ரூ.25 லட்சத்திற்கு புலிக்குட்டி விற்பனை என வாட்ஸ் அப் ஸ்டேடஸ் – வனத்துறை அதிகாரிகளிடம் சிக்கிய இளைஞர்..!

வேலூரில், 25 லட்சம் ரூபாய்க்கு ஆன்லைனில் புலிக்குட்டி விற்பனை செய்யப்படுவதாக விளம்பரம் செய்து வாட்ஸ் அப் ஸ்டேடஸ் வைத்த இளைஞரை வனத்துறை போலீசார் கைது செய்தனர். வாட்ஸ் ஆப் வாயிலாக விளம்பரம் செய்யப்பட்ட செல்போன் எண்ணை கொண்டு விசாரித்ததில், வேலூர் சார்பனா மேடு பகுதியில் வசித்து வரும் ஆரணியை சேர்ந்த பார்த்திபன் என்பவர், சென்னையில் வளர்ப்பு பிராணிகளை விற்பனை செய்யும் கடை நடத்தி வரும் தமிழ் என்பவருடன் இணைந்து விலங்குகள், பறவைகள் உள்ளிட்ட செல்லப் பிராணிகளை விற்பனை … Read more

மாணவியரின் இடைநிற்றலை ‘புதுமைப்பெண்’ திட்டம் முழுமையாக தடுக்கும்: அன்பில் மகேஸ் நம்பிக்கை

தருமபுரி: புதுமைப்பெண் நிதியுதவி திட்டம், மாணவியர் இடைநிற்றலை முழுமையாக தடுக்கும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். பள்ளிக் கல்வித் துறை சார்பில் இன்று (7-ம் தேதி) தருமபுரியில் மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் நடந்தது. தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் ஆகிய 4 மாவட்டங்களுக்கான இந்த ஆய்வுக் கூட்டத்தில் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் … Read more

2024 மக்களவைத் தேர்தலில் வெற்றி வியூகம்: அமைச்சர்களுடன் அமித் ஷா, ஜே.பி.நட்டா ஆலோசனை

புதுடெல்லி: வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி வியூகம் வகுப்பது தொடர்பாக டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் நேற்றுஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 2019 தேர்தலில் பாஜக மட்டும் 303 இடங்களில் வெற்றி பெற்றது. அடுத்த தேர்தலில் கூடுதல் இடங்களில் வெற்றி பெறுவது தொடர்பாக கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் மற்ற அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினர். அப்போது கட்சியின் ஒவ்வொரு அமைச்சருக்கும், மூன்று முதல் 4 தொகுதிகள் வரை கட்சிக்கு வெற்றி தேடித் … Read more

ராகுல் காந்தியின் 'இந்திய ஒற்றுமை பயணம்': மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின், இந்திய ஒற்றுமை பயணத்தை, தமிழக முதலமைச்சர் தேசியக் கொடி வழங்கி தொடங்கி வைத்தார். கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை சுமார் 3,500 கி.மீ. தூரத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் நடைபயணம் செல்கிறார். இதற்காக தமிழகம் வந்துள்ள ராகுல் காந்தி காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தந்தை ராஜிவ் காந்தி நினைவிடத்தில் இன்று காலை மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த பாதயாத்திரையில் காங்கிரஸ் … Read more

சிறையில் சஞ்சய் ராவத்தை சந்திக்க உத்தவ் தாக்கரேவுக்கு அனுமதி மறுப்பு!

சட்ட விரோதப் பணப் பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள, சிவசேனா கட்சியின் மூத்தத் தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் ராவத்தை சந்திக்க, அக்கட்சி தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. சிவசேனா கட்சித் தலைவரும், மகாராஷ்டிர மாநில முன்னாள் முதலமைச்சருமான உத்தவ் தாக்கரேவுக்கு மிகவும் நெருக்கமானவர், சஞ்சய் ராவத். இவர், சிவசேனா கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் மற்றும் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் … Read more

6 பேர் கொண்ட கும்பலால் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வெட்டி படுகொலை

தஞ்சாவூர் மாவட்டம் நாச்சியார் கோவிலைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருக்கு சாமிநாதன், மாரியப்பன் என இரண்டு மகன்களும், தையல்நாயகி என்ற ஒரு மகளும் உள்ளனர். இதில் மகள் தையல் நாயகிக்கு அரியலூர் மாவட்டம் அணைகுடம் கிராமத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் திருமண நடைபெற்றது. திருமணத்திற்கு வந்திருந்த சாமிநாதன் மண்டபத்திற்கு எதிரே இருந்த பெட்டி கடைக்கு வந்துள்ளார்.  அப்போது மூன்று இருசக்கர மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேர் கொண்ட கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் சாமிநாதனை சரமாரியாக … Read more

படகில் சென்று விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செய்தார் ராகுல் காந்தி

நாகர்கோவில்: பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை இன்று மாலை தொடங்கும் ராகுல்காந்தி, முன்னதாக, குமரி கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செய்தார். காந்தி மண்டபத்தில் முதல்வர் ஸ்டாலின் உடன் சென்று மரியாதை செய்ததுடன், அங்கு சிறிது நேரம் அமர்ந்திருந்து பிரார்த்தனையில் கலந்துகொண்டார். இந்திய அளவில் பாஜகவுக்கு எதிராக ஒற்றுமை யாத்திரை மற்றும் கட்சியைப் பலப்படுத்தவும், தொண்டர்களை உற்சாகமடையச் செய்யவும் ‘பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை … Read more

ஈரோடு அந்தியூர் அருகே அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: படுகாயமடைந்த 35 பேர் மருத்துவமனையில் அனுமதி

ஈரோடு: அந்தியூரில் இருந்து கொங்கடை மலை கிராமத்துக்கு சென்ற அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பேருந்தில் பயணித்த 35 பேரும் படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

இந்தியாவை இணைக்க வேண்டும் என நாங்கள் சொல்கிறோம். இந்தியாவை பிளக்க வேண்டும் என்கிறது பாஜக: ப.சிதம்பரம் உரை

கன்னியாகுமரி: இந்தியாவை இணைக்க வேண்டும் என நாங்கள் சொல்கிறோம். இந்தியாவை பிளக்க வேண்டும் என்கிறது பாஜக என முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் உரையாற்றினார். பாரத் ஜுடோ யாத்ரா என்பதைத்தான் பாரதத்தை இணைக்கும் நடைபயணம் என்று சொல்கிறோம். இந்தியாவை பிளவுபடுத்தும் சக்திகளை வெளியேற்றும் வரை எங்கள் பயணம் தொடரும் என கூறினார்.

நாடு முழுவதும் 14,000 பள்ளிகளை நவீனப்படுத்த ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்: ஒன்றிய அமைச்சர் தகவல்

டெல்லி: நாடு முழுவதும் 14,000 பள்ளிகளை நவீனப்படுத்த ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். 5 ஆண்டுகளில் 14,000 பள்ளிகளை நவீனபடுத்துவதன் மூலம் 18 லட்சம் மாணவர்கள் பெறுவார்கள் என ஒன்றிய அமைச்சர் கூறியுள்ளார். பள்ளிகளை நவீனப்படுத்த ஒன்றிய அரசு ரூ.27,360 கோடி ஒதுக்கீடு செய்யும். மாநில அரசுகள் ரூ. 18,128 கோடி ஒதுக்கீடு செய்யவேண்டும் என அமைச்சர் கூறியுள்ளர். ஒன்றிய அரசின் இந்த திட்டத்தில் கேந்திரிய வித்தியாலயா, நவோதயா வித்யாலயா … Read more