மதுரை மண்டல கலை, அறிவியல் கல்லூரிகளில் கலந்தாய்வு தொடக்கம்: 14,430 இடங்களுக்கு 73,260 பேர் போட்டி

மதுரை: மதுரை மண்டலத்திலுள்ள மதுரை மண்டலத்திலுள்ள மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் 29 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளிலுள்ள 14,430 இடங்களுக்கு 73,260 பேர் போட்டி ஓரிரு நாளில் சேர்க்கை கலந்தாய்வு தொடங்குகிறது. சமீப ஆண்டுகளாக பொறியியல் போன்ற படிப்புக்கு ஆர்வம் குறைந்து, கலை அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவ, மாணவிகள் அதிக ஆர்வம் காட்டுவதால் ஒவ்வொரு ஆண்டும், இக்கல்லூரி களுக்கு கூடுதல் விண்ணப்பங்கள் வருகின்றன. குறிப்பாக குறைந்த கட்டணத்தை கருத்தில்கொண்டு … Read more

தமிழ்நாட்டில் இன்று 1359 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 309 பேருக்கு பாதிப்பு…

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 1359 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 309, செங்கல்பட்டில் 136, திருவள்ளூரில் 46 மற்றும் காஞ்சிபுரத்தில் 38 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்திருக்கிறது. கோவை 142, திருநெல்வேலி 30, தூத்துக்குடி 23, சேலம் 61, கன்னியாகுமரி 26, திருச்சி 27, விழுப்புரம் 31, ஈரோடு 72, ராணிப்பேட்டை 36, தென்காசி 18, மதுரை 24, திருவண்ணாமலை 15, விருதுநகர் 40, கடலூர் 22, தஞ்சாவூர் 16, திருப்பூர் 26, … Read more

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் உடற்கூறாய்வு அறிக்கை ஒப்படைப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் 2 உடற்கூறாய்வு அறிக்கைகளும் ஜிப்மர் மருத்துவக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவுப்படி 2 உடற்கூறாய்வு அறிக்கைகளையும் சிபிசிஐடி போலீசார் ஜிப்மர் குழுவிடம் ஒப்படைத்தனர்.

இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளது: நிர்மலா சீதாராமன்

டெல்லி: பெரும்பாலான நாடுகளை காட்டிலும் இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளது என நிர்மல சீதாராமன் அறிவித்துள்ளார். விலைவாசி உயர்வு குறித்து மக்களவை விவாதத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் கூறியுள்ளார். உலகிலேயே அதிக வேகத்துடன் இந்திய பொருளாதாரம் வளர்ந்து வருவதாக நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.

”தாழ்வான மின்கம்பிகளை சரி செய்யாததால் மாதம் ஒரு யானை பலி ஆகிறது” – நீதிபதிகள் வேதனை

தமிழக வனப்பகுதிகளில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சரி செய்ய எடுத்த நடவடிக்கை குறித்து செப்டம்பர் 9ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக நிர்வாக இயக்குனர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகும்படி உத்தரவிட நேரிடும் என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. வனப்பாதுகாப்பு தொடர்பான வழக்குகள் நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, தேனி மாவட்டம், மேகமலை வனப்பகுதியில் தாழ்வாக செல்லும் … Read more

5ஜி ஏலம்: எதிர்பார்த்தது 4.3 லட்சம் கோடி! கிடைத்ததோ 1.5 லட்சம் கோடிதான்! முழு விபரம் இதோ!

5ஜி அலைக்கற்றை ஏலம் சுமார் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய்க்கு விடப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக நீடித்த 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் ஜியோ தொலை தொடர்பு நிறுவனம் முன்னணியில் உள்ளது. அதிரடியான துவக்கம்; ஆனால் அடுத்தடுத்து மந்தம்! தங்கு தடையின்றி அதிவேகத்தில் இணைய தொடர்புகளை மேற்கொள்வதற்கான 5ஜி அலைக்கற்றை ஏலம் கடந்த வாரம் தொடங்கியது. முதல் நாள் அன்றே ஒரு லட்சத்து 45 ஆயிரம் கோடி ரூபாய்க்கு அலைக்கற்றை ஏலம் எடுக்கப்பட்ட நிலையில், … Read more

ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவ் மகள் தற்கொலை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஐதராபாத்: ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேச கட்சியின் நிறுவனருமான என்.டி.ராமாராவின் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், ஒன்றுபட்ட ஆந்திராவின் முன்னாள் முதல்வருமான என்.டி.ராமாராவ்-ன் மகள் உமா மகேஸ்வரி. இவர் தற்போதைய தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள தனது வீட்டில் இன்று (ஆக.,1) தூக்கில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார்.உமா மகேஸ்வரி கடந்த சில நாட்களாகவே உடல் நலக்குறைவால் … Read more

இரண்டாம் முறையும் மலையாளத்தில் வெற்றியை ருசிக்காத விஜய்சேதுபதி

தமிழில் முன்னணி நடிகராக வலம் வந்தாலும் தமிழில் மட்டுமே தன்னை சுருக்கிக் கொள்ள விரும்பாத விஜய்சேதுபதி, தெலுங்கு, மலையாளம், இந்தி என பான் இந்தியா நடிகராகவே மாறிவிட்டார். இந்தியில் இனிமேல் தான் அவரது படங்கள் ரிலீஸ் ஆக இருக்கின்றன. அதே சமயம் தெலுங்கில் உப்பென்னா என்கிற படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடித்திருந்தார். அந்த படம் வெற்றி பெற்றதுடன் விஜய்சேதுபதி நடிப்புக்கும் நல்ல பெயர் கிடைத்தது. அதேபோல மலையாளத்திலும் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு மார்க்கோனி மத்தாய் என்கிற … Read more

கேரளாவில் மின்னல் வேகத்தில் பரவும் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல்

கன்னூர், கேரளா மாநிலத்தில் வயநாட்டைத் தொடர்ந்து கன்னூர் மாவட்டத்திலும் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னூர் மாவட்டம் கனிச்சார் ஊராட்சிக்குட்பட்ட பன்றி பண்ணையில் இந்நோய் கண்டறியப்பட்டதையடுத்து இதுவரை இந்த பண்ணையில் பாதிக்கப்பட்ட 14 பன்றிகள் உயிரிழந்துள்ளன. இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் இதுகுறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் காரணமாக கேரளாவில் பன்றி இறைச்சி விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கேரளாவுக்கு பன்றிகள் கொண்டு வரவும் வெளியே கொண்டு … Read more

காமன்வெல்த் ஜூடோ போட்டி : இந்தியாவின் சுசிகா தாரியல், ஜஸ்லீன் சிங் காலிறுதிக்கு தகுதி

பர்மிங்காம், 72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்தியா இதுவரை மூன்று தங்கம், இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 6 பதக்கங்களை வென்றுள்ளது. 4-வது நாளான இன்று பல்வேறு விளையாட்டுகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். இன்று லான் பவுல்ஸ் போட்டியில் இந்திய மகளிர் அணி முதல் முறையாக இறுதி போட்டிக்குள் நுழைந்து பதக்கத்தை உறுதி செய்து வரலாறு … Read more