மதுவில் விஷம் கலந்து மாமனார் கொலை: பணத்தை அபகரிக்க மருமகன் நடத்திய கொடூரம்

பொள்ளாச்சி அருகே மது குடித்த விவசாயிகள் இருவர் மரணமடைந்த நிலையில், பணத்திற்காக அவர்களில் ஒருவரின் மருமகனே விஷம் கலந்து கொடுத்து கொன்றது தெரியவந்துள்ளது, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சி அருகே நெகமத்தில் மது அருந்தி இருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து நெகமம் போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இதையும் படியுங்கள்: வியாழக்கிழமை இ.பி.எஸ் அ.தி.மு.க அலுவலகம் வருகை: தொண்டர்கள் திரண்டு வர அழைப்பு நெகமம் அடுத்த பொன்னாக்காணி பகுதியை சேர்ந்தவர் வேலுச்சாமி (56), விவசாயி. அதே பகுதியை … Read more

“எங்க கிராமங்களும் கொள்ளிடம் வெள்ளத்துல அழிந்து போய்டுமோ..!" – கவலையில் கரையோர கிராம மக்கள்

சிட்டிசன் படத்தில் வரும் அத்திப்பட்டி கிராமம்போல, மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே கடந்த 1962-ம் ஆண்டு கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட பெரும் வெள்ளப்பெருக்கால் ‘காசித்திட்டு’ என்ற கிராமமே இன்று இல்லாமல், ஆற்றுக்குள் புதைந்துவிட்டது. அப்போது அங்கிருந்து தப்பித்து வெளியேறியவர்கள் கொள்ளிடம் அருகேயுள்ள நாதல்படுகை, முதலைமேடுதிட்டு போன்ற கிராமங்களில் இன்றும் வசித்து வருகின்றனர். தற்போது கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்டிருக்கும் வெள்ளத்தால் காசித்திட்டு கிராமம்போல் நாதல்படுகை, முதலைமேடுதிட்டு ஆகிய இரண்டு கிராமங்களும் தண்ணீரில் அடித்துச் செல்லப்படுமோ என்ற அச்சத்தில் அங்கு … Read more

பென்னிகுவிக் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க இங்கிலாந்து செல்லும் தேனி எம்எல்ஏக்கள்

பென்னிகுவிக் சிலை திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அமைச்சர் இ.பெரியசாமி இங்கிலாந்து கிளம்பிச் சென்றார். இதே நிகழ்ச்சியில் பங்கேற்க கம்பம், ஆண்டிபட்டி, பெரியகுளம் எம்எல்ஏக்கள் என்.ராமகிருஷ்ணன், ஆ.மகாராஜன், சரவணக்குமார் மற்றும் தேனி வடக்கு மாவட்டச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வனும் நேற்று கிளம்பிச் சென்றனர். தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக முல்லை பெரியாறு அணை விளங்கி வருகிறது. இந்த அணையை பல்வேறு சிரமங்களுக்கு இடையில் ஆங்கிலேயப் பொறியாளர் ஜான் பென்னிகுவிக் 1895-ல் கட்டினார். … Read more

பிரதமர் நரேந்திர மோடி, ஷேக் ஹசீனா முன்னிலையில் இந்தியா – வங்கதேசம் இடையே 7 ஒப்பந்தம்

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா முன்னிலையில் இரு நாடுகளுக்கிடையே நேற்று 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா 4 நாள் பயணமாக நேற்று முன்தினம் டெல்லி வந்தார். இரு நாடுகள் இடையேயான வர்த்தக உறவு கடந்த 2021-ல் 50 ஆண்டுகளை எட்டியது. அதன்பின் அவர் முதல் முறையாக இந்தியா வந்துள்ளார். அவருக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, … Read more

