சென்னை: வீட்டு உபயோகப் பொருட்கள் வைத்திருந்த குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

வானகரம் அருகே செயல்பட்டு வரும் குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் கோடிக்கணக்கான மதிப்புடைய பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. சென்னை மதுரவாயல் அடுத்த வானகரம் சிவபூதபேடு பகுதியில் செயல்பட்டு வந்த வீட்டு உபயோகப் பொருட்கள் சேகரித்து வைக்க கூடிய குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ மளமளவென எரிந்து அருகே உள்ள ஆயில் குடோன் கார் உதிர pபாகங்கள் சேகரிக்கும் குடோன் டைல்ஸ் குடோன் என 5-க்கும் மேற்பட்ட குடோனில் பரவியதால் அப்பகுதி … Read more

தீபாவளி பட்டாசு கடைகள் வைக்க 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்| Dinamalar

புதுச்சேரி : ‘ தீபாவளி பண்டிகைக்கு தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க விரும்புவோர், இம்மாதம் 31ம் தேதிக்குள் ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம்’ என கலெக்டர் வல்லவன் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:தீபாவளி பண்டிகையையொட்டி புதுச்சேரி பகுதியில் தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க விரும்புபவர்கள், ஆக. 17ம் தேதி முதல் 31ம் தேதி வரை https://puducherry-dt.gov.inஎன்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.பட்டாசு விற்பனை செய்யப் போகும் இடத்தின் வரைபடம், இடத்தின் உரிமை தொடர்பான பத்திரங்கள், ஆதார், வாக்காளர் அட்டை, புகைப்படத்துடன் … Read more

காபூல் மசூதியில் குண்டுவெடிப்பு30 பேர் உடல் சிதறி பலி| Dinamalar

காபூல்:ஆப்கானிஸ்தான் மசூதியில் குண்டு வெடித்து 30க்கும் மேற்பட்டோர் உடல் சிதறி உயிரிழந்தனர். தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மசூதியில் நேற்று வழக்கமான தொழுகை நடந்து கொண்டிருந்தது. அப்போது மசூதிக்குள் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில், 30க்கும் மேற்பட்டோர் உடல் சிதறி உயிரிழந்தனர். ஏராளமானோர் காயமடைந்தனர். உடனடியாக, ராணுவ வீரர்கள் அங்கு குவிக்கப்பட்டனர். காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு … Read more

Thiruchitrambalam Twitter Review: தனுஷின் திருச்சிற்றம்பலம் தாறுமாறா? தடுமாற்றமா?

சென்னை: நடிகர் தனுஷின் திருச்சிற்றம்பலம் இன்று வெளியாகி உள்ள நிலையில், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ரசிகர்கள் படம் எப்படி இருக்கு என்கிற கருத்துக்களையும் விமர்சனங்களையும் முன் வைத்து வருகின்றனர். வெளிநாடுகளில் முன்பாகவே படம் வெளியான நிலையில், ட்விட்டர் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. இயக்குநர் மித்ரன் ஜவகர் இயக்கத்தில் தனுஷ், நித்யா மேனன், ராஷி கன்னா, பிரியா பவானி சங்கர், பாரதிராஜா மற்றும் பிரகாஷ் ராஜ் நடித்துள்ள திருச்சிற்றம்பலம் தாறுமாறா? அல்லது தடுமாற்றமா? என்பது குறித்து இங்கே … Read more

அனைத்து வகை மொபைல்களுக்கும் இனி ஒரே சார்ஜர்… தொழிலதிபர்கள் கூட்டத்தில் ஆலோசனை!

நாம் பயன்படுத்தும் பல மொபைல்களுக்கு ஒரே சார்ஜர் பயன்படுத்தப்பட்டாலும் ஒரு சில மாடல்களுக்கு சில சார்ஜர் உபயோகப்படாது. ஒருசில குறிப்பிட்ட மாடல்கள் மொபைல் போன்களுக்கு தனித்தன்மையாக சார்ஜர் இருந்து வருவதால் பொதுமக்கள் சிரமத்துடன் உள்ளனர். ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் மொபைல் போனை விற்றுவிட்டு வேறு மொபைல் போன் வாங்கினால் புதிதாக சார்ஜர் வாங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனை அடுத்து அனைத்து மொபைல்களுக்கும் ஒரே வகையான சார்ஜரை பயன்படுத்தும் வகையில் தொழில்நுட்பத்தை ஏற்படுத்த வேண்டும் என மத்திய … Read more

Tamil News Live Update: ஈரோடு சிறுமி கருமுட்டை விற்பனை வழக்கு.. 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

Go to Live Updates Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது. Tamil News Latest Updates இபிஎஸ் தேர்வு செல்லாது.. நீதிமன்றம் தீர்ப்பு சென்னையில் ஜூலை 11-ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக் குழு கூட்டம் செல்லாது, அதிமுகவில் ஜூன் 23-க்கு முன் இருந்த நிலையே … Read more

முன்னாள் வன்னியர் சங்க நகர செயலாளர் வெட்டிக் கொலை.. 12பேர் கொண்ட கும்பலுக்கு வலை.!

மயிலாடுதுறையில் முன்னாள் வன்னியர் சங்க நகர செயலாளரை வெட்டிக் கொலை செய்த 12பேர் கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கொத்த தெருவைச் சேர்ந்த கண்ணன் மற்றும் கதிரவன் இடையே கடந்த ஆண்டு ஓட்டலில் சாப்பிட்ட போது தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கதிரவனை தாக்கியது தொடர்பாக கைதான கண்ணன் பின்னர் குண்டர் சட்டத்தில் கைதாகி கடந்த 15நாட்களுக்கு முன்பு வெளியில் வந்துள்ளார். இந்நிலையில் தனது நண்பர்களுடன் இரு சக்கர வாகனத்தில் கடைக்கு சென்று விட்டு வீடு திரும்பும் போது … Read more

போலி, முறைகேடு பத்திரப்பதிவுகளை பதிவாளர்கள் ரத்து செய்யும் நடைமுறை அமல் – 12 ஆயிரம் புகார் மனுக்கள் குவிந்தன

சென்னை: தமிழகத்தில் போலி மற்றும் மோசடி பத்திரப்பதிவுகளை பதிவாளர்களே ரத்துசெய்யும் சட்டத்திருத்தத்துக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்ததால் சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில், பத்திரப்பதிவு அலுவலகத்தில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகார் மனுக்கள் குவிந்துள்ளன. தமிழகத்தில் மோசடி, போலி, பத்திரப்பதிவுகளை தடுக்கும் வகையில், கடந்தாண்டு சட்டப்பேரவையில் மத்திய பதிவுச் சட்டத்தில் தமிழக அளவில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதன்மூலம், போலி பதிவுகள் குறித்து பதிவாளரே ஆய்வு செய்து, அவற்றை ரத்து செய்ய முடியும். இந்த மசோதா அறிமுகம் செய்யப்பட்ட அன்றே … Read more