வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியின் பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம்

சென்னை: வளிமண்டல கீழடுக்கு சுழற்றி காரணமாக, தமிழ்நாடு,புதுச்சேரியின் பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக   சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக  தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம்  இன்று வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில், வட தமிழக பகுதிகளை ஒட்டி நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. 07.09.2022 : தமிழ்நாடு, … Read more

கந்தர்வகோட்டை- பட்டுக்கோட்டை சாலையில் வேகத்தடையில் வெள்ளை வர்ணம் அழிந்ததால் அடிக்கடி விபத்து-நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கந்தர்வகோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையிலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் சாலைகள் விரிவாக்க பணிகள் தற்சமயம் நடைபெற்று, புதிய சாலைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகள் மீது ஒளிரும் வண்ணமோ, அருகில் வேகத்தடை இருப்பதற்கான விளம்பர பலகையோ இல்லாமல் இருக்கின்றது. இதனால் இந்த சாலையில் செல்வோருக்கு வேகத்தடை இருப்பது தெரியாமல் வேகத்தடை மீது வாகனங்கள் ஏறி நிலை தடுமாறி கீழே விழும் நிலை இருந்து வருகிறது. இந்த சாலையில் சமீபத்தில் கந்தர்வகோட்டை ஒன்றியம்,வேம்பன்பட்டி கிராமத்தில் உள்ள … Read more

ஓணம் திருநாள் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: ஓணம் திருநாள் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். அத்திப்பூ கோலமிட்டு, பட்டாடையும் புத்தாடையும் உடுத்தி சேர நாட்டவர் கொண்டாடும் அறுவடைத் திருவிழா ஓணம் என தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இந்திய கம்யூ. மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி தலைவர் உடன் நிதிஷ் சந்திப்பு

டெல்லி: டெல்லியில் இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி தலைவர் தீபங்கர் பட்டாச்சார்யாவுடன் நிதிஷ்குமார் சந்திப்பு நடத்தினார். பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் உள்பட 7 கட்சிகள் ஓரணியாக சேர்ந்துள்ளதாகவும், பாஜக தனியாக உள்ளதாகவும் அவர் பேட்டியளித்தார். நாங்கள் இணைந்து செயல்படுவதால் ஒவ்வொருவரையும் சந்தித்து வருகிறேன் என்றும், பாஜக கூட்டணியில் இருந்து தான் விலகியதை நல்ல செயல் என்று மக்கள் வரவேற்றதாகவும் அவர் கூறினார்.  

சின்னமனூர்: சாலையில் வலம் வந்த அரியவகை நட்சத்திர ஆமை

சின்னமனூர் நகர்பகுதி சாலையில் வலம்வந்த அரிய வகை நட்சத்திர ஆமையை பொதுமக்கள் பிடித்து வனத் துறையினரிடம் ஒப்படைத்தனர். தேனி மாவட்டம் சின்னமனூர் நகரில் உள்ள மாநில நெடுஞ்சாலையில் அரிய வகை நட்சத்திர ஆமை ஒன்று சாலையை கடக்க முயன்றுள்ளது. அப்போது அதை பார்த்த வாகன ஓட்டிகளும் அப்பகுதி மக்களும் ஆச்சரியத்துடன் ஆமையை பிடித்து சின்னமனூர் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். இதனையடுத்து தீயணைப்புத் துறையினர் இது குறித்து சின்னமனூர் வனத்துறை அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர். … Read more

'இரக்கமில்லையா உனக்கு? நாய் கடித்ததில் வலியால் துடித்த சிறுவன்:வேடிக்கை பார்த்த உரிமையாளர்

உத்தரப்பிரதேசத்தில் லிஃப்டில் நின்றுக்கொண்டிருந்த சிறுவனை தனது வளர்ப்பு நாய் கடித்தும் கண்டுக்கொள்ளாமல் அந்நாயின் உரிமையாளர் வேடிக்கைப் பார்த்த சம்பவத்தின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் ராஜ்நகர் எக்ஸ்டென்ஷன் பகுதியில் உள்ளது சார்ம்ஸ் கேஸ்டில் ஹவுசிங் சொசைட்டி. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று முன்தினம் மாலை சுமார் 6 மணியளவில், லிஃப்டில் சிறுவன் ஒருவன் புத்தகைப் பையுடன் நின்றுக் கொண்டிருந்த நிலையில், அந்த லிஃப்டில் வளர்ப்பு நாய் ஒன்றுடன் பெண் ஒருவர் வந்துள்ளார். மேலும் … Read more

