மணிரத்னம் என்னை மட்டம் தட்டினார்..பார்த்திபன் சொன்ன தகவல்..ஒரு நிமிஷம் பதறிப்போன இயக்குநர்!

சென்னை : இயக்குநர் மணிரத்னத்தின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் டிரைலர் நீண்ட எதிர்பார்ப்புக்கு இடையே நேற்று வெளியானது. இரண்டு பாகங்களாக வெளியாக உள்ள இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ந் தேதி வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தை காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். பொன்னியின் செல்வன் மணிரத்னம் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் அவர்களின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் பொன்னியின் செல்வன். இப்படத்தில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, பார்த்திபன், சரத்குமார், பிரகாஷ் ராஜ். … Read more

சிங்கப்பூர் தமிழர்களுக்கு குட்நியூஸ்.. இனி ஒரு நிமிடம் போதும்..!

வெளிநாடுகளில் தமிழர்கள் உட்படப் பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் வாழும் பகுதியாக விளங்கும் சிங்கப்பூர் இருக்கும் இந்தியர்கள் தாய் நாட்டிற்குப் பணம் அனுப்ப வேண்டும் என்றால் குறைந்தது ஒரு நாள் ஆகும். இப்படியிருக்கையில் இதைச் சில நொடியில் செய்ய முடியும் என்றால் உங்களால் நம்ப முடியுமா, இதைச் சாத்தியமாக்கத் தான் இந்திய வங்கிகள், சிங்கப்பூர் வங்கி, இந்திய அரசின் முக்கிய அமைப்புகள் இணைந்து தீவிரமாகப் பணியாற்றி வருகிறது. வெளிநாட்டில் பணியாற்றும் பெரும்பாலான ஊழியர்கள் தங்கள் குடும்பப் பொருளாதார … Read more

“திமுக எம்எல்ஏ-க்கள் கூடத்தான் 10 பேர் எங்களோட பேசிட்டிருக்காங்க..!'' – கேள்விக்கு எடப்பாடி பதில்

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “தி.மு.க ஒரு குடும்ப கட்சி, கார்ப்பரேட் கம்பெனி. ஆனால், அ.தி.மு.க தொண்டர்கள் ஆளுகின்ற கட்சி. தொண்டர்கள்தான் இப்போது அ.தி.மு.க-வை ஆண்டுகொண்டிருக்கிறார்கள். தொண்டர்களால் நடத்தப்படும் அ.தி.மு.க-வில் தலைவர்களுக்கு இடமில்லை. தினகரன், சசிகலாவுக்கு இடமில்லை என்று ஏற்கெனவே சொல்லிவிட்டேன். நானும் தொண்டன் என்ற முறையில்தான் இங்கு வந்திருக்கிறேன். தலைவர் என்ற முறையில் வரவில்லை. ஸ்டாலின் எந்த பொருள் திருடு போனாலும் அவற்றை முறையாக … Read more

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் 4 நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் 4 நாட்களுக்கு பரவலாக மழையும், ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்: வட தமிழக பகுதிகளை ஒட்டி நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. திருப்பூர், தேனி, … Read more

அசாமில் 4-வது மதரஸா பள்ளி இடிப்பு

கவுகாத்தி: அசாம் மாநில அதிகாரிகள் நேற்று கூறியதாவது. கோல்பரா மாவட்டத்தில் செயல்பட்டு வந்த மதரஸா பள்ளியை அப்பகுதியிலுள்ள உள்ளூர் மக்கள் இடித்து தரைமட்டமாக்கினர். வங்கதேசத்தைச் சேர்ந்த அமினுல் இஸ்லாம் மற்றும் ஜஹாங்கீர் ஆலம் ஆகிய இருவரும் 2020 முதல் இந்த பள்ளியை நடத்தி வந்துள்ளனர். அவர்கள் இருவரும் அல் கய்தா அமைப்பின் உறுப்பினர்கள். அவர்களுடைய வீட்டையும் பொதுமக்கள் சூறையாடினர். தப்பியோடிய இருவரையும் தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஒரு மாத காலத்தில் அசாமில் இடிக்கப்படும் 4-வது … Read more

கனடாவின் புதிய இந்திய தூதராக சஞ்சய் வர்மா நியமனம்

புதுடெல்லி: கனடா நாட்டின் அடுத்த இந்திய தூதராக சஞ்சய் வர்மாவையும், தென்கொரியாவுக்கான இந்திய தூதராக அமித் குமாரையும் வெளியுறவுத் துறை அமைச்சகம் நியமித்துள்ளது. சிவில் சர்வீஸ் தேர்வில் கடந்த 1988-ம் ஆண்டு ஐஎப்எஸ் அதிகாரியாக தேர்ச்சி பெற்றவர் சஞ்சய்வர்மா. தற்போது ஜப்பான் நாட்டிற்கான இந்திய தூதராக உள்ளார். அவர் கனடாவிற்கான இந்திய தூதராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்சீனா, வியட்நாம், துருக்கி, இத்தாலி தூதரகங்களிலும் பணியாற்றி உள்ளார். கடந்த 1995-ம் ஆண்டு ஐஎப்எஸ் அதிகாரி அமித் … Read more

பொன்னியின் செல்வன் சக்சஸ்: ப்ரோமோஷனுக்கு களமிறங்கிய பாஜக!

கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவலை படமாக்கியுள்ளார் இயக்குநர் மணிரத்னம். இரண்டு பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, பிரகாஷ்ராஜ், ஜெயராம், சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்ட பெரிய நடிகர் பட்டாளமே நடிக்கிறது. லைகா புரொடக்‌ஷன்ஸ், மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இப்படத்தின் டீசரும், பொன்னி நதி பாக்கணுமே … Read more

Umesh Katti: கர்நாடக அமைச்சர் உமேஷ் கட்டி மறைவு – ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு

கர்நாடக மாநில உணவுத் துறை அமைச்சர் உமேஷ் கட்டி மாரடைப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 61. கர்நாடக மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான அமைச்சரவையில் உணவு மற்றும் வனத் துறை அமைச்சராக பணியாற்றியவர் உமேஷ் கட்டி. மூத்த அமைச்சரான இவர், பெலகாவி மாவட்டத்தை சேர்ந்தவர். இந்நிலையில் நேற்று இரவு 11.30 மணியளவில், அமைச்சர் உமேஷ் கட்டி திடீரென வீட்டில் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை அருகில் உள்ள எம்.எஸ்.ராமையா மருத்துவமனைக்கு குடும்பத்தினர் அழைத்து சென்றனர். … Read more

பல்கலைக்கழக வளாகத்திற்குள் புகுந்த ஒற்றை ஆண் காட்டு யானை

கோவை மாவட்டம் மருதமலை வனப்பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன. இந்த யானைகள் நாள்தோறும் இரவு நேரங்களில் உணவு மற்றும் தண்ணீர்  தேடி அருகில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் வருவது வழக்கம். தற்போது மருதமலை வனப்பகுதியில் 16 யானைகள் முகாமிட்டுள்ள நிலையில் நேற்று முன்தினம் 14 யானைகள் ஐஓபி காலனி மற்றும் பாரதியார் பல்கலைக்கழகத்திற்குள் புகுந்தது.  இதனை அடுத்து வனத்துறையினர் அந்த யானைகளை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டினர். இந்நிலையில் நேற்று இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை ஆண் … Read more

`மக்களுக்கு இன்னும் இந்த தெளிவு வரலையே?!' – மம்மூட்டி #AppExclusive

சென்னையில் மேட்டுக்குடியினரும் மந்திரிகளும் வாழும் கிரீன்வேஸ் ரோட்டில் அமைதியான சூழ்நிலையில் அமைந்துள்ள அந்த வீட்டுக்குள் நுழையும்போது, கேரளாவுக்குள் பிரவேசித்துவிட்ட பிரமை ஏற்படுகிறது. பச்சையான புல்வெளிகள், பூஞ்செடிகள், மரங்கள், டெரகோட்டா சிற்பங்கள் என்று அவருடைய ரசனையை வீடு வெளிப்படுத்திக்காட்டுகிறது.  அரைக்கால் சட்டை, கைவைத்த டி-ஷர்ட்டில் ரொம்ப இயல்பாக வராண்டாவில் போட்டிருந்த சாய்வு நாற்காலியில் சாய்ந்தபடியே நம்மை வரவேற்றார். அம்பேத்கராக நடித்து மூன்றாவது தடவையாகத் தேசிய விருது வாங்கியிருக்கும் மம்மூட்டி. Mammootty “இந்திய அரசும் மகாராஷ்டிர மாநில அரசும் நேஷனல் … Read more