`அடக்குமுறைக்கு எதிரான ஆயுதம் பெண்கல்வி!'- முதல் பெண் ஆசிரியர் சாவித்திரிபாய் பூலே #VisualStory

நவீன இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் மற்றும் தலைமையாசிரியர் என்ற பெருமைக்குரியவர் சாவித்திரிபாய் பூலே. 1981-ம் ஆண்டு ஜனவரி 3-ம் தேதி மும்பை பிரசிடென்சியில் பிறந்தார். Marriage அவரது 9 வயதில் ஜோதிராவ் பூலேவுக்கு அவரை திருமணம் செய்து வைத்தனர். சமூக சீர்திருத்தவாதியான தன் கணவரிடம் ஆரம்பக்கல்வியைப் பெற்று, பின் அகமத்நகரில் உள்ள அமெரிக்க மிஷனரி நிறுவனத்தில் தனது ஆசிரியர் பயிற்சியை நிறைவு செய்தார். பயிற்சிக்குப் பின், தன் கணவர் தொடங்கிய பெண்கள் பள்ளியில் ஆசிரியராகத் தனது … Read more

வருவாயை அதிகரிக்க நடத்துனர்களுக்கு இலக்கு நிர்ணயிப்பது கொடுமை: ராமதாஸ் கண்டனம்

சென்னை: போக்குவரத்துக்கழக வருவாயை அதிகரிக்க சீர்திருத்தங்களை செய்யுங்கள்; நடத்துனருக்கு இலக்கு நிர்ணயித்து கொடுமைப்படுத்த வேண்டாம் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ”அரசு போக்குவரத்துக் கழகங்களின் வருமானத்தை அதிகரிப்பதற்காக, ஒவ்வொரு பேருந்தின் மூலமும் ஒவ்வொரு சுற்றுமுறைக்கும் (ஷிஃப்ட்) ஒரு குறிப்பிட்ட தொகையை வருவாயாக ஈட்ட வேண்டும் என்று போக்குவரத்துக் கழகங்கள் இலக்கு நிர்ணயித்திருக்கின்றன. போக்குவரத்துக் கழகங்களின் வருவாயை உயர்த்துவதற்காக ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், அந்த சுமையை நடத்துனர்கள் மீது திணிப்பது … Read more

கார் விபத்தில் உயிரிழந்த சைரஸ் மிஸ்திரி உடல் மும்பையில் தகனம்

வொர்லி: கடந்த ஞாயிறு அன்று மும்பையில் கார் விபத்தில் உயிரிழந்த டாடா சன்ஸ் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரியின் உடல் மும்பை வொர்லியில் உள்ள மின் மயானத்தில் நேற்று தகனம் செய்யப்பட்டது. இந்த விபத்தில் உயிரிழந்த மற்றொரு நபரான ஜெஹாங்கிர் பண்டோல் உடலும் நேற்று தகனம் செய்யப்பட்டது. சைரஸ் மிஸ்திரியின் இறுதிச்சடங்கில் முக்கிய தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள் பங்கேற்றனர். சைரஸ் மிஸ்திரிக்கு வயது 54. அவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். சைரஸ் மிஸ்திரி ஞாயிற்றுக்கிழமை … Read more

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு!

டெண்டர் முறைகேடு தொடர்பான வழக்குகளை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி சார்பாக மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் ஆஜராக தமிழக அரசு தெரிவித்த ஆட்சேபத்தை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்தது. முந்தைய அதிமுக ஆட்சியில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் வழங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஸ்.பி வேலுமணி உள்ளிட்டோருக்கு எதிராக தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி … Read more

பிரதமர் செல்ல ஸ்பெஷல் சுரங்கப் பாதை… டெல்லியில் வரப் போகும் புது பிளான்!