காங்கோ: திறப்பு விழாவின்போதே சரிந்துவிழுந்த பாலம்; வைரலாகும் வீடியோ

காங்கோ: காங்கோவில் புதிதாக கட்டப்பட்ட பாலம் திறப்புவிழாவின் போதே சரிந்துவிழுந்த பரபரபான நிகழ்வு நடந்துள்ளது. இந்தக் காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து அந்நாட்டின் ஹமா பிரஸ் செய்தி நிறுவனம் தரப்பில், ”காங்கோவில் உள்ளூர்வாசிகளுக்கு மழைக் காலங்களில் ஏற்படும் சிரமத்தைத் தடுக்க, புதிய பாலம் ஒன்று கட்டப்பட்டு, அதன் திறப்பு விழா சில நாட்களுக்கு முன் நடத்தப்பட்டது. அப்போது அதிகாரிகள் புதிய பாலத்தின் ரிப்பனை கத்திரியைக் கொண்டு வெட்டும்போது பாலம் இரண்டாக … Read more

17 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட தமிழக பகுதிகளை ஒட்டி நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (07.09.2022) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம் … Read more

டெல்லியில் புகையில்லா தீபாவளி: மாநில அரசு எடுத்த நடவடிக்கை!

டெல்லியில் காற்று மாசுபாட்டை குறைக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த வகையில் பட்டாசு வெடிக்க, விற்க, சேமித்து வைக்க 1 ஜனவரி 2023 வரை தடை விதிக்கப்படுவதாக டெல்லி அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக அம்மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால்ராய் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ஜனவரி 1, 2023 வரை டெல்லியில் அனைத்து விதமான பட்டாசு உற்பத்தி, சேமிப்பு, விற்பனை, பயன்பாடு முற்றிலுமாக தடை செய்யப்படுகிறது. காற்று மாசுபாட்டிலிருந்து மக்களை காக்கும் விதமாக இந்த … Read more

திமுகவுடனான உறவை ஓபிஎஸ் பகிரங்கப்படுத்திவிட்டார்: இபிஎஸ் குற்றச்சாட்டு

திருச்சி: திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற கட்சி நிர்வாகியின் திருமண விழாவில் கலந்து கொண்டு அங்கு பொதுகூட்டத்தில் பேசிவிட்டு சென்னை செல்வதற்காக திருச்சி விமான நிலையத்திற்கு வந்த சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், அதிமுகவின் பொது செயலாளருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளா்களை சந்தித்து பேசினார். பொதுக்குழுவை நடத்தியது தொடர்பாக ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார் என்ற கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பி.எஸ் உள்ளிட்ட குழு நீதியரசரிடம் சென்று இருக்கிறார்கள் நாங்களும் அபிடவிட் தாக்கல் செய்துள்ளோம் என்றார்.  ஒற்றைத் தலைமையை வலியுறுத்தி … Read more

டெல்லியில் ஜனவரி 1 வரை பட்டாசு விற்பனைக்குத் தடை

தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதையொட்டி டெல்லியில் காற்று மாசுபாட்டை தடுக்கும் வகையில் பட்டாசுகள் விற்பனைக்கு அடுத்தாண்டு ஜனவரி 1ம் தேதி வரை தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் விடுத்துள்ள செய்தியில், கிடங்குகளில் பட்டாசுகள் பதுக்கி வைப்பது, விற்பனை மற்றும் அனைத்து வகையான பட்டாசுகளை வெடிக்க முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. Source link

ஃபேஸ்புக் மூலம் காதல்; நடிகர் ராஜ்கிரணின் மகளைக் கரம் பிடித்தார் சீரியல் நடிகர் முனீஸ்ராஜா!

நடிகர் ராஜ்கிரணின் மகளுக்கும் நடிகர் சண்முகராஜனின் தம்பியும் சீரியல் நடிகருமான முனீஸ்ராஜாவுக்கும் திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. இயக்குநர் திருமுருகன் இயக்கி சன் டிவியில் ஒளிபரப்பான ‘நாதஸ்வரம்’ சீரியலில் சம்பந்தம் என்கிற கேரக்டரில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகிக் கலக்கியவர் முனீஸ்ராஜா. நடிகர் சண்முகராஜனின் உடன் பிறந்த தம்பி இவர். ‘நாதஸ்வரம்’ தொடரில் இவரின் ஸ்டைலான நடைக்கே தனி ரசிகர் கூட்டம் உண்டு. அந்தத் தொடருக்குப் பிறகு ஜீ தமிழ் சேனலில் ‘முள்ளும் மலரும்’ என்கிற தொடரில் ஹீரோவாக நடித்தார். … Read more