நோட்டீசை கிழித்த ஆம் ஆத்மி எம்.பி., குற்றச்சாட்டு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: அவதூறு வழக்கு தொடர டில்லி கவர்னர் சக்சேனா அனுப்பிய நோட்டீசை கிழித்தெறிந்த ஆம் ஆத்மி எம்.பி., சஞ்சய் சிங், சக்சேனா ஊழல்வாதி, திருடன் என விமர்சித்துள்ளார். டில்லியில், துணை நிலை கவர்னராக சக்சேனா பதவி வகிக்கிறார். கடந்த 2016ல், 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் மதிப்பு இழப்பு செய்யப்பட்டபோது, காதி மற்றும் கிராமப்புற தொழில் கமிஷன் தலைவராக இருந்த சக்சேனா, 1,400 கோடி ரூபாய் பணத்தை மாற்றியுள்ளார் … Read more

'பொன்னியின் செல்வன்' போட்டியாக 'நானே வருவேன்'

தமிழ் சினிமாவில் அடுத்த பிரம்மாண்டப் படைப்பாக உருவாகி உள்ள படம் 'பொன்னியின் செல்வன்'. இந்த மாதம் செப்டம்பர் 30ம் தேதி இப்படம் தமிழ் தவிர, ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியாக உள்ளது. அக்டோபர் மாத முதல் வாரத்தில் விஜய தசமி, ஆயுத பூஜை ஆகிய பண்டிகை நாட்கள் வருவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு அந்த ஒரு வாரத்தில் விடுமுறை உண்டு. எனவேதான் விடுமுறையைக் கருத்தில் கொண்டு படத்தை செப்டம்பர் 30ம் தேதி வெளியிடுவதாக எப்போதோ … Read more

விரைவில் இயக்குநராக மாறும் ஜெயம் ரவி.. அடுத்தடுத்து இரண்டு படத்தை இயக்குறாராம்!

சென்னை : நடிகர் ஜெயம் ரவி அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் அடுத்ததாக பொன்னியின் செல்வன் படம் வெளியாகவுள்ளது. தொடர்ந்து அகிலன், இறைவன், சைரன் என மூன்று படங்களில் நடித்து வருகிறார் ஜெயம் ரவி. விரைவில் தன்னுடைய அண்ணன் ஜெயம் ராஜா இயக்கத்தில் தனி ஒருவன் 2 படத்தில் நடிக்கவுள்ளதாகதாக தெரிவித்துள்ளார் ஜெயம் ரவி. நடிகர் ஜெயம் ரவி நடிகர் ஜெயம் ரவி தன்னுடைய அண்ணன் இயக்கத்தில் ஜெயம் படத்தில்தான் முதலில் அறிமுகமானார். அந்தப்படத்தில் … Read more

எல்.ஐ.சியின் புதிய பென்ஷன் பிளஸ் திட்டம்.. என்னென்ன சிறப்பு அம்சங்கள்?

பென்ஷன் இல்லாமல் பணி செய்யும் ஊழியர்களின் நிதி பாதுகாப்புக்காக புதிய பென்ஷன் பிளஸ் என்ற திட்டத்தை எல்ஐசி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் முதலீடு செய்தவர்கள் தங்கள் ஓய்வு காலத்தை நிம்மதியாக கழிக்கும் வகையில் இருக்கும். இந்த திட்டம் நேற்று முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் இந்த திட்டத்தின் ஆரம்ப விழாவில் எல்ஐசி மற்றும் செபி நிறுவனங்களின் அதிகாரிகள் தொடங்கி வைத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. வெறும் 1000 டாலர்.. SpaceX-க்கு போட்டியாக ISRO..! … Read more