டெல்லியில் இந்த தீபாவளிக்கும் பட்டாசு வெடிக்கத் தடை: சுற்றுச்சூழல் அமைச்சர் உத்தரவு

புதுடெல்லி: டெல்லியில் வரும் ஜனவரி 1, 2023 வரை பட்டாசு உற்பத்தி, விற்பனை, பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்படுவதாக அம்மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பகிர்ந்த ட்வீட்டில், வரும் ஜனவரி 1, 2023 வரை டெல்லியில் பட்டாசு உற்பத்தி, சேமிப்பு, விற்பனை, பயன்பாடு முற்றிலுமாக தடை செய்யப்படுகிறது. மக்களின் நலனைப் பேண இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று பதிவிட்டுள்ளார். ஆன்லைன் மூலம் பட்டாசு விற்பனைக்கும் தடை விதிக்கப்படுவதாகவும், இதற்கான தடுப்பு … Read more

அதிமுக அலுவலகம் செல்லும் எடப்பாடி பழனிசாமி: என்ன செய்யப் போகிறார் ஓபிஎஸ்?

அதிமுக பொதுக்குழு வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு செப்டம்பர் 2ஆம் தேதி வழங்கிய தீர்ப்பு தரப்புக்கு உற்சாகத்தை தந்துள்ளது. ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லும் என உத்தரவு வெளியாகியுள்ளதால், இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு சட்ட சிக்கல் இல்லை. ஜூலை 11ஆம் தேதி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் எடப்பாடி பழனிசாமி அதிமுக அலுவலகம் செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அன்றைய தினம் அதிமுக அலுவலகத்தில் … Read more

லீக் ஆனதா பிக்பாஸ் சீசன்-6 போட்டியாளர்கள் விவரம்? யார் யார்லாம் கலந்துக்குறாங்க?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்து சீசன்கள் இதுவரை நிறைவடைந்துவிட்டது.  கடந்த ஐந்தாவது சீசனில் ராஜு ஜெயமோகன் டைட்டில் வின்னராகவும், பிரியங்கா தேஷ்பாண்டே ரன்னராகவும் வெற்றிபெற்றார்கள்.  இதனைத்தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 6 எப்போது தொடங்கும் என பலரும் காத்திருக்கின்றனர், இந்த நிகழ்ச்சி தான் நெட்டிசன்களுக்கு கன்டென்ட் குருவாக விளங்குகிறது என்பதில் சிறிதும் சந்தேகத்திற்கு இடமில்லை.  பிக்பாஸ் ரசிகர்கள் பலரும் இந்த முறை யார் கலந்துகொள்ள போகிறார்கள் யாருக்கெல்லாம் ஆர்மி ஆரம்பிக்கலாம் என்று அவர்களும் ஒருபுறம் காத்திருக்கின்றனர்.   … Read more

நீட் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் மனஅழுத்தத்தை போக்க மனநல மருத்துவர்களை அணுகலாம்! அமைச்சர் மா.சு. தகவல்

சென்னை: நீட் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் மனஅழுத்தம் இருந்தால், அது தொடர்பாக மாவட்ட மனநல மருத்துவர்களை அணுகலாம் என தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நீட் தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த இன்று  சென்னை சைதாப்பேட்டையில் செய்தியாளர்கs சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணயின், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி வழங்கப்படுகிறது என்றவர்,  தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் தொடர்ந்து முயற்சி எடுத்து … Read more

மேட்டூர் அணையில் இருந்து 1.25 லட்சம் கனஅடி தண்ணீர் வெளியேற்றம்: பவானி கரையோர கிராமங்களில் புகுந்த வெள்ளம்

ஈரோடு: மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் 1.25 லட்சம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், பவானி நகரில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவானது 1.25 லட்சம் கனஅடிஆக உள்ளது. தற்போது அந்த நீர் முழுவதும் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வரவும் காரணமாக ஈரோடு மாவட்டம் பவானி நகராட்சிக்குட்பட்ட கந்தப்பட்டறை, கீரைக்காரர் தெரு, பாலக்கரை … Read more

