அது கலைஞர் பாணி… இது என் பாணி… ஸ்டாலின் பஞ்ச்!

ஈரோடு மாவட்டம் கோபியை அடுத்த கள்ளிப்பட்டியில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை இன்று திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இதனையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் அவர் ஆற்றிய உரை: ஈரோடு மாவட்டத்தில் கருணாநிதியின் மூன்றாவது சிலையை நான் இப்போது திறந்து வைத்துள்ளேன். இதே ஈரோட்டில் மூன்று அல்ல, 300 சிலைகளைக் கூட வைக்கலாம். அந்த அளவுக்கு கருணாநிதியின் ஊனோடும், உயிரோடும் ஈரோடு கலந்து இருக்கிறது. பெரியார் பிறந்த இடம் மட்டுமல்லாது, கருணாநிதி சமூகபோராளியாக உருவான இடம் ஈரோடு. … Read more

பயங்கரவாதிகளுடன் நாங்கள் சமரசம் செய்ய மாட்டோம்…- உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி..!

ரஷ்யா உக்ரைன் நாடுகளுக்கிடையே ஏற்பட்ட போரில் பலர் தங்கள் வீடுகளையும் உடமைகளையும் இழந்தனர். அதற்கும் மேலாக பலர் போரில் உயிரிழந்தனர். இது உலக அரங்கில் பெரும் அச்சத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. இது மற்ற உலக நாடுகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த இரு நாடுகளுக்கிடையே சமாதான பேசுவர்தையை சில நாடுகள் முன்னெடுத்தன. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கி 6 மாதங்களாகி விட்ட நிலையில் உக்ரைன் தனது சுதந்திர தினத்தை நேற்று கொண்டாடியுள்ளது.சோவியத் யூனியனின் ஒரு அங்கமாக … Read more

இறுதி முடிவு ரணிலின் கையில்! காத்திருக்கும் மகிந்த தரப்பு

புதிய அமைச்சரவை நியமனத்தின்போது ஒவ்வொரு கட்சிகளினதும் உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கேற்ப உரிய இடம் வழங்கப்படும். இதில் ஜனாதிபதி உறுதியாக இருக்கின்றார் என்று பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார். அமைச்சரவையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு அதிகளவு அமைச்சுப் பதவிகள் வழங்கவேண்டும் என்று அந்தக் கட்சியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் தெரிவித்திருந்த நிலையில், அது தொடர்பில் ஊடகங்கள் கேள்வி எழுப்பியபோதே பிரதமர் மேற்கண்டவாறு பதிலளித்தார். ரணிலிடம் கோரிக்கை  “புதிய அமைச்சரவையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு உரிய இடம் வழங்கப்பட … Read more

காங்கிரஸ் தலைவராகிறாரா அசோக் கெலாட்?

2024 நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க அனைத்துக் கட்சிகளும் இப்போதிலிருந்தே தயாராகி வருகின்றன. பாஜக தங்களுக்கான வியூகங்களை வகுத்து வரும் நிலையில், எதிர்க்கட்சிகளும் மறுபுறத்தில் தயாராகி வருகின்றன. முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு தலைவர் இல்லாமல் இருப்பது அக்கட்சிக்குப் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும் பின்னடைவை சந்தித்ததை அடுத்து, ராகுல்காந்தி காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து விலகினார். அதன் பின்னர் சோனியா காந்தி காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராகச் செயல்பட்டு … Read more

வீடு தேடி பெண்களுக்கு வேலை வாய்ப்பு… முன்னேற்றத்திற்கான முன்னெடுப்பு

‘மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை’ என்ற வள்ளுவரின் குறளுக்கேற்ப, பெண்கள் தங்களின் சொந்த உழைப்பால் முன்னேறுவதே அவர்களின் சமூக, பொருளாதார மாற்றங்களை ஏற்படுத்தும். அந்த வகையில், சேலத்தில் அமைந்துள்ள சாரதி எஃகோ பேக்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் பெண்கள் தங்களை பொருளாதாரத்தில் முன்னேற்றிக்கொள்ள சுயதிறன் வேலை வாய்ப்புகளை அளித்து வருகின்றனர்.  சேலத்தை சேர்ந்த தொழிலதிபர், அரசியவாதி ஆர். பார்த்தசாரதி என்பவர் நடத்திவரும் சாரதி எஃகோ பேக்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம், பெண்களுக்கான பொருளாதார சுயமேம்பாடு வேலைத்திட்டத்தை நடத்தி … Read more

ஈரோடு மாவட்டம் கள்ளிப்பட்டியில் கலைஞர் சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

