ப.சிதம்பரத்திற்கு தி.மு.க, அ.தி.மு.க உறுப்பினர்கள் இணைந்து எதிர்ப்பு; நகர் மன்ற கூட்டத்தில் பரபரப்பு

சிவகங்கை நகர்மன்ற கூட்டத்தில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு நன்றி தெரிவித்ததற்கு கூட்டணி கட்சியான தி.மு.க உறுப்பினர்களும் எதிர்கட்சியான அ.தி.மு.க உறுப்பினர்களும் ஒன்றாக எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சிவகங்கை நகராட்சியில் நகர்மன்ற கூட்டம் நகர்மன்றத் தலைவர் துரை ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. சிவகங்கை நகர்மன்றக் கூட்டத்தில் காங்கிரஸ் நகர் மன்ற உறுப்பினர் மகேஷ் மற்றும் விஜயகுமார் இருவரும் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தனது எம்பி நிதியிலிருந்து சிவகங்கை மகளிர் மேல்நிலை பள்ளிக்கு … Read more

கன்னியாகுமரி || மோட்டார் சைக்கிள் மீது வேன் மோடி விபத்து – இளைஞர் பலி

கன்னியாகுமரி மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் தெங்கன்குழி பகுதியை சேர்ந்தவர் நாகராஜன்(26). இவர் தனது நண்பரான சந்தோஷ்(26) என்பவருடன் நேற்று மாலை திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மோட்டார் சைக்கிளில் முளகுமூடை பகுதி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்பொழுது திக்கணங்கோடு பஞ்சாயத்து அலுவலகம் அருகே சென்ற போது எதிரே வந்த வேன் ஒன்று எதிர்பாராத விதமாக இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி … Read more

ஸ்ரீமதி தாய் செல்வியின் தீரா சந்தேகத்திற்கு நீதிபதி சொன்ன தீர்வு..! தாயின் அடுத்த கட்ட முடிவு..!

ஸ்ரீமதியின் மரணம் தொடர்பாக தாய் செல்வியின் பல்வேறு சந்தேகங்களுக்கு ஜிப்மர் ஆய்வறிக்கை மூலம் நீதிமன்றம் விளக்கம் அளித்த நிலையில், பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமீன் வழங்கியதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய தாய் செல்வி ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. கள்ளக்குறிச்சி கணியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவாகாரத்தில் தங்கள் மகள் கற்பழித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிப்பதாக மாணவியின் தாய் செல்வி தனது புகாரில் தெரிவித்திருந்தார். முதல் பிரேத … Read more

கரூர் புத்தகத் திருவிழா | ரூ.1.35 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை: ஆட்சியர் தகவல்

கரூர்: கரூர் புத்தகத் திருவிழாவில் ரூ.1.35 கோடிக்கு புத்தகங்கள் விற்பனையாகியுள்ளன, 1.35 லட்சம் பேர் புத்தகத் திருவிழாவை பார்வையிட்டுள்ளனர் என்று கரூர் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் கூறினார். கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் த.பிரபுசஙகர் இன்று (ஆக. 30) கூறியதாவது: “கரூர் மாவட்ட நிர்வாகம் பப்பாசியுடன் (புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள்) இணைந்து நடத்திய கரூர் புத்தகத் திருவிழா கடந்த 19ம் தேதி தொடங்கி நேற்று வரை 11 நாட்கள் நடைபெற்றது. … Read more

விரைவில் அதிமுக புரட்சி பயணம்… ரெடியாகும் ர.ர.,க்கள்- வியூகம் வகுத்த ஓபிஎஸ்!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தனது இல்லத்தில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கோவை செல்வராஜ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசுகையில், அனைவரும் கட்சியில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று ஒருங்கிணைப்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஆனால் கட்சியை கபளிகரம் செய்து தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து ஒரு கம்பெனி போல் நடத்த தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார் எடப்பாடி. ஒருங்கிணைப்பாளர் இருக்கிற வரை எந்தவொரு சக்தியாலும் கட்சியை கையகப்படுத்த முடியாது. கூடிய விரைவில் கோவையில் ஒரு பிரம்மாண்டமான செயல் … Read more

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: வாழைப்பழ கொழுக்கட்டை செய்வது எப்படி?

பொதுவாக விநாயகருக்கு கொழுக்கட்டை என்றாலே பிடிக்கும். அதிலும் நாளை விநாயகருக்கு உகந்த நாளாகும். இதன் போது விநாயகருக்க கொழுக்கட்டை நைவேத்தியமாக படைப்பது வழக்கம். அந்தவகையில் இன்று விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் வாழைப்பழ கொழுக்கட்டை எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.    தேவையான பொருட்கள்: கொழுக்கட்டை மாவு – 1 கப்  உப்பு – சிறிதளவு எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் தண்ணீர் – 2 கப் வாழைப்பழம் – 4 தேங்காய் துருவல் – 1 … Read more

சத்தியமங்கலத்தில் இருந்து பைக்கில் வந்த வாலிபர்களை விரட்டிய காட்டு யானை

சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து பைக்கில் இரு வாலிபர்கள் தாளவாடி நோக்கி நேற்று மதியம் சென்றனர். தமிழக-கர்நாடக எல்லையில் புளிஞ்சூர் வனப்பகுதி வழியாக சென்றபோது ஒற்றை காட்டு யானை நடமாடிக் கொண்டிருந்தது. யானையைக் கண்டு சிறிதும் அஞ்சாமல் சென்றுள்ளனர். அருகே சென்றபோது திடீரென காட்டு யானை பைக்கை துரத்த தொடங்கியது. இதனால் அந்த வாலிபர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். ஆனால் காட்டு யானை தொடர்ந்து துரத்தாமல் நின்றதால்  இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தொடர்ந்து … Read more

மாணவிகளின் ஆய்வுப் படிப்புக்கு ஷாருக்கான் உதவி

மும்பை: பாலிவுட் முன்னணி ஹீரோ ஷாருக்கான், கல்விக்காக நிறைய உதவிகள் செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக தனது கல்வி அறக்கட்டளை மூலம் லா ட்ரோப் பல்கலைக்கழகத்தில் பிஹெச்டி ஆய்வு செய்து வரும் மாணவிகளுக்கு உதவித்தொகையை வழங்கி வருகிறார். இதுபோன்ற பணியை அவர் கடந்த 2019ம் ஆண்டு தொடங்கினார். முதல் மாணவியாக கேரளாவிலுள்ள திருச்சூரை சேர்ந்த கோபிகா உதவித்தொகை பெற்றார். இதற்கிடையில், கொரோனா லாக்டவுன் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இந்தப் பணியை தற்போது ஷாருக்கான் மீண்டும் … Read more

கணவரின் அலுவலகம் சென்று திட்டுவதும் கொடுமைப்படுத்துவதே: ஐகோர்ட் தீர்ப்பு| Dinamalar

பிலாஸ்புர் : ‘கணவரின் அலுவலகம் சென்று, பலருக்கு முன் அவரை திட்டுவதும் கொடுமைபடுத்துவதற்கு சமம் தான்’ என, விவாகரத்து வழக்கில் சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சத்தீஸ்கரின் தம்தாரி மாவட்டத்தைச் சேர்ந்த, 31 வயது நபர், அரசு பணியில் உள்ளார். கடந்த 2010ல், ராய்ப்பூரைச் சேர்ந்த, 34 வயது விதவையை அவர் திருமணம் செய்தார். அந்த நபர் தொடர்ந்த வழக்கில், ராய்ப்பூர் குடும்ப நீதிமன்றம், அவருக்கு விவாகரத்து வழங்கி தீர்ப்பு அளித்தது. இதை எதிர்த்து, அந்தப் பெண் … Read more