“ஒருவரை குற்றவாளி ஆக்கவும் முடியும்… எடுக்கவும் முடியும்”- டிஎஸ்பி குறித்து கே.என் நேரு சர்ச்சை

அமைச்சர் கே.என்.நேருவுக்கு இது போதாத காலம் போல. எதைப் பேசினாலும் சர்ச்சையாகிக் கொண்டே இருக்கிறது. சமீபத்தில் சென்னை மேயர் பிரியாவை ஒருமையில் பேசியதாக வெளியான வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் அதற்கு விளக்கமும் அளிக்கப்பட்டது. அந்த பரபரப்பு அடங்குவதற்குள்ளாகவே, திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கே.என்.நேரு பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நிகழ்ச்சியில் கே.என்.நேரு திருச்சியைச் சேர்ந்த என்.ஆர் ஐ.ஏ.எஸ் அகாடமியில் படித்து வெற்றி பெற்றவர்களுக்கான பாராட்டு விழா சமீபத்தில் திருச்சி பிராட்டியூரில் நடைபெற்றது. இந்த … Read more

அதிமுக அலுவலக மோதல் தொடர்பான 4 வழக்குகள் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

அதிமுக அலுவலகத்தில் நடந்த மோதல் தொடர்பான 4 வழக்குகளும் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த ஜூலை 11-ம் தேதி ஓபிஎஸ் – இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, அதிமுக அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது. பின்னர், உயர் நீதிமன்ற உத்தரவின்பேரில், சீல் அகற்றப்பட்டு இபிஎஸ் வசம் அலுவலக சாவி ஒப்படைக்கப்பட்டது. இதன் பிறகு, மோதல் சம்பவம் தொடர்பாக அதிமுக … Read more

உச்ச நீதிமன்ற விசாரணைகள் நேரலையில் ஒளிபரப்பு

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற வரலாற்றில் முதன்முறையாக விசாரணைகள், தீர்ப்புகள் நேரலையில் ஒளிபரப்பப்படவுள்ளன. சுமார் 20 வழக்குகளின் விசாரணையும், தீர்ப்பும் நேரலையில் ஒளிபரப்பப்படவுள்ளன. லைவ் ஸ்ட்ரீமிங் முறையில் நேஷனல் இன்ஃபமேட்டிக்ஸ் மையத்தின் வெப்காஸ்ட் போர்டல் வாயிலாக காலை 10.30 மணிக்கு நேரலை தொடங்குகிறது. தேர்தல் இலவசங்கள் குறித்த வழக்கின் மீதான உத்தரவு இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இந்தத் தீர்ப்பு இன்று நேரலையில் வெளியாகிறது. உச்ச நீதிமன்றத்தின் 48வது நீதிபதியான என்வி ரமணாவின் பணிக்காலத்தின் கடைசி நாள் இன்று. ஓய்வு … Read more

எப்படி அரசியல் பண்ணுவது யோசிப்பது நான் இல்ல: பாஜக தலைவர் அண்ணாமலை பதற்றம்

சென்னை: இதை எப்படி அரசியல் பண்ணுவது யோசித்துக் கொண்டிருக்கிறேன்…” என்று பாஜக தலைவர் அண்ணாமலை பேசுவது போன்ற ஆடியோ வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது. மதுரையில் உயிரிழந்த இராணுவ வீரர் இலட்சுமணன் உடலுக்கு  அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அஞ்சலி செலுத்த சென்றிருந்தார். அப்போது அங்கு கூடியிருந்த பா.ஜ.க.வினரோடு ஏற்பட்ட வாக்குவாதத்தின் காரணமாக அவரின் கார் மீது காலணி வீசப்பட்டது. இதைத்தொடர்ந்து இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக 3 பெண்கள் உட்பட 5க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக கடந்த சட்டமன்ற … Read more

தலைமைநீதிபதி ரமணா ஓய்வுபெறுவதை முன்னிட்டு, இன்று உச்சநீதிமன்ற வழக்கு விசாரணை நேரடி ஒளிபரப்பு…

டெல்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா இன்று ஓய்வுபெறுவதை முன்னிட்டு, உச்சநீதிமன்ற விசாரணை இன்று முதன்முறையாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா இன்றுடன் ஓய்வு பெறுகிறார். இதையொட்டி உச்சநீதிமன்ற வழக்கு விசாரணை இன்று காலை 10.30 மணி முதல் இணையதளத்தில் நேரலையாக ஒளிபரப்பப்படுகிறது. www.webcast.gov.in/events/MTc5Mg என்கிற இணையதளத்தில் இன்று காலை 10.30 மணி முதல் நேரலையாக ஒளிபரப்பப்படும் வழக்கு விசாரணையை பொது மக்கள் காணலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. … Read more

திருச்சி அருகே பள்ளி வேன், பள்ளி பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து

திருச்சி: திருச்சி, ஶ்ரீரங்கம் அருகே பள்ளி வேன், பள்ளி பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் காயமடைந்த 3 மாணவர்கள் உட்பட 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருத்தணியில் லஞ்சம் வாங்கிய வருவாய்துறை ஆய்வாளர் கைது

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் இறப்பு சான்றிதழ் வழங்க ரூ.2,000 லஞ்சம் வாங்கிய வருவாய்துறை ஆய்வாளர் ஜெயலட்சுமி கைது செய்யப்பட்டுள்ளார். வினோத்குமார் என்பவர் அளித்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

அசாமில் 10ம் வகுப்பு தேர்வில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறாத 34 பள்ளிகளை மூட அம்மாநில கல்வித்துறை முடிவு..!!

திஸ்பூர்: அசாமில் 10ம் வகுப்பு தேர்வில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறாத 34 பள்ளிகளை மூட அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது. அரசின் நடவடிக்கைக்கு அசாம் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அசாம் மாநிலத்தில் கடந்த மாதம் வெளியான 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளில் 56.49 சதவிகிதம் பேர் தேர்ச்சி அடைந்திருந்தனர். இந்த தேர்வில் 34 அரசு பள்ளிகளில் இருந்து தேர்வு எழுதிய 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் அனைவரும் தோல்வி அடைந்தனர். இந்த 34 பள்ளிகளையும் மூட … Read more

செப்., 7ல் நீட் தேர்வு முடிவு வெளியீடு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: நீட் இளநிலை மருத்துவ நுழைவுத்தேர்வு வரும் 7 ம் தேதி வெளியாக உள்ளது. பிளஸ் 2 முடித்த மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., – பி.டி.எஸ்., – ஆயுஷ் படிப்புகள் போன்றவற்றில் சேர, நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி அவசியம். இந்த ஆண்டுக்கான மருத்துவ படிப்பு சேர்க்கைக்கு, நீட் நுழைவு தேர்வு, ஜூலை 17 ல் நாடு முழுதும், 3,500 மையங்களில் நடந்தது. தமிழகத்தில் 18 நகரங்களில் நடந்தது.நாடு முழுதும், 10.64 … Read more