ஈரோடு: ஈரோடு மாவட்டம் கள்ளிப்பட்டியில் கலைஞர் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். திமுக சார்பில் 8 அடி உயரத்தில் நிறுவப்பட்ட வெண்கல சிலையை முதல்வர் திறந்து வைத்தார். கலைஞரின் வெண்கல சிலை அருகே திமுக கொடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றி  வைத்தார். கலைஞரின் சிலையை திறந்து வாய்த்த பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது; தந்தை சிலையை திறந்து வைக்கும் மகனாக இல்லாமல், தலைவர் சிலையை திறந்து வைக்கும் தொண்டனாக வந்துளேன். ஈரோட்டுக்கும், கலைஞருக்கும் ஏராளமான தொடர்புகள் … Read more

ஆறுக்குட்டி போல பல குட்டிகள் அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வர தயாராக உள்ளனர்: திமுக எம்.பி. ஆர்.எஸ். பாரதி

சென்னை: ஆறுக்குட்டி போல பல குட்டிகள் அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வர தயாராக உள்ளனர் என திமுக எம்.பி. ஆர்.எஸ். பாரதி கூறியுள்ளார். இதைப்பார்த்து தாங்கிக்கொள்ள முடியாமல் எடப்பாடி பழனிசாமி எதாவது அறிக்கை விட்டுக்கொண்டிருக்கிறார் என எம்.பி. ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.

பில்கிஸ்பானு பாலியல் வன்கொடுமை வழக்கு; 11 பேர் விடுதலை செய்யப்பட்டது பற்றி குஜராத் மற்றும் ஒன்றிய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: பில்கிஸ்பானு பாலியல் வன்கொடுமை வழக்கில் 11 பேர் விடுதலை செய்யப்பட்டது பற்றி குஜராத் அரசும்,  நன்னடத்தை அடிப்படையில் 11பேர் விடுதலை செய்யப்பட்ட வழக்கில் ஒன்றிய அரசும் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2002ல் கோத்ரா கலவரத்தின்போது பில்கிஸ்பானுவின் குழந்தை உள்பட 14 பேர் கொல்லப்பட்ட வழக்கில் 11 பேரும் சிறையிலிருந்தனர். குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டு நடந்த கலவரத்தின் போது, 5 மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு என்ற பெண், கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். … Read more

வித்தியாசமான திரவப் பொருளால் புதுப்பெண் எரித்துக் கொலை?..திருமணமான 4 மாதங்களில் அதிர்ச்சி!

சீர்காழி அருகே வரசட்சணைக் கொடுமையால் திருமணம் ஆன 4 மாதத்தில் புதுப்பெண் எரித்துக் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டத்திற்குட்பட்ட கரைமேடு கிராமத்தில் வசிக்கும் மோகனசுந்தரம் – உஷாராணி ஆகியோரின் மூத்த மகள் தர்ஷிகா( 26). இவரை சீர்காழி வட்டம் மேலமாத்தூர் கிராமத்தில் வசிக்கும் மாயகிருஷ்ணன் – ஜெகதாம்பாள் தம்பதியினர் மகன் கார்த்தி என்கிற பாலமுருகனுக்கு கடந்த பிப்ரவரி 14-ம் தேதி இரு வீட்டார் சம்மதத்துடன் சீர்காழியில் உள்ள திருமண … Read more

கொல்ல வந்த பயங்கரவாதிக்கு ரத்தம் கொடுத்த இந்திய ராணுவம்.. விசாரணையில் பகீர் வாக்குமூலம்!

இந்திய ராணுவத்தை தாக்குவதற்காக, பாகிஸ்தான் உளவுத்துறை 30 ஆயிரம் ரூபாய் கொடுத்ததாக, பிடிபட்ட பயங்கரவாதி வாக்குமூலம் அளித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் உள்ள ரஜோரி பகுதியில் கடந்த 21 ஆம் தேதி நடந்த என்கவுன்டரின் போது பிடிபட்ட தபாரக் ஹுசைன் என்ற பயங்கரவாதி மூலம், பாகிஸ்தான் உளவுத்துறையின் தாக்குதல்கள் அம்பலமாகியுள்ளன. காயமடைந்த தபாரக் ஹுசைனுக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பயங்கரவாதிக்கு ரத்த தானம் செய்து இந்திய ராணுவத்தினர் உதவியுள்ளனர்.  மருத்துவமனையில் உள்ள அவர் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் உளவுத்துறையை சேர்ந்த கர்னல் யூனுஸ் சௌத்ரி என்பவர் 30 ஆயிரம் ரூபாய் கொடுத்து தன்னை பணி … Read more