குடிபோதையில் தகராறு செய்த கணவனை கொன்ற மனைவி!

மயிலாடுதுறை மாவட்டம் மொழையூர், மண்தாங்கி திடல் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி மகள் ரம்யா. இவர் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு கோயம்புத்தூரில் ஒரு கம்பெனியில் பணியாற்றிய போது அங்கு பணிபுரிந்த திருநெல்வேலி வள்ளியூர் கூத்தங்குடி பகுதியைச் சேர்ந்த ஜோசப் மகன் குமார்  என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். குமார் தொடர்ந்து குடிபோதையில் தகராறு செய்வதும், கடன் வாங்கி ஊதாரித்தனமாக செலவு செய்வதுமாக இருந்துள்ளார். இதனால் கடந்த இரண்டு … Read more

கடற்படைக்கு வலுசேர்க்க உள்ள ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க்கப்பல்..!

கடற்படைக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் உள்நாட்டிலேயே கட்டமைக்கப்பட்ட ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க்கப்பலை கொச்சியில் செப்டம்பர் 2ஆம் தேதி நடைபெறும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் முழுக்க, முழுக்க உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்கப்பல், கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்ட அந்த கப்பலை கட்டும் பணி முடிவடைந்ததை தொடர்ந்து வெற்றிகரமாக சோதனை … Read more

கள்ளக்குறிச்சி பள்ளி தாளாளர் ஆசிரியர் உள்பட 5 பேரும் சிறையில் இருந்து ஜாமினில் விடுதலையாகினர்…

சென்னை: கள்ளக்குறிச்சி பள்ளி தாளாளர் ஆசிரியர் உள்பட 5 நிர்வாகிகளுக்கு சென்னை  உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில், அவர்கள் அனைவரும் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளி மாணவி மரண வழக்கில்  கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த பள்ளி தாளாளர் ரவிக்குமார் உள்ளிட்ட 3 நிர்வாகிகள், ஆசிரியைகள் 2 பேருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டிருந்தது. மாணவியின் மரணம் தற்கொலைதான் என்று கூறிய நீதிமன்றம், அவர் பாலியல் … Read more

திருச்சியில் விநாயகர் சதுர்த்தி கோலாகல கொண்டாட்டம்: மலைக்கோட்டை உச்சி பிள்ளையாருக்கு 150 கிலோ கொழுக்கட்டை படையல்

திருச்சி: விநாயகர் சதுர்த்தியை ஒட்டி திருச்சி மலைக்கோவில் உச்சி பிள்ளையாருக்கு 150 கிலோ கொழுக்கட்டை படைக்கப்பட்டது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் உள்ள விநாயகர் கோவில்களில் இன்று காலை முதல் சிறப்பு வழிபாடுகளும், பூஜைகளும் நடைபெறுவருகிறது. அந்த வகையில், திருச்சியில் உள்ள பிரபலமான மலை கோட்டை கோவிலில் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறு வருகிறது. மலை கோட்டையின் அடிவாரத்தில் உள்ள மாணிக்க விநாயகருக்கு இன்று காலை சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து 75 கிலோ கொழுக்கட்டை … Read more

கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கும்பக்கரை அருவியில் குளிக்க தடை..!!

தேனி: கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கும்பக்கரை அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானல், வட்டக்கானல், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்கிறது. நேற்று முன்தினம் மாலை 4 மணி முதல் நள்ளிரவு வரை கனமழை பெய்ததால் கும்பக்கரை அருவியில் நீர்வரத்து அதிகரித்தது.

