Oppo color os 13: Oppo வெளியிட்டுள்ள புது வீடியோ , கலர் ஓஎஸ் வெளியாகும் தேதி?

ஓப்போ இந்தியா நேற்று தன்னுடைய முகநூல் பக்கத்தில் கலர் ஓஎஸ்13 பற்றிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நிபுணர்கள் பலரும் கலர் ஓஎஸ்13 எப்படி இருக்கிறது என்ற கருத்துக்களை பகிர்ந்துள்ளனர். ஓப்போ தனது கலர் ஓஎஸ்13 – ஐ உலகின் ஒரு சில முன்னணி டெக் நிபுணர்களிடம் கொடுத்து பயன்படுத்த செய்து அதன் பயன்பாட்டு அனுபவங்களை பற்றி அவர்களிடம் கருத்து கேட்டுள்ளது. அதன்படி அவர்களது கருத்துக்களை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் இந்த புதிய … Read more

RBI: இந்தியாவில் சோதனை அடிப்படையில் டிஜிட்டல் கரன்சி விரைவில் அறிமுகமாகிறது

நியூடெல்லி: ரிசர்வ் வங்கி தனது சொந்த டிஜிட்டல் கரன்சியை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் தொடங்கிவிட்டன. இந்த டிஜிட்டல் கரன்சி, இந்த ஆண்டு சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்படும். டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்த அமெரிக்காவைச் சேர்ந்த ஃபின்டெக் நிறுவனமான எஃப்ஐஎஸ் உடன்  ரிசர்வ் வங்கி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்துவதற்கு முன், ரிசர்வ் வங்கி நான்கு பொதுத்துறை வங்கிகளை மத்திய வங்கி டிஜிட்டல் நாணயத்திற்கான முன்னோடித் திட்டத்தைத் தொடங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. எல்லை தாண்டிய … Read more

10 திமுக எம்எல்ஏக்கள் எங்களிடம் பேச்சு வார்த்தை: குண்டை தூக்கி போடும் இபிஎஸ்

திருவள்ளூர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் கே.எம்.எஸ். சிவக்குமார் இல்ல காதணி விழாவிற்கு வருகை தந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கிரேன் மூலம் மாலை அணிவித்து சாலைகளில் பெண்கள் வரிசையாக நின்று மலர் தூவி வரவேற்பு அளித்தனர்.  அதன் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறுகையில், திமுகவைச் சேர்ந்த 10 எம்எல்ஏக்கள் தன்னுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர் எனக்கூறி பரபரப்பை ஏற்படுத்தி … Read more

தென் கொரிய பெண்ணை கரம் பிடித்த தமிழக இளைஞர்: புகைப்படம்!

தென் கொரிய பெண்ணை திருமணம் செய்து கொண்ட தமிழக பொறியியல் பட்டதாரி. இருவீட்டார் சம்மதத்துடன் வாணியம்பாடியில் நடைபெற்று முடிந்தது திருமணம். தமிழகத்தை சேர்ந்த பொறியியல் பட்டதாரி ஒருவர் தென் கொரிய நாட்டைச் சேர்ந்த இளம் பெண்ணை காதலித்து தமிழக பாரம்பரிய முறைப்படி கரம் பிடித்துள்ளார். எரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் படிப்பை முடித்துவிட்டு தென் கொரியாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் உதவி மேலாளராக பணி புரியும் பிரவீன் குமார். .Puthiyathalaimurai இவர் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வெள்ளை குட்டை … Read more

பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வினியோகம்: திருவண்ணாமலையில் இன்று முன்னோட்டம்

திருவண்ணாமலை: பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் வரும் 15ம் தேதி தொடங்க உள்ள நிலையில், முன்னோட்டமாக திருவண்ணாமலையில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு இன்று காலை உணவு வழங்கப்பட்டது. தமிழகத்தில் உள்ள தொடக்க பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி, சத்தான உணவு பள்ளி நாட்களில் தினமும் காலை 8.15 மணி முதல் 8.50 மணிக்குள் வழங்கப்பட உள்ளது. அதையொட்டி, நகர பகுதிகளில் தொகுப்பு சமையல் கூடமும், ஊரக … Read more

விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலையை பார்வையிட படகில் சென்றார் ராகுல் காந்தி

கன்னியாகுமரி: விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலையை பார்வையிட ராகுல் காந்தி படகில் சென்றார். கன்னியாகுமரி படகு துறையில் இருந்து அவர் தனிப்படகில் சென்றார். அவருடன் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் உள்ளிடோர் இருந்தனர். 

காரைக்கால் மாணவன் உயிரிழப்பு: விசாரணை அறிக்கையை சுகாதாரத்துறை இயக்குநரிடம் தாக்கல் செய்தது சிறப்பு மருத்துவக்குழு

புதுவை: காரைக்கால் மாணவனுக்கு குளிர்பானத்தில் விஷம் கொடுத்து கொன்ற விவகாரத்தில் மருத்துவக்குழு விசாரணை அறிக்கை தாக்கல் செய்தது. புதுச்சேரி சுகாதாரத்துறையின் 3பேர் கொண்ட சிறப்பு மருத்துவக்குழு காரைக்கால் அரசு மருத்துவமனையில் விசாரணை நடத்தி, அறிக்கையை சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமுலுவிடம் ஒப்படைத்தது. விசாரணை அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

”உங்களது 10 எம்எல்ஏக்கள் எங்களுடன் பேசி வருகின்றனர்” – திமுகவுக்கு ஷாக் கொடுக்கும் இபிஎஸ்!

திமுகவின் 10 எம்.எல்.ஏ-க்கள் தங்களுடன் பேசி வருவதாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் கட்சி நிர்வாகி ஒருவரின் இல்ல விழாவில் கலந்துகொண்ட பின் இவ்வாறு தெரிவித்தார். அதன்பின் நடந்த செய்தியாளர் சந்திப்பில், அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டன. அவற்றுக்கு பதிலளித்த அவர், “திமுகவின் 10 எம்எல்ஏக்கள் எங்களோடு பேசி வருகின்றனர். மேயரை பின் வரிசையில் அமர வைத்தது தான் திராவிட மாடல். திமுக என்பது திராவிட மாடல் மட்டுமல்ல… கார்ப்பரேட் கட்சி, குடும்ப … Read more

மஹா.,வில் 37 லட்சம் ஜன் தன் கணக்குகளில் ஒரு ரூபாய் கூட இல்லை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் அவுரங்காபாத்: மஹாராஷ்டிராவில் ஜன் தன் திட்டத்தின் கீழ் துவங்கப்பட்ட வங்கி கணக்குகளில் 37 லட்சம் கணக்குகளில் ஒரு ரூபாய் கூட இல்லாமல் செயல்படாமல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி கடந்த 2014ம் ஆண்டு வீட்டுக்கு ஒரு வங்கி கணக்கு துவங்கும் வகையில், ‘ஜன் தன் யோஜனா’ என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்டம் மூலம் ஆதார் கார்டை வைத்து மக்களுக்கு வங்கி கணக்குகள் துவங்கப்பட்டன. இத்திட்டத்தின் கீழ் நாடு … Read more

அமலா பால் புகார் கொடுத்த பவீந்தர் சிங்கிற்கு ஜாமின் : இருவரும் கணவன், மனைவி என கோர்ட்டில் தகவல்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான அமலா பால், இயக்குனர் ஏ.எல்.விஜய்யை திருமணம் செய்தார். பின்னர் அவரை விவாகரத்து செய்தார். அதன்பிறகு அவர் பஞ்சாபி பாடகர் பவீந்தர் சிங்கை திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்டது. இதற்கான படங்களும் வெளியானது, இதனை அமலாபால் மறுத்தார். இந்த நிலையில் திடீரென அமலாபால் பவீந்தர் சிங் மீது கடந்த வாரம் விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் மனு கொடுத்திருந்தார். அதில் தன்னிடம், பவீந்தர்சிங் மற்றும் அவரது குடும்பத்தினர் பணம் பெற்றிருந்தனர். அதை … Read more