்ரோல் நிரப்புவதற்காக 12 மணி நேரம் வரிசையில் காத்திருந்ததாக கூறி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இலங்கையில் கடந்த சில மாதங்களாக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதை அடுத்து அத்தியாவசியப் பொருள்களின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து உள்ளது. குறிப்பாக இலங்கையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 373 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி பெட்ரோல் பற்றாக்குறை காரணமாக மணிக்கணக்கில் … Read more

போரினால் சீரழியும் உக்ரைன்: நைட்ரிக் அமில டாங்கரை தாக்கியது ரஷ்யா

உக்ரைனின் செவெரோடோனெட்ஸ்க் நகரில் நைட்ரிக் அமிலம் கொண்ட டாங்கரை குறிவைத்து ரஷ்யா தாக்குதல் நடத்தியதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. உக்ரைனின் லுஹான்ஸ்க் பகுதியில் உள்ள செவெரோடோனெட்ஸ்க் நகரில் ரசாயன ஆலையில் நைட்ரிக் அமில டாங்கரை ரஷ்யா தாக்கியது என்று உள்ளூர் கவர்னர் செர்ஜி கெய்டே கூறினார். இதனால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க, மக்கள் தங்குமிடங்களை விட்டு வெளியே வரவேண்டாம் என்று கவர்னர் வலியுறுத்தினார். நைட்ரிக் அமிலம் சருமத்தில் பட்டாலும் சரி, சுவாசித்தாலும், உடலுக்குள் சென்றாலும் மிகவும் ஆபத்தை … Read more

முதலாளி பாலியல் தொல்லை அளிக்கிறார்.. பெண் செய்த விபரீத செயல்..!

முதலாளி பாலியல் தொல்லை கொடுப்பதாக பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம், பவானி பகுதியில் நவனீதன் என்பவருக்கு சொந்தமான துணிகடையில் அந்த பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் 11 ஆண்டுகளாகவேலை செய்து வந்தார். இந்நிலையில், அந்த பெண்ணுக்கு பல முறை பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், மருத்துவ செலவிற்கு பணம் கேட்டு அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது நவனீதனின் மனைவி மற்றும் சகோதரி ஆகியோர் அவரை தகாத வார்த்தைகளால்கூறி விரட்டியுள்ளனர்.  இந்நிலையில், … Read more

ஓய்வூதியர்களின் வீட்டுக்கே சென்று வாழ்நாள் சான்றிதழ் பெறும் சேவை: தமிழக அரசு – அஞ்சல் துறை இடையே ஒப்பந்தம்

சென்னை: அஞ்சல்துறை மூலம் ஓய்வூதியர்கள் இருப்பிடத்துக்கே சென்று வாழ்நாள் சான்றிதழை பெறுவதற்கான சேவை தொடர்பாக தமிழக அரசு மற்றும் இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இதுகுறித்து தமிழக அரசின் நிதித்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாநில அரசின் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியர்கள், தங்கள் வாழ்நாள் சான்றிதழை ஆண்டுதோறும் ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் சமர்ப்பிக்கின்றனர். தற்போது ​​ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் தங்கள் விருப்ப அடிப்படையில், ஓய்வூதியம் வழங்கும் அலுவலரிடம் நேரடியாகச் … Read more

காஷ்மீரில் தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் பள்ளி ஆசிரியை உயிரிழப்பு

ஸ்ரீநகர்: காஷ்மீர் காவல் துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர் நேற்று கூறும்போது, “குல்காம் மாவட்டம் கோபால்போரா பகுதியில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளிக்குள் நுழைந்த தீவிரவாதிகள் சிலர் அங்கிருந்த ஒரு ஆசிரியையை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் படுகாயமடைந்த ஆசிரியை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தீவிரவாதிகளை தேடி வருகிறோம்” என்றார். இத்துடன் மே மாதத்தில் மட்டும் 7 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். முன்னதாக, 3 போலீஸார் மற்றும் காஷ்மீர் பண்டிட் அரசு ஊழியர் … Read more

எரிபொருள் பற்றாக்குறைக்கு மத்தியில் இராணுவத்தின் எரிபொருள் விரயம்

இலங்கை ராணுவத்தின் முதற்தர அதிகாரிகள் இராணுவ நிதியில் இருந்து வருடமொன்றுக்கு 2,703,520 லீற்றர் எரிபொருளை வீண்விரயம் செய்வதாக தெரிய வந்துள்ளது. இலங்கைஇராணுவத்தில் முதற்தர அதிகாரிகள் அதாவது லெப்டிணன்ட் கேணல் தரம் தொடக்கம் இராணுவத் தளபதி வரையான பதவிநிலைகளில் தற்போதைக்கு ஆயிரத்து 108 பேர் கடமையாற்றுகின்றனர். கடந்த யுத்த காலம் தொட்டு இராணுவத்தின் முதற்தர பதவி நிலையில் உள்ளவர்களுக்கு தனிப்பட்ட பயன்பாட்டுக்கு என ஒரு வாகனம் வீதம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் மாதாந்த வாடகை சுமார் ஒரு லட்சமாகும். பெரும்பாலான … Read more