இந்த தலைமுறையில் இந்த படம் வருவது பெருமை : பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழா ஹைலைட்ஸ்

பொன்னியின் செல்வன் படத்தின் இசை மற்றும் டிலைர் வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாய் நடந்தது. நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். முன்னதாக இந்த விழாவிற்கு திராளான திரையுலகினர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. கார்த்திமுன்னதாக விழாவிற்கு வந்த கார்த்தி செய்தியாளர்களிடம் பேசும்போது : ‛‛இந்த தலைமுறையில் இந்த படம் வருவது பெருமையாக உள்ளது. பல ஆண்டுகள் தமிழ் மக்கள் எதிர்பார்த்த ஒரு படம். இதில் … Read more

புதிய கூட்டுறவு கொள்கைநிபுணர் குழு அமைப்பு| Dinamalar

– நமது சிறப்பு நிருபர் – கூட்டுறவுத் துறையை வலுப்படுத்தும் வகையில் தேசிய அளவிலான கொள்கையை உருவாக்குவதற்காக, முன்னாள் மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு தலைமையில் நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.கூட்டுறவுத் துறைக்கென தனி அமைச்சகத்தை, மத்தியில் ஆளும் பா.ஜ., அரசு அமைத்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கூட்டுறவுத் துறையையும் கவனிக்கிறார்.’கூட்டுறவுத் துறையை வலுப்படுத்தும் வகையில் தேசிய அளவில் கொள்கை உருவாக்கப்படும்’ என, அமித் ஷா ஏற்கனவே கூறியிருந்தார்.இந்நிலையில், 47 உறுப்பினர்கள் உடைய நிபுணர் குழுவை … Read more

90 சதவிகிதம் சூட்டிங்கை முடித்த வாரிசு டீம்.. அடுத்த வாரத்தில் பர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பு?

சென்னை : நடிகர் விஜய் தற்போது தனது 66 படத்திற்காக பிரபல தெலுங்குப்பட இயக்குநர் வம்சி படிப்பள்ளி இயக்கத்தில் இணைந்துள்ளார். இவரது இயக்கத்தில் கார்த்தி, நாகார்ஜுனா உள்ளிட்டவர்கள் நடிப்பில் முன்னதாக வெளியான தோழா படம் சிறப்பான வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது வாரிசு படத்தின் சூட்டிங் நிறைவுக் கட்டத்தை எட்டியுள்ளது. பொங்கலுக்கு இந்தப் படம் ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. நடிகர் விஜய் நடிகர் விஜய் தன்னுடைய ரசிகர்களுக்கு தொடர்ந்து சிறப்பான படங்களை கொடுத்து வருகிறார். புதிய இயக்குநர்களுக்கும் … Read more

கர்நாடக உணவுத்துறை மந்திரி உமேஷ் கட்டி திடீர் மரணம்

பெங்களூரு: கர்நாடக உணவுத் துறை மந்திரி உமேஷ் கட்டி மாரடைப்பால் நேற்றிரவு திடீரென்று மரணம் அடைந்தார். உணவுத்துறை மந்திரி உமேஷ் கட்டி கர்நாடகத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையின் தலைமையிலான பா.ஜனதா அரசு நடந்து வருகிறது. இதில் வனம் மற்றும் உணவுத்துறை மந்திரியாக பணியாற்றி வந்தவர் உமேஷ் கட்டி. அவருக்கு வயது 61. பா.ஜனதா மூத்த தலைவரான இவர், பெலகாவி மாவட்டம் உக்கேரி தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பெங்களூரு டாலர்ஸ் காலனி இல்லத்தில் வசித்து வந்தார். … Read more

செக்யூரிட்டியை பதம் பார்த்த ரோகித் சர்மாவின் அசத்தல் சிக்சர்…! வைரல் வீடியோ

துபாய், ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் இந்திய அணியும், இலங்கை அணியும் மோதின. துபாய் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் முதலில் இந்திய அணி பேட்டிங் செய்தது. அணியில் தொடக்க ஆட்டக்காரரான கேப்டன் ரோகித் சர்மா அதிரடியில் மிரட்டினார். அவர் 4 சிக்சர், 5 பவுண்டரிகளுடன் 72 ரன்கள் திரட்டினார். அதில் அவர் அடித்த ஒரு சிக்சர் மைதானத்தில் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த செக்யூரிட்டியின் பின்பக்கத்தில் விழுந்தது. ரசிகர்களை நோக்கி அவர் நின்றுகொண்டிருந்தபோது பின்பக்கத்தில் பந்து அவரை … Read more

இங்கிலாந்தின் புதிய உள்துறை மந்திரியாக இந்திய வம்சாவளி பெண் நியமனம்

லண்டன், இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமராக லிஸ் டிரஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை தொடர்ந்து போரிஸ் ஜான்சன் ஆட்சியின் போது உள்துறை மந்திரியாக பணியாற்றிவந்த இந்தியாவை பூர்வீகமாக கொண்ட பிரித்தி படேல் தனது பதவியை ராஜினாமா நேற்று செய்தார். இந்நிலையில், இங்கிலாந்து நாட்டின் புதிய உள்துறை மந்திரியாக சூலா பிரேவர்மென் (வயது 42) நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர், தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட இந்திய வம்சாவளி பெண் ஆவார். சூலா பிரேவர்மெனின் தாய் உமா. இவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர். இவர் … Read more

இலங்கை சட்டக் கல்லூரி பொது நுழைவு பரீட்சைக்கான விண்ணப்பங்கள்

இலங்கை சட்டக் கல்லூரி பொது நுழைவு பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளன. எதிர்வரும் 15ஆம் திகதி தொடக்கம் ஒக்டோபர் மாதம் 16ஆம் திகதி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என இலங்கை சட்டக் கல்லூரி தெரிவித்துள்ளது. விண்ணப்பங்களை இலங்