விவசாயிகளின் போராட்டத்துக்கு அதானிதான் காரணம்! பிரதமர் மோடியை நேரடியாக விமர்சித்த மேகாலயா கவர்னர்…

ஷில்லாங்: விவசாயிகளின் போராட்டத்துக்கு பிரதமர் மோடியின் நண்பர் அதானிதான் காரணம், அவருக்காகத்தான் பிரதமர் மோடி, விவசாய பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP – Minimum support price) வழங்கவில்லை என மேகாலய கவர்னர் சத்யபால் மாலிக் கடுமையாக குற்றம் சாட்டினார்.

தலைநகர் டெல்லியில் மீண்டும் விவசாயிகள் போராட்டம் தொடங்கி உள்ளது. பல மாநிலங்களில் இருந்து விவசாயிகள் டெல்லியில் உள்ள ஜந்தர்மந்தர் பகுதியில் கூடி வருகின்றனர். இதனால் டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிகரித்து வரும் விவசாயிகளின் கூட்டத்தைக்கண்டு டெல்லி மக்கள் அச்சம் தெரிவித்து உள்ளனர். மீண்டும் ஒரு நெருக்கடியான நிலைக்கு மக்கள் தள்ளப்படுவார்களோ என அச்சம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய, பாஜக மூத்த தலைவரும், மேகாலய மாநில ஆளுநருமான சத்யபால் மாலிக், விவசாயிகளின் இந்த போராட்டத்துக்கு பிரதமர் மோடியின் நண்பர் அதானிதான்  காரணம் என்றும், அவர்தான் விவசாய பொருட்களுக்கான குறைந்த பட்ச ஆதரவிலையை அறிவிக்க விடாமல் பிரதமரை தடுக்கிறார் என்றும் குற்றம் சாட்டி உள்ளார்.

மேகாலயா மாநில ஆளுநர் சத்ய பால் மாலிக், ஹரியானா மாநிலம் நூவில் உள்ள கிரா கிராமத்தில் நடைபெற்ற பசுக்கள் காப்பகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, மத்தியஅரசு விவசாய பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்எஸ்பி)  அமல்படுத்தப்படாவிட்டால் மற்றும் எம்எஸ்பிக்கு சட்ட உத்தரவாதம் வழங்கப்படாவிட்டால், மீண்டும் ஒரு போராட்டம் நடக்கும்,  இந்த முறை அது கடுமையான போராட்டமாக இருக்கும் என்று எச்சரித்தார்.

இந்த நாட்டின் விவசாயியை உங்களால் தோற்கடிக்க முடியாது என பிரதமரி கடுமையாக விமர்சித்த மாலிக்,  நீங்கள் அவரை பயமுறுத்த முடியாது  என்றும், நீங்கள் ED அல்லது வருமான வரி அதிகாரிகளை  அவர்களுக்கு எதிராக அனுப்ப முடியாது என்பதால், விவசாயியை எப்படி பயமுறுத்துவீர்கள்? என கேள்வி எழுப்பியவர்,  பிரதமருக்கு அதானி என்ற நண்பர் இருப்பதால், அவர், ஐந்து ஆண்டுகளில் ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரராக மாறியுள்ளதால், அவருக்கு ஆதரவாக MSP செயல்படுத்தப்படவில்லை,” என்று நேரடியாக குற்றம் சாட்டினார்.

மேலும்,  அதானி நிறுவனம் பானிபட்டில், பெரிய கிடங்கு கட்டி வைத்துள்ளதாகவும், அங்க குறைந்த விலையில் கோதுமையை வாங்கி  குவித்து வைத்துள்ளதாக  குற்றம் சாட்டியவர், நாட்டில் பணவீக்கம் இருக்கும்போது, ​​அவர் அந்த கோதுமையை விற்பார்.  அதனால் இந்த பிரதமரின் நண்பர்கள் லாபம் சம்பாதிப்பார்கள், விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். இதை பொறுத்துக்கொள்ள முடியாது, இதற்கு எதிராக போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு கவர்னர் மாலிக் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.