கடந்த ஆண்டில் நாடு முழுவதும் 1.64 லட்சம் பேர் தற்கொலை: பெண்களை விட ஆண்களே அதிகம்

புதுடெல்லி: நாடு முழுவதும் 2021ம் ஆண்டில் மட்டும் 1 லட்சத்து 64 ஆயிரத்து 33 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ‘இந்தியாவில் விபத்து மரணங்கள் மற்றும் தற்கொலைகள்’ என்ற தலைப்பில் மாணவர்கள், சம்பளம் பெறுபவர்கள், தினசரி ஊதியம் பெறுபவர்கள், ஓய்வு  பெற்றவர்கள், வேலையில்லாதவர்கள், சுயதொழில் செய்பவர்கள், வீட்டு வேலை செய்யும் பெண்கள், விவசாயத் துறையில் ஈடுபட்டுள்ள நபர்கள் மற்றும் பிற நபர்கள் என 9 வகையான பிரிவுகள் மற்றும் தொழில் அடிப்படையில் மக்களை வகைப்படுத்தி புதிய பட்டியலை … Read more

ஜார்க்கண்ட் எம்.எல்.ஏக்களின் 'கூவத்தூர்' கும்மாளத்துக்கு சத்தீஸ்கர் அரசு சரக்கு சப்ளை? பாஜக ஆவேசம்

India oi-Mathivanan Maran ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூரில் முகாமிட்டுள்ள ஜார்க்கண்ட் மாநில எம்.எல்.ஏக்களுக்கு மாநில அரசின் காரில் மதுபானங்கள் விற்பனை செய்வதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது. ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு பெற்றது- மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு எதிரானது என தேர்தல் ஆணையத்திடம் பாஜக புகார் கூறியது. பாஜகவின் புகாரை விசாரித்த இந்திய தலைமை தேர்தல் ஆணையம், ஹேமந்த் சோரனின் எம்.எல்.ஏ. பதவியை பறிக்க பரிந்துரை செய்தது. தேர்தல் ஆணையத்தின் பரிந்துரை … Read more

இந்தியாவில் புதிதாக 7,231 பேருக்கு கோவிட்: 45 பேர் பலி| Dinamalar

புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் தொற்றால் மேலும் 7,231 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,231 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,44,28,393 ஆனது. கடந்த 24 மணி நேரத்தில், 10,828 பேர் நலமடைந்ததால், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,38,35,852 ஆனது. தற்போது 64,667 பேர் சிகிச்சையில் உள்ளனர். கோவிட் … Read more

சிறந்த நடிகர் ரன்வீர் சிங், சிறந்த நடிகை க்ரித்தி சனோன்: 67வது பிலிம்ஃபேர் விருது பட்டியல் இதோ

மும்பை: இந்தி திரைப்படங்களுக்கான 67வது ஃபிலிம்பேர் விருதுகள் வழங்கப்பட்டன. சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த திரைப்படம் என பல பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டன. 67வது ஃபிலிம்பேர் விருது நிகழ்ச்சியில் பாலிவுட் திரை நட்சத்திரங்கள் திரளாக கலந்துகொண்டனர். 67வது ஃபிலிம்பேர் விருதுகள் இந்தி திரைப்படங்களுக்கான 67வது ஃபிலிம்பேர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி மும்பையில் உள்ள ஜியோ சர்வதேச வர்த்தக மையத்தில் கோலாகலமாக நடைபெற்றது. கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற இந்த ஃபிலிம்பேர் விருது விழாவில், பாலிவுட் முன்னணி நட்சத்திரங்கள் … Read more

விநாயகர் சதுர்த்தி நாளில் தங்கம் கொடுத்த சூப்பர் சான்ஸ்.. விலை எப்படியிருக்கு தெரியுமா?

தங்கம் விலையானது பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் இன்றும் சர்வதேச சந்தையில் சற்று சரிவிலேயே காணப்படுகிறது. இது குறிப்பாக அவுன்ஸுக்கு 1735 டாலர்கள் என்ற லெவலில் காணப்படுகின்றது. இது இன்னும் சற்று சரியலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. எனினும் இன்று வெளியாகவிருக்கும் அமெரிக்க வேலை குறித்தான தரவானது சந்தையில் பெரியளவில் மாற்றத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து அமெரிக்க பத்திர சந்தையும் பெரியளவில் ஏற்றம் கண்டு வரும் நிலையில், இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்தில் முதலீடுகளை குறைக்க வழிவகுக்கலாம். … Read more