சில்க் ஸ்மிதாவாக மாற நினைக்கும் டாப்ஸி: கண்டெய்னர் கண்டெய்னரா கவர்ச்சி காட்ட போறாங்களா?

மும்பை: இந்தியத் திரையுலகையே தனது கவர்ச்சியால் கிறங்கடித்தவர் நடிகை சில்க் ஸ்மிதா.

இவரது வாழ்க்கையை பின்னணியாகக் கொண்டு இந்தியில் உருவான ‘தி டர்ட்டி பிக்சர்’ படம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது.

‘தி டர்ட்டி பிக்சர்’ படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

கவர்ச்சி பதுமை

மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டாக வலம்வந்த சில்க் ஸ்மிதா, விணுசக்கரவர்த்தியால் ‘வண்டிச் சக்கரம்’ என்ற படத்தில் அறிமுகப்படுத்தப்பட்டார். கண்களில் வடிந்த மிதமிஞ்சிய வசீகரமும், கட்டுண்டு களமாடிக் கொண்டிருந்த தேக்குமர சாயல் கொண்ட அவரின் தேகமும், கவர்சிக்கு இயல்பாகிப் போனது. மெல்லிய இடையழகும் திரண்ட மேகக் கூட்டங்களுக்கு இணையான

ரசிகர்களின் மதுரசம்

ரசிகர்களின் மதுரசம்

தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி என இந்தியத் திரையுலகம் முழுவதும் தனது கவர்ச்சியின் எல்லையை விரித்துக் கொண்டே சென்றார் சில்க். கிறங்கடிக்கும் சில்க்கின் பார்வையும் கிளர்ச்சியூட்டும் அவரின் பேச்சும் ரசிகர்களின் உஷ்ணத்தை உலுக்கி எடுத்தது. இதனால், சில்க் ஸ்மிதாவின் கவர்ச்சி சேவை, ஒட்டுமொத்த திரையுலகிற்கும் அத்தியாவசியப் பொருளாகிப் போனது.

மர்மங்களுடன் மறைவு

மர்மங்களுடன் மறைவு

திரையுலகின் நிரந்தர கவர்ச்சிப் புயலாக சுழன்றடித்த சில்க் ஸ்மிதா, பல மர்மங்களுடன் இவ்வுலகை விட்டுப் பிரிந்தார். 1996ல் செப்டம்பர் 23ம் தேதி, தனது 35வது வயதில் வீட்டில் தற்கொலை செய்துகொண்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால், சில்க் ஸ்மிதா தற்கொலை செய்ததற்கான காரணங்கள் எதுவும் வெளிவரவே இல்லை. நடிப்புத் திறமை மிக்க சில்க் ஸ்மிதா, இறுதிவரை கவர்ச்சி நடிகையாக மட்டுமே அடையாளம் காணப்பட்டது துரதிர்ஷ்டம் என்றே சொல்லலாம்.

தி டர்ட்டி பிக்சர்

தி டர்ட்டி பிக்சர்

சில்க் சுமிதாவின் வாழ்க்கை வரலாறு, இந்தியில் ‘தி டர்ட்டி பிக்சர்’ என்ற பெயரில் படமாக வெளியானது. 2011ல் வெளியான இந்தப் படத்தை மிலன் இயக்கியிருந்தார், சில்க் ஸ்மிதா பாத்திரத்தில் வித்யாபாலன் நடித்திருந்தார். இந்தப் படத்தில் நடித்தற்காக, சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் அவர் பெற்றார். இந்நிலையில், ‘தி டர்ட்டி பிக்சர்’ படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகவுள்ளது. முதல் பாகத்தை எடுத்த ஏக்தா கபூர், 2ம் பாகத்தையும் தயாரிக்கிறார்.

டாப்ஸி கன்ஃபார்ம்

டாப்ஸி கன்ஃபார்ம்

இந்த 2ம் பாகத்தில் சில்க் ஸ்மிதாவின் இளம்வயது வாழ்க்கை சம்பவங்கள் இடம்பெறுவதால் வித்யாபாலன் நடிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. அதனால், சில்க் ஸ்மிதா கேரக்டருக்கு கங்கனா ரணாவத்தை நடிக்கை வைக்க படக்குழு அணுகியது. ஆனால், அவர் நடிக்க மறுத்துவிட்டதால், டாப்சியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதனையடுத்து அவரும் சம்மதம் தெரிவித்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இளம் வயது சில்க் ஸ்மிதா எனபதால், டாப்ஸியின் நடிப்பில் கவர்ச்சியும் தூக்கலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.