ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 பைக் படங்கள் வெளியானது

You might also like

ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள் நிறுவனத்தின் புதிய ஹண்டர் 350 பைக்கின் படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அண்டர் 350 மாடல் 350 சிசி இன்ஜினை பகிர்ந்து கொண்டு மிக சிறப்பான ஸ்டைலிங் அம்சங்களை பெற்றுள்ளது.

வரும் ஆகஸ்ட் 7ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட உள்ள ஹண்டர் 350 மாடல் ஆனது 350சிசி பிளாட்பார்மல் உருவாக்கப்பட்டுள்ள புதிய J பிளாட்பாரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் இந்த மாடலுக்கான வடிவமைப்பு பணிகளை ராயல் என்ஃபீல்டு நிறுவனம் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சித்தார்த் லால் குறிப்பிடுகையில், மிகச் சிறப்பான சேசிஸ் கொண்டு மேலும் பைக்கின் ரைடிங் தன்மை மிகவும் நேர்த்தியாகவும் அதே நேரத்தில் பல்வேறு மேம்பாடுகளை கொண்டதாகவும் அமைந்திருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மாடலின் சேஸ் அடிப்படையில் பல்வேறு மாற்றங்களை பெற்ற சேசானது கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோலவே royal enfield நிறுவனத்தின் வழக்கமான வட்ட வடிவத்திலான ஹெட்லைட் அமைப்பு மற்றும் பின்புறத்தில் இரட்டை ஷாக் அப்சார்பர் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ரோட்ஸ்டெர் அல்லது குரூஸர் பைக்குகளுக்கு உரித்தான அமைப்பு போன்ற வடிவமைப்பை தொடர்ந்து தக்க வைத்து கொண்டுள்ளது.

royal enfield hunter 350 logo

பெட்ரோல் டேங்கில் வழக்கமான ராயல் என்ஃபீல்டு லோகோ கொடுக்கப்பட்டு என்ஃபீல்ட் அல்லது Ride என்ற பெயரானது மிகப்பெரிய கிராபிக்ஸ் ஆக கொடுக்கப்பட்டுள்ளது இரட்டை பிரிவிலான இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர் ஆனது கொடுக்கப்பட்டுள்ளது மேலும் என்றால் புகைப்போக்கி சற்று மேல் எழும்பியதாக அமைந்திருக்கின்றது.

royal enfield hunter 350 bike

ஹண்டர் 350 புதிய தலைமுறை 350 மாடல்களில் இருந்து நன்கு அறியப்பட்ட 349சிசி ஜே-சீரிஸ் 20.2 பிஎச்பி மற்றும் 27 என்எம் டார்க்கை எஞ்சின் வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்ஜின் 5-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருக்கும், இது ஒரு டோ ஷிஃப்டரை மட்டுமே பெறும் என்பதை வெளிப்படுத்தும் படங்களுடன். ஹண்டர் கிளாசிக் 350 மாடலை விட 10 கிலோ எடை குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

royal enfield hunter 350 rear 1 royal enfield hunter 350 side

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.