எலான் மஸ்க் இந்திய நண்பர் உடன் திடீர் சந்திப்பு.. போட்டோ பலே..!

எலான் மஸ்க் பல பிரச்சனைகளுக்கு மத்தியிலும் தனது குழந்தை தனத்தையும், பிரபலத்தையும் சரியான முறையில் கையாண்டு வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும். அமெரிக்க நீதிமன்றத்தில் டிவிட்டர் தொடுத்த வழக்கு அனல் பறக்கும் நிலையில் மஸ்க் தனது இந்திய நண்பரை திடீரென சந்தித்துள்ளார்.

உலகின் மிகப்பெரிய பணக்காரர் ஆக இருக்கும் எலான் மஸ்க் தனது தீவிர ரசிகரும், நீண்ட கால டிவிட்டர் நண்பருமான புனேவைச் சேர்ந்த 23 வயது இளைஞரான பிரனய் பத்தோல் பல வருடத்திற்குப் பின்பு இறுதியாகச் சந்தித்துள்ளனர்.

சீனா எடுத்த அதிரடி முடிவு.. இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்துக்கு எதிரான முடிவா இருக்கே.. சாதகமான விஷயமா?

பிரனய் பத்தோல்

பிரனய் பத்தோல்

ஆம், நீங்கள் படித்தது சரிதான். டெஸ்லா தலைவரின் நீண்ட கால ‘ட்விட்டர் நண்பராக இருப்பவர் தான் பிரனய் பத்தோல், சமீபத்தில் டெக்சாஸில் உள்ள ஜிகாஃபாக்டரியில், டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் சிஇஓ-வான் எலான் மஸ்க்-ஐ பிரனய் பத்தோல் சந்தித்துள்ளார். இந்தச் சந்திப்பில் எடுக்கப்பட்ட படத்தைப் டிவிட்டர் தளத்திலும் பகிரப்பட்டு உள்ளது.

எலான் மஸ்க்

எலான் மஸ்க்

பிரனய் பத்தோல் தற்போது டிசிஎஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். மேலும் இந்தச் சந்திப்பில் 51 வயதான எலான் மஸ்க் மிகவும் தன்னடக்கத்தோடு நடந்து, மேலும் பல கோடி மக்களுக்கு எலான் மஸ்க் இஸ்பிரேஷன் ஆகவும் இருக்கிறார் எனப் பிரனய் பத்தோல் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

2018 டிவிட்டர் பதிவு
 

2018 டிவிட்டர் பதிவு

பிரனய் பத்தோல் மற்றும் எலான் மஸ்க் 2018 முதல் டிவிட்டரில் நண்பர்களாக உள்ளனர். இவரும் நண்பர்களாக இருக்க முக்கியமான காரணம் ஒரு சின்ன டிவீட் தான். 2018ல் டெஸ்லா ஆட்டோமேட்டிங் windscreen wipers குறித்துப் போட்ட ஒரு டிவீட்டுக்கு சற்றும் எதிர்பார்க்காத வகையில் எலான் மஸ்க் ரிப்ளே செய்தார்.

1,80,000 பாலோவர்கள்

1,80,000 பாலோவர்கள்

பிரனய் பத்தோல் டிவிட்டர் யூசர்ஸ் மத்தியில் மிகவும் பிரபலம், இவருடை டிவிட்டர் ஹேண்டலை சுமார் 1,80,000 பேர் பின்பற்றுகின்றனர். மேலும் பிரனய் பத்தோல் அவ்வப்போது எலான் மஸ்க் உடன் டிவிட்டர் வாயிலாகப் பேசி வந்த நிலையில் தற்போது நேரில் சந்தித்துள்ளார்.

டிவிட்டர் வழக்கு

டிவிட்டர் வழக்கு

டிவிட்டர் வழக்கு சூடுபிடித்துள்ள வேளையில் எலான் மஸ்க் ஆகஸ்ட் 5 மற்றும் ஆகஸ்ட் 9 ஆம் தேதி ஆகிய இரு நாட்களில் சுமார் 6.88 பில்லியன் டாலர் மதிப்பிலான 7.92 மில்லியன் பங்குகளை விற்பனை செய்தார். இந்த விற்பனை மூலம் எலான் மஸ்க்-யிடம் தற்போது 155.04 மில்லியன் டெஸ்லா பங்குகள் மட்டுமே உள்ளது.

சொந்த விமான நிலையம்

சொந்த விமான நிலையம்

எலான் மஸ்க் டெக்சாஸ் பகுதியில் புதிதாகவும், தான் மட்டுமே பயன்படுத்தும் சொந்த விமான நிலையத்தைக் கட்ட திட்டமிட்டு வருவதாகச் சில நாட்கள் முன்பு தகவல் வெளியாகியுள்ளது. டெக்சாஸ் மாநிலத்தின் அஸ்டின் நகரின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள Bastrop-ல் இந்தப் புதிய விமான நிலையம் அமைக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Elon Musk finally meets Indian Twitter friend Pranay Pathole

Elon Musk finally meets Indian Twitter friend Pranay Pathole எலான் மஸ்க் இந்திய நண்பர் உடன் திடீர் சந்திப்பு.. போட்டோ பலே..!

Story first published: Monday, August 22, 2022, 19:36 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.