நீட் தேர்வு முடிவுகள் செப்டம்பர் 7ந்தேதி வெளியாகிறது! அதிகாரப்பூர்வ அறிவிப்பு…

டெல்லி: இளநிலை மருத்துவ படிப்புகான நீட் தேர்வு முடிவுகள் செப்டம்பர் 7ந்தேதி வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. இளநிலை, முதுநிலை  மருத்துவப் படிப்புகளில் சேர தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் (நீட்) கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வுகள் தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு, மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு  வருகிறது. அதன்படி, நடப்பாண்டுக்கான இளங்கலை மருத்துவ படிப்புக்கான (எம்பிபிஎஸ்)  நீட் தேர்வு ஜூலை 17ல் … Read more

தி.மலையில் கிராம மக்களை ஏமாற்றி பணம், நகை மோசடி: 4 பெண்களை கைது செய்யக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் புகார்

தி.மலை: திருவண்ணாமலையில் 10க்கும் மேற்பட்ட கிராம மக்களிடம் பல கோடி ரூபாய் பணம் மற்றும் தங்க நகைகளை கடனாக பெற்று ஏமாற்றி வந்த 4 பெண்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தை முற்றுகையிட்டனர். திருவண்ணாமலையை அடுத்த மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த 4 பெண்கள் 100-க்கும் மேற்பட்டோரிடம் இருந்து தங்களுக்கு வங்கியில் இருந்து ரூ.40 கோடிக்கு மேல் பணம் வர வேண்டி உள்ளதாக கூறி பொதுமக்களிடம் கைவரிசை காட்டியுள்ளனர். தங்களுக்கு பணம் மற்றும் நகைகளை … Read more

ராஜபாளையம் அருகே 100க்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியல்

விருதுநகர்: ராஜபாளையம் அருகே கீழராஜ குலராமன் பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், ஊராட்சியில் ஆழ்துளை கிணறு அமைத்து மற்றொரு கிராமத்திற்க்கு தண்ணீர் கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்து மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

இலவசங்கள் தொடர்பான வழக்கில் விரிவான விசாரணை தேவை என்பதால் வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி என்.வி.ரமணா உத்தரவு

டெல்லி: இலவசங்கள் தொடர்பான வழக்கில் விரிவான விசாரணை தேவை என்பதால் வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி தலைமை நீதிபதி என்.வி.ரமணா உத்தரவிட்டுள்ளார். தேர்தல் நேரத்தில் அரசியல்கட்சிகள் இலவச வாக்குறுதிகள் அறிவிப்பதை எதிர்க்கும் பிரச்சனையை ஆராய நிபுணர் குழு அமைக்கலாம் என தலைமை நீதிபதி என்.வி.ரமணா கூறியுள்ளார்.

'நினைவாலே சிலை செய்து உங்களுக்காக வைத்தேன்' – தாய்க்கு சிலை வைத்த தனயன்

தாய் மீது இருந்த பாசத்தால் உயிரிழந்த தாயின் நினைவாக வீட்டின் முன்பாக கொத்தனார் மகன் சிலை வைத்துள்ளார். குமரி மாவட்டம் அடயாமடை பகுதியைச் சேர்ந்தவர்கள் சோமன் – கனகபாய் தம்பதியர். இவர்களுக்கு இரண்டு மகன்கள்; உள்ள நிலையில், மூத்த மகன் திருமணமாகி தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில், தம்பதியர் இருவரும் இவர்களது இளைய மகன் மத்தேயுவுடன் வசித்து வந்தனர். இந்த நிலையில் மத்தேயு, நோய் பாதிப்பு ஏற்பட்டு அவதிப்பட்டு வந்த தனது தாய் தந்தையை பேணி காத்து … Read more

கொடூரம்! எங்க பார்த்தாலும் நீங்கதான் இருக்கீங்க.. அமெரிக்காவில் இந்திய பெண்கள் மீது இனவெறி தாக்குதல்

