பைக் மீது மினி வேன் மோதி விபத்து – தொழிலாளி உயிரிழப்பு

திருவண்ணாமலையில் மாவட்டத்தில் பைக் மீது மினி வேன் மோதிய விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் அனாதிமங்கலம் பகுதியை சேர்ந்தவர் தொழிலாளி அய்யப்பன்(45). இவர் பைக்கில் சேத்துப்பட்டியில் இருந்து அனாதிமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்பொழுது ஆரணியில் இருந்து சேத்துப்பட்டு நோக்கி வந்த மினி வேன் ஒன்று எதிர்பாராத விதமாக அய்யப்பன் பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த அய்யப்பனை மீட்டு அப்பகுதியில் இருந்தவர்கள் சேத்துப்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். … Read more

“இந்தியாவின் இருள் அகற்றுவோம்; மோடி ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்" – சூளுரைத்த பிரகாஷ் காரத்

“இந்தியாவின் இருள் அகற்றுவோம், மோடி ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்” என்ற முழக்கத்துடன் சி.பி.எம் கட்சியின் சார்பில் மக்கள் சந்திப்பு இயக்கத்தின் நிறைவு பொதுக்கூட்டம் சென்னை பெரம்பூரில் நடைபெற்றது. வடசென்னை மாவட்ட செயலாளர் எல்.சுந்தரராஜன் தலைமையில் நடைபெற்ற இந்தப் பொதுக்கூட்டத்தில் சி.பி.எம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியகுழு உறுப்பினர் உ.வாசுகி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டு உரையாற்றினர். சி.பி.எம் பொதுக்கூட்டம் `மகசேசே விருது பெற வேண்டாம்’ – சி.பி.எம் முன்னாள் … Read more

மெரினாவில் பிளாஸ்டிக் தடையை அமல்படுத்த குழு

சென்னையில் மெரீனா, பெசன்ட் நகர் மற்றும் திருவான்மியூர் கடற்கரை பகுதிகளை பிளாஸ்டிக் இல்லா கடற்கரை பகுதிகளாக பராமரிக்கும் வகையில் கடந்த ஆக.5-ம்தேதி முதல் மாநகராட்சி சார்பில் கடற்கரை பகுதிகளில் தொடர்புடைய சுகாதார அலுவலர்கள் தலைமையில் காலை, மாலை என இரு வேளைகளில் ஆய்வு செய்யப்பட்டு, பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, மெரீனாகடற்கரையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தும் கடைகள் மற்றும் குப்பைகளை கொட்டும் நபர்களை கண்காணிக்க மண்டல அலுவலர் … Read more

ராஜீவ் காந்தி நினைவிடத்தில் தியானம் செய்த ராகுல் காந்தி

கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இன்று ஒற்றுமையின் யாத்திரை என்ற நடை பயணத்தை தொடங்குகிறார். கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை 3,500 கி.மீ. தூர 150 நாட்கள் இந்த பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார். இப்பயணத்தின்போது மக்களைச் சந்தித்து அவர்களது பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்கிற முயற்சியில் இப்பயணம் அமைக்கப்பட்டிருக்கிறது. இதற்காக நேற்று ராகுல் காந்தி டெல்லியில் இருந்து விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் சென்னை வந்தார். அவருக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து ராகுல் … Read more

அரசு கலைஅறிவியல் கல்லூரிகளில் முதுகலை படிப்புக்கு இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்…

சென்னை: அரசு கலைஅறிவியல் கல்லூரிகளில் முதுகலை படிப்புக்கு இன்றுமுதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அறிவித்து உள்ளது. தமிழ்நாட்டில் இளங்கலை படிப்புக்கான விண்ணப்பங்கள் முடிவடைந்து கல்லூரிகள் ஜூலை இறுதியில் தொடங்கப்பட்டு உள்ளன. இந்த  நிலையில் முதுநிலை படிப்புக்காக  அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில், 109 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில்   24,341 இடங்களுக்கு இன்று முதல்  செப்டம்பர் 16ம் தேதி வரை இந்த இணையதளத்தில் … Read more

திண்டுக்கல் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நத்தம் மாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்திக்கு எதிர்ப்பு தெரிவிக்க போராட்டம் நடத்த சென்ற இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கைது

திண்டுக்கல்: ராகுல் காந்திக்கு எதிர்ப்பு தெரிவிக்க போராட்டம் நடத்த சென்ற இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கைது செய்யப்பட்டுள்ளார். கோவையிலிருந்து கன்னியாகுமரிக்கு ரயிலில் சென்ற போது திண்டுக்கலில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒன்றிய பாஜ ஆட்சியில் வாழ்ந்தாலும் ஜிஎஸ்டி இறந்தாலும் ஜிஎஸ்டி: பிரகாஷ் கரத் குற்றச்சாட்டு

சென்னை: தங்களுக்கு எதிரான மாநில அரசுகளை புலனாய்வு முகமைகளை பயன்படுத்தி ஒன்றிய பாஜ அரசு முடக்க பார்க்கிறது என மார்க்சிஸ்ட் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிரகாஷ் கரத் குற்றம் சாட்டினார். இந்தியாவின் இருள் அகற்றுவோம், மோடி ஆட்சிக்கு முடிவு கட்டுவோம் என்ற முழக்கத்துடன் தமிழ்நாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மேற்கொண்ட மக்கள் சந்திப்பு இயக்கத்தின் நிறைவு பொதுக்கூட்டம் வியாசர்பாடி முல்லை நகரில் நேற்று முன்தினம் மாலை  நடந்தது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் … Read more

ரூ.2.42 கோடி தங்கம்கடத்தல்: 2 பேர் கைது| Dinamalar

சிலிகுரி: மேற்கு வங்கத்தில், ‘ஷூ’ வுக்குள் மறைத்து வைத்து கடத்தப்பட்ட ரூ.2.42 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை, வருவாய் புலனாய்வு பிரிவினர் பறிமுதல் செய்து, நேற்று இருவரை கைது செய்தனர். மேற்கு வங்க மாநிலம், சிலிகுரி ரயில்வே ஜங்ஷன் பகுதியில் இருவர் தங்கம் கடத்திச் செல்வதாக, வருவாய் நுண்ணறிவுப் பிரிவு இயக்குனரக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்ற அதிகாரிகள், இருவரை கைது செய்தனர்.அவர்கள் ஷூவுக்குள் மறைத்து வைத்திருந்த ௨௯ தங்க பிஸ்கட்டுகளை பறிமுதல் … Read more

பதவி விலகினார் ஜான்சன்: பிரிட்டன் பிரதமரானார் லிஸ் டிரஸ்

லண்டன் :பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்று முறைப்படி தன் பதவியை ராஜினாமா செய்தார். பிரிட்டன் ராணியைச் சந்தித்து தன் ராஜினாமா கடிதத்தை அவர் வழங்கினார். இதைத் தொடர்ந்து வெளியுறவுத் துறை அமைச்சர் லிஸ் டிரஸ் பிரதமராக பதவியேற்றார்.ஐரோப்பிய நாடான பிரிட்டனின் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன், கொரோனா வைரஸ் பரவலின்போது, ஊரடங்கு உத்தரவை மீறி மது விருந்து அளித்தது உள்ளிட்ட பல சர்ச்சைகளில் சிக்கினார். அமைச்சரவை மற்றும் சொந்தக் கட்சியில் கொடுக்கப்பட்ட நெருக்கடியை அடுத்து, கடந்த, … Read more