வித்யாபாலனுக்கு நன்றி சொன்ன ரகுல் பிரீத் சிங்

தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று, தேவ் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை ரகுல் பிரீத் சிங்.. அடுத்ததாக இந்தியன்-2 படத்தில் கதாநாயகிகளில் ஒருவராக நடிக்கிறார். எப்போதுமே தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதில் தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் ரகுல் பிரீத் சிங்கின் யோகா பயிற்சி, உடற்பயிற்சி வீடியோக்களும் இணையத்தில் ரொம்பவே பிரபலம் இந்த நிலையில் தற்போது மேக்கப் இல்லாத தனது முகத்தோற்றத்தை வெளியிட்டுள்ள ரகுல் பிரீத் சிங், இதற்காக பாலிவுட் நடிகை வித்யா பாலனுக்கு நன்றி … Read more

உங்களுக்கு டைவர்ஸ் ஆக விட்டிருக்க மாட்டேன்.. ராதிகா கோபிகிட்ட என்ன சொன்னாங்க தெரியுமா?

சென்னை : விஜய் டிவியின் முன்னணி தொடரான பாக்கியலட்சுமி, புத்தம் புதிய எபிசோட்களுடன் ரசிகர்களை சந்தித்து வருகிறது. மூன்று லீட் கதாபாத்திரங்கள், அவர்களுக்கிடையில் விளையாடும் காதல், உணர்வுகளின் சங்கமம் என அடுத்தடுத்த ட்விஸ்ட்களுடன் கதை சென்றுக் கொண்டிருக்கிறது. கோபிக்கு பாக்கியா கொடுத்த விவாகரத்தால் கொஞ்சமும் அவர் வருத்தப்படவில்லை. இதற்குத்தானே காத்திருந்தேன் என்பது போல ராதிகாவுடனான காதலை புதுப்பிக்க சென்றுவிட்டார். பாக்கியலட்சுமி தொடர் விஜய் டிவியின் முன்னணி தொடரான பாக்கியலட்சுமி அடுத்தடுத்த சிறப்பான எபிசோட்களை ரசிகர்களுக்கு தந்து வருகிறது. … Read more

இந்த மாநிலத்தில் மின்கட்டணமே கட்ட வேண்டமாம்.. மக்கள் மகிழ்ச்சி..!

மின் கட்டண உயர்வு என்பது பொதுமக்களை பயமுறுத்தி கொண்டிருக்கும் ஒரு அறிவிப்பாகவே உள்ளது என்பதும் தமிழகம் உள்பட பல மாநிலங்களில் மின் கட்டணத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பதும் தெரிந்ததே. அமெரிக்காவில் மின் கட்டணம் கட்ட முடியாமல் லட்சக்கணக்கான மக்கள் தவித்து வருவதாக வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்தியாவில் உள்ள ஒரு மாநிலத்தின் முதல்வர் எடுத்த முயற்சியின் காரணமாக அம்மாநிலத்தில் உள்ள லட்சக்கணக்கான மின் நுகர்வோர்கள் மின் கட்டணம் கட்டத் தேவையில்லை … Read more

ஆளுநர் மாளிகை உத்தரவுகளை அரசிடம் கலந்தாலோசிக்க வேண்டும்; துணை வேந்தர்களுக்கு அறிவுறுத்தல்

ஆளுநர் மாளிகையின் உத்தரவுகளை, அரசிடம் கலந்தாலோசிக்காமல் நடைமுறைப்படுத்தக் கூடாது என பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கு உயர்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் முதன் முறையாக பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில், மாநில அரசு கட்டுப்பாட்டில் உள்ள 22 பல்கலைக்கழக துணைவேந்தர்கள், அமைச்சர்கள் மற்றும் உயர்கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த நிலையில், ஆளுநர் மாளிகை அல்லது மத்திய அரசு அமைப்புகளான யு.ஜி.சி, ஏ.ஐ.சி.டி.இ இடம் இருந்து வரும் உத்தரவுகளை மாநில … Read more

”சேலம் 8 வழிச்சாலை திட்டத்தில் திமுக அரசின் நிலைப்பாடு என்ன?” – அண்ணாமலை

சென்னை: “பரந்தூரில் விமான நிலையம் அமைக்க முடியாவிட்டால், அதிமுக அரசு ஆட்சியில் பரிந்துரைத்த இடத்தை தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும்” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். மேலும், 8 வழிச்சாலை குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார். சென்னையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “சேலத்தில் இருந்து சென்னை வரையிலான 8 வழித் திட்டத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்பதை தமிழக முதல்வர் மக்களுக்கு நேரடியாக … Read more

துணைவேந்தர்கள் மாநாடு: முதல்வர் ஸ்டாலின் பேசியது என்ன?

துணை வேந்தர்கள் மாநாட்டில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின் தமிழக உயர்கல்வித்துறையில் கடந்த ஐம்பதாண்டுகளில் திராவிட அரசுகளால் அடைந்த வளர்ச்சி குறித்து பட்டியலிட்டார். தொடர்ந்து பேசிய அவர், “ஒன்றிய- மாநில அரசு உறவுகள் குறித்து ஆராய 2007-இல் நியமிக்கப்பட்ட உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பூஞ்சி தலைமையிலான ஆணையம் அளித்துள்ள பரிந்துரையின் அடிப்படையில் எனது தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக அரசு ‘துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும்’ மசோதாவை சட்டமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றியிருக்கிறோம். ஏனென்றால், இது … Read more

உணவு உட்கொண்ட பிறகு வாக்கிங் செய்யலாமா? நன்மை உண்டா?

பொதுவாகவே வாக்கிங் செல்வதால் ஏராளமான பலன்கள் கிடைக்கின்றன. அதிலும் உணவு உட்கொண்டவுடன் சிறிது நேரம் நடப்பதால், உடலின் செரிமான அமைப்பு நன்றாக வேலை செய்யத் தொடங்குகிறது. உணவு சாப்பிட்ட பிறகு 15 முதல் 20 நிமிடங்கள் நடக்க முடிந்தால், அது இன்னும் பல நன்மைகளை அளிக்கும். தற்போது அவை என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.  image – Shutterstock  நன்மைகள் உணவை உட்கொண்டவுடன் நடப்பது செரிமான செயல்முறையை துரிதப்படுத்துகிறது. உணவு விரைவாக ஜீரணமாக உதவுகிறது. உணவுக்குப் பிறகு … Read more

ஓசூர் அருகே நள்ளிரவில் கூகுள் மேப் வழியில் சென்று வெள்ளத்தில் சிக்கிய கார்

ஓசூர்: ஓசூர் அருகே, கூகுள் மேப் காட்டிய வழியில் சென்றபோது, தரைப்பாலத்தில் 5 அடிக்கு மேல் ஓடிய வெள்ளத்தில் கார் சிக்கியது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கர்நாடகா மாநிலம் சர்ஜாபூர் பகுதியைச் சேர்ந்த ராகேஷ் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர், ஓசூரில் இருந்து சர்ஜாபுரத்திற்கு நேற்று முன்தினம் இரவு, காரில் புறப்பட்டனர். அப்போது, மழை பெய்து கொண்டிருந்ததால், … Read more

அமெரிக்காவில் அமிதாப் பச்சனுக்கு சிலை வைத்த ரசிகர்

மும்பை: அமெரிக்காவில் உள்ள நியூஜெர்சி நகரில் வசித்து வருபவர், குஜராத்தை சேர்ந்த சேத். அங்கு இவர் 30 வருடங்களாக பொறியாளராகப் பணியாற்றி வருகிறார். பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் தீவிர ரசிகரான இவர், அமெரிக்காவில் தான் புதிதாகக் கட்டியுள்ள வீட்டுக்கு முன்புறம் அமிதாப் பச்சனுக்கு முழு உருவச் சிலை வைத்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது: எனக்கும், என் மனைவிக்கும் அமிதாப் பச்சன் கடவுள் போன்றவர். நிஜ வாழ்க்கையிலும் அவர் ஒரு சூப்பர் ஸ்டார். அவரது கருத்து களைப் … Read more

2 ஆண்டாக தேடப்பட்ட பாலிவுட் நடிகர் கைது| Dinamalar

மும்பை : சமூக வலைதளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து பதிவிட்ட பாலிவுட் நடிகர் கமால் ரஷீத் கான், இரண்டு ஆண்டுகளுக்கு பின், மும்பை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.ஹிந்தியில் தேஷ்துரோகி என்ற படத்தில் நடித்த கமால் ரஷீத் கான், 47, ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியிலும் பங்கேற்று பிரபலம் அடைந்தார். அதன்பின், ‘யு டியூப்’ சேனல் துவக்கி, சினிமா விமர்சனம் செய்து வருகிறார். அமெரிக்க அதிபர் மாளிகை அலுவலகம், நம் பிரதமர் மோடியின் ‘டுவிட்டர்’ பக்கத்தை தொடர்வதை திடீரென ரத்து … Read more