மதுரையில் 1 லட்சம் ஏக்கர் நில பாசனத்துக்கு தேனி வைகை அணையில் இருந்து நீர் திறப்பு

தேனி : மதுரையில் 1 லட்சம் ஏக்கர் நில பாசனத்திற்காக தேனி வைகை அணையில் இருந்து பெரியகருப்பன் பாசனத்துக்கு நீர் திறந்து வைத்தார். 130 கனஅடி வீதம் 45 நாட்களுக்கும், பின்னர் 75 நாட்களுக்கு முறை பாசனம் என 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

நெருங்கும் தீபாவளி பண்டிகை!: டெல்லியில் பட்டாசுக்கு விதிக்கப்பட்ட தடை டிசம்பர் மாதம் வரை நீட்டிப்பு.. காற்று மாசை கட்டுப்படுத்த நடவடிக்கை..!!

டெல்லி: டெல்லியில் பட்டாசுக்கு விதிக்கப்பட்ட தடை டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் அறிவித்துள்ளார். இந்தியாவிலேயே காற்று மாசு அதிகம் உள்ள மாநிலமாக டெல்லி விளங்குகிறது. வாகனங்கள், தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் புகை, அண்டை மாநிலங்களில் எரிக்கப்படும் விவசாயக் கழிவுகள் ஆகியவையே டெல்லியின் காற்று மாசுபாட்டுக்கு முக்கியக் காரணங்களாக கூறப்படுகின்றன. இதைத் தடுக்க ஒன்றிய, மாநில அரசுகள் பல்வேறு நட வடிக்கைகளை எடுத்து வரும் போதிலும், காற்று மாசை முழுமையாக … Read more

உதகை – மேட்டுப்பாளையம் பாதையில் மீண்டும் மலை ரயில் சேவை!

உதகை – மேட்டுப்பாளையம் இடையிலான மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை காரணமாக கடந்த ஐந்தாம் தேதி கல்லார் மற்றும் ஹில்குரோவ் ரயில் நிலையங்களுக்கிடையே உள்ள இருப்பு பாதையில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் பாறைகளை அகற்றும் பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டு வந்ததால் மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டு இருந்தது. சீரமைப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்த நிலையில் வழக்கம் போல் மலை ரயில் சேவை தொடங்கியது. ஆனால் ரயில் சேவை தொடங்கப்படும் என … Read more

கர்நாடகா: உணவுத் துறை அமைச்சர் உமேஷ் கட்டி மாரடைப்பால் உயிரிழப்பு

கர்நாடக மாநில உணவுத் துறை அமைச்சர் உமேஷ் கட்டி மாரடைப்பால் நேற்றிரவு திடீரென உயிரிழந்தார். கர்நாடகவில் முதல்வர் பசவராஜ் பொம்மையின் தலைமையிலான பாஜக ஆட்சியில் உள்ளது. இதில், வனம் மற்றும் உணவுத்துறை அமைச்சராக உமேஷ் கட்டி (61) பதவி வகித்து வந்தார். பாஜக-வின் மூத்த தலைவரான இவர், பெலகாவி மாவட்டம் உக்கேரி தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பெங்களூரு டாலர்ஸ் காலனி இல்லத்தில் வசித்து வந்த இவர், நேற்று வழக்கமான பணியை முடித்துவிட்டு வீடு உமேஷ் கட்டிக்கு … Read more

டில்லியில் ஜன.,1 வரை பட்டாசு விற்பனைக்கு தடை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: வரும் ஜன., 1ம் தேதி வரை பட்டாசு விற்பனைக்கு தடை விதித்து , சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் உத்தரவிட்டுள்ளார். இந்தாண்டு வரும்., அக்., 24ம் தேதி, திங்கள் கிழமை அன்று தீபாவளி கொண்டாடப்பட உள்ளது. பட்டாசு விற்பனைக்கு தடை: சுற்றுசூழல் மாசுபாடு கருதி, டில்லியில் பட்டாசுகளை விற்க, வெடிக்க மற்றும் சேமித்து வைக்க, வரும் ஜன., 1ம் தேதி வரை தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. பட்டாசு … Read more