கழிவுநீர் அகற்றுகின்ற நவீன வாகனத்தை அறிமுகப்படுத்திய உதயநிதி.! குவியும் பாராட்டு.!

கழிவுநீர் அகற்றுகின்ற பணியில் சக மனிதர்களை ஈடுபடுத்துவது மோசமான செயல் என்று பல ஆண்டுகளாக இது குறித்து பேசப்பட்டு வருகின்றது.

சமூக ஆர்வலர்கள் பலரும் ஒரு மனிதனை கழிவுகளை அகற்ற சொல்லி நியமிப்பது மோசமான செயல். இதற்காக நவீன கருவிகளை பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் அதிநவீன கழிவுநீரகற்றகின்ற வாகனம் தற்போது செயல்பாட்டிற்கு வந்துள்ளது. இதனை சென்னை கார்ப்பரேஷன் பணியாளர்களிடம் ஒப்படைத்த திமுக எம்எல்ஏ உதயநிதி இது குறித்து ஒரு ட்வீட் வெளியிட்டுள்ளார்.

அதில், ” திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, என் பெயரிலான அறக்கட்டளை வாயிலாக அதிநவீன கழிவுநீர் அகற்றும் வாகனம் வாங்க ரூ.45 லட்சத்தை குடிநீர் வழங்கல் வாரிய அதிகாரிகளிடம் வழங்கியிருந்தோம். இன்று அந்த நவீன இயந்திரத்தை @chennaicorp தூய்மைப் பணிகளுக்காக ஒப்படைத்தோம்.” என்று தெரிவித்துள்ளார். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.