தலைநகர் டெல்லியில் ”எண் 7, லோக் கல்யாண் மார்க்” என்ற இடத்தில் பிரதமர் அலுவலகம் அமைந்துள்ளது. இது 50களில் கட்டப்பட்ட பழைய கட்டிடம் ஆகும். இதன் உறுதித்தன்மை மீது பல்வேறு கேள்விகள் எழுந்தன. இதனை புதுப்பிக்க வேண்டும் என்றும், புதிதாக ஒரு பிரதமர் வீடு மற்றும் அலுவலகம் கட்டப்பட வேண்டும் என்றும் 2008 காலகட்டத்திலேயே கோரிக்கை எழுந்தது. அப்போது பிரதமராக இருந்தவர் மன்மோகன் சிங். இவரது உத்தரவின் பேரில் பிரதமர் இல்லத்தின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. … Read more

டெண்டர் முறைகேடு வழக்கு: உயர்நீதிமன்றம் நிராகரிப்பு

டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் வேலுமணி தாக்கல் செய்த மனுவை தலைமை நீதிபதி அமர்வே விசாரிக்கும் என உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், வேலுமணி தரப்பில் மத்திய அரசு வழக்கறிஞர் ஆஜராக தமிழக அரசு தெரிவித்த ஆட்சேபத்தை நிராகரித்தது. முந்தைய அதிமுக ஆட்சியில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் வழங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் வேலுமணி உள்ளிட்டோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். … Read more

தந்தை வயது நடிகருக்கு நான்காவது மனைவியான பிரபல தமிழ் நடிகை! விவாகரத்து குறித்து மனம் திறப்பு

நடிகை பேபி அஞ்சு தன்னை விட 31 வயது அதிகமான நடிகர் டைகர் பிரபாகரை மணந்த நிலையில் ஒரே ஆண்டில் கசந்த வாழ்க்கை. நடிகர் டைகர் பிரபாகர் உடனான வாழ்க்கை குறித்து மனம் திறப்பு பிரபல நடிகை அஞ்சு தனது தந்தை வயதில் உள்ள நடிகரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து பின்னர் அவரை விவாகரத்து செய்தது தொடர்பில் முதல்முறையாக மனம் திறந்துள்ளார். தமிழ் திரையுலகில் ஒரு சமயத்தில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் அஞ்சு என்கிற … Read more

நீட் தேர்வு முடிவுகள் வெளியானது… இணையதளத்தில் பார்க்கலாம்…

டெல்லி: நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வை எழுதி, தேர்வு முடிவுக்காக காத்திருக்கும் மாணாக்கர்களின் எதிர்பார்பை நிறைவேற்றும் வகையில் நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. நீட்2022 தேர்வு முடிவுகளை என்டிஏ வெளியிட்டுள்ளது. மாணவர்கள் என்டிஏ வெப்சைட்டில் தேர்வு முடிவுகள், மதிப்பெண்களை தெரிந்துகொள்ளலாம். neet.nta.nic.in ntaresults.nic.in தேசிய தேர்வு முகமை அறிவித்தபடி இன்று பகல் 12 மணியளவில் நீட் தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://neet.nta.nic.in … Read more

பனை நடவு குறித்து சைக்கிளில் விழிப்புணர்வு பயணம்

தேனி : விழுப்புரத்திலிருந்து சைக்கிளில் தேனிக்கு நேற்று வந்த பனையேறி குடும்பத்தினர், பனை நடவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.விழுப்புரம் மாவட்டம் செஞ்சியைச் சேர்ந்த பனையேறி பாண்டியன் (42). இவர் தலைமையில் 3 குழந்தைகள் உட்பட 7 பேர் கொண்ட குழுவினர், பனை நடவு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழுப்புரத்தில் இருந்து தேனி நோக்கி சைக்கிள்களில் குடும்பத்துடன் கடந்த ஆகஸ்ட் மாதம் புறப்பட்டனர். நேற்று காலை தேனி புதிய பேருந்து நிலையம் பகுதிக்கு வந்தனர். இதுகுறித்து பாண்டியன் … Read more

தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும்.