புர்கினா பாசோவில்குண்டுவெடிப்பு: பலி 35| Dinamalar

ஓகாடவ்கோ: புர்கினா பாசோவில் நடந்த குண்டுவெடிப்பில் 35 பேர் உயிரிழந்தனர். மேற்கு ஆப்பிரிக்காவின் புர்கினா பாசோ மிகுந்த வறுமை நிலையில் உள்ளது. அல்கொய்தா மற்றும் பல்வேறு அடிப்படைவாத இயக்கங்கள் அவ்வப்போது தங்களுக்குள் மோதிக்கொள்வது மட்டுமின்றி பயங்கரவாத தாக்குதல்களையும் நிகழ்த்துகின்றன. தலைநகர் ஓகாடவ்கோவில் இருந்து பொதுமக்கள் சென்ற வாகனம் ஒன்றின் மீது குண்டுகள் ஏற்றி வந்த வாகனம் மோதி வெடித்தது. இதில் 35 பேர் பலியாகினர். அமைதியின்மை காரணமாக புர்கினா பாசோ குடிமக்களில் 10 சதவீதம்பேர் பல்வேறு நாடுகளில் … Read more

வாட்டர் பெட் போல இருக்கும்..படுமோசமான கமெண்ட்டிற்கு ரவீந்திரனின் கூல் பதில்

சென்னை : சின்னத்திரை நடிகை மகாலட்சுமி, தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களது திருமணம் திருப்பதியில் நடைபெற்றது. திடீரென எந்தவிதமான முன்னறிவிப்பும் இல்லாமல் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டதால், இவர்களின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கண்டபடி விமர்சித்து வருகின்றனர். விமர்சனத்திற்கு பதிலளிக்கும் வகையில் இருவரும் பிரபல யூடியூப் சேனலுக்கு கூட்டாக பேட்டி கொடுத்துள்ளனர். திருமணம் எங்களுக்கு திருமணம் நடந்து விட்டது என்று திருமண புகைப்படத்தை பகிர்ந்ததுமே, எங்கள் திருமண தகவல் பேன் இந்தியா … Read more

கடையில் உள்ளது போல் மொறுமொறு வேர்க்கடலை பக்கோடா.. இப்படி ஈஸியா செய்யலாம்!

வேர்க்கடலை பக்கோடா குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் விரும்பி சாப்பிடும் ஸ்நாக்ஸ். கடையில் வாங்கி சாப்பிட்டிருப்போம். ஆனால் அதை வீட்டிலேயே எந்தவித கலப்படமும் சேர்க்காமல் சுத்தமான எண்ணெய்யில் செய்து சாப்பிடலாம். குடும்பத்தோடு சாப்பிடுவது இன்னும் மகிழ்ச்சியாக இருக்கும். கண்ணாடி டப்பாவில் போட்டு வைத்து சாப்பிட்டால் எப்படி சமைத்தோமோ அப்படியே மொறுமொறுவென்று இருக்கும். குழந்தைகளுக்கு மாலையில் கொடுக்க சிம்பிள் ஸ்நாக்ஸ் ரெடி. வேர்க்கடலை பக்கோடா செய்வது எப்படி? தேவையான பொருட்கள் வேர்க்கடலை – 1 1/2 கப் … Read more

தமிழகத்தில் இன்று ( செப்டம்பர்-7 ) இந்த பகுதிகளில் மின்தடை அறிவிப்பு.!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (07-09-2022) புதன்கிழமை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. சென்னை சென்னை மாவட்டம் திருநின்றவூர் துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது. திருவள்ளூர் திருவள்ளூர் மாவட்டம் சின்னம்பேடு துணை மின்நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது. … Read more

வள்ளலார் முப்பெரும் விழாவை சிறப்பாக நடத்துவது குறித்து முதல்வர் தலைமையில் ஆலோசனை

சென்னை: வள்ளலார் முப்பெரும் விழாவைசிறப்பாக நடத்துவது குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. வள்ளலார் தருமசாலையை தொடங்கிய 156-வது ஆண்டு தொடக்கம், வள்ளலார் பிறந்த 200-வது ஆண்டு தொடக்கம், ஜோதிதரிசனம் காட்டுவித்த 152-வதுஆண்டு என மூன்று நிகழ்வுகளையும் இணைத்து முப்பெரும் விழாவாக நடத்த தமிழக அரசு முடிவுசெய்துள்ளது. அதன்படி, வள்ளலாரின் 200-வது பிறந்த ஆண்டான 2022 அக்டோபர் முதல் 2023 அக்டோபர் வரை 52 வாரங்களுக்கு முப்பெரும் விழா நடத்தப்பட உள்ளது. இந்த விழாவை … Read more

செப்டம்பர் 7: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 109-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் இன்று 109-வது நாளாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பிளாஸ்டிக் தடை கண்காணிக்க குழு ஐகோர்ட் கிளையில் அரசு தகவல்

மதுரை: பிளாஸ்டிக் தடை அமலாவதை முறையாக கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது என ஐகோர்ட் கிளையில் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மதுரை மேற்கு யாகப்பா நகர் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் இருளாண்டி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘தமிழகத்தில் பிளாஸ்டிக் தடையை முறையாக அமல்படுத்த தேவையான குழு அமைக்கவும், பிளாஸ்டிக் பயன்பாட்டை முழுமையாக தடை செய்தும் உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோர் முன் நேற்று மீண்டும் … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,506,558 பேர் பலி

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65.06 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,506,558 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 611,139,618 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 588,691,529 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 42,043 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நடிகை பலாத்கார வழக்கு விசாரணையை முடிக்க மேலும் 5 மாதம் அவகாசம்: உச்சநீதிமன்றம் அனுமதி

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொச்சியில் கடந்த 2017ம் ஆண்டு பிரபல மலையாள நடிகை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் நடந்து 5 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்ட போதிலும் இன்னும் விசாரணை முடியவில்லை. வழக்கை ஒரு வருடத்திற்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என்று தனி நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் விசாரணைக்கு மேலும் கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று கூறி நீதிபதி ஹனி எம். வர்கீஸ் உச்சநீதிமன்றத்தில் கடந்த வாரம் மனு தாக்கல் … Read more

ரூ.1,200 கோடி போதைப் பொருள் பறிமுதல் : ஆப்கனை சேர்ந்த மூவர் சிக்கினர்

புதுடில்லி:உத்தர பிரதேச மாநிலத்தில், ஆப்கானிஸ்தானை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து, 1,200 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானை சேர்ந்த இருவர், சமீபத்தில் புதுடில்லியில் கைது செய்யப்பட்டனர். இருவரும் 2016ம் ஆண்டு முதல் நம் நாட்டில் தங்கியுள்ளனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.அவர்கள் அளித்த வாக்குமூலப்படி, உ.பி., தலைநகர் லக்னோவில் ஒரு கிடங்கில் பதுக்கி வைத்திருந்த 312.5 கிலோ, ‘மெத்தம்பேட்டமைன்’ மற்றும் … Read more