International oi-Jackson Singh டெக்சாஸ்: அமெரிக்காவில் இந்தியப் பெண்கள் மீது நேற்று நடத்தப்பட்ட பயங்கர இனவெறி தாக்குதல் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக மேலைநாடுகளில், குறிப்பாக அமெரிக்காவில் அவ்வப்போது இனவெறி தாக்குதல்களும், மோதல்களும் நடைபெறுவது வழக்கம். கறுப்பினத்தவர்கள், இந்தியர்கள், ஜெர்மானியர்கள், சீனர்கள், ஜப்பானியர்கள் உள்ளிட்டோர் மீது இந்த இனவெறி தாக்குதல்கள் அதிக அளவில் நடைபெறுகின்றன. இதில் பல நேரங்களில் பெரும் உயிரிழப்புகளும் ஏற்பட்டிருக்கின்றன. அமெரிக்காவுக்கு வரும் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்கள் தங்கள் வேலைவாய்ப்புகளை பறித்துக் கொள்கின்றனர் … Read more

முதல்முறையாக அவரது விசாரணை நேரலையில் ஒளிபரப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா இன்றுடன் (ஆக.,26) ஓய்வு பெற உள்ளார். அதனையடுத்து உச்சநீதிமன்றத்தில் முதல் முறையாக அவரது அமர்வு விசாரணை இன்று நேரலையாக ஒளிப்பரப்பட்டது. ஆந்திராவை சேர்ந்த என்.வி.ரமணா, 1983ல் ஆந்திர உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியை துவக்கினார். அதன்பிறகு 2013ல் டில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட அவர், 2014ம் ஆண்டு பிப்ரவரி 14ல் உச்சநீதிமன்ற நீதிபதியானார். பின்னர் கடந்த ஆண்டும் ஏப்ரல் 6ம் தேதி நாட்டின் … Read more

சூர்யா படத்தை விடாது துரத்தும் வழக்கு

சூர்யா தயாரித்து, நடித்த படம் ஜெய்பீம். த.செ.ஞானவேல் இயக்கி இருந்தார். இது போலீஸ் காவலில் கொல்லப்பட்ட ஒரு இருளர் இளைஞனின் நிஜகதை. இந்த படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று விருதுகளை குவித்தாலும் வழக்குகளும் விடாது துரத்துகிறது. ஒவ்வொரு வழக்கில் இருந்து மீண்டு வந்தாலும் அடுத்தடுத்து வழக்குகள் தொடரப்பட்டு வருகிறது. தற்போது காப்புரிமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. படத்தில் வரும் கதாபாத்திரங்கள் உண்மையில் வாழ்ந்தவர்கள், அதில் ராஜாக்கண்ணுவின் சகோதரி மகனுமான கொளஞ்சியப்பன் என்பவரும் ஒருவர். … Read more

மொக்கை ஜோக் அதிதி ஷங்கர்.. போற இடங்களில் எல்லாம் இப்படி பண்ணா எப்படிம்மா.. கலாய்க்கும் ரசிகர்கள்!

சென்னை: இயக்குநர் ஷங்கர் மகள் அதிதி ஷங்கர் செல்லும் இடங்களில் எல்லாம் மொக்கை ஜோக் அடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். Rajkiran | Muthaiah முக்கியமான கருத்து சொல்லியிருக்கார் | Viruman Press Meet | *Kollywood அவரது வீடியோவை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் ஷேர் செய்ய அதற்கு பலவிதமான கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன. விருமன் படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமான அதிதி ஷங்கர் அடுத்ததாக சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார். … Read more

அடடே இது நல்ல விஷயமாச்சே.. தங்கம் விலையில் தடுமாற்றம்.. இன்று எப்படியிருக்கு தெரியுமா?

தங்கம் விலையானது பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று, சற்று தடுமாற்றத்தில் காணப்படுகிறது. இது அமெரிக்க டாலரின் மதிப்பானது மீண்டும் வலுவடைய தொடங்கியுள்ள நிலையில், பாதுகாப்பு புகலிடமான தங்கம் விலையானது அழுத்தத்தில் காணப்படுகின்றது. இது இன்னும் சரிவினைக் காணுமா? அல்லது வழக்கம்போல மீண்டும் ஏற்றம் காணுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இன்று ஹாக்சன் ஹோல் சிம்போசியத்தில் நடக்கும் கூட்டத்தில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்புகள் நிலவி வருகின்றது. கோதுமை மாவு ஏற்றுமதிக்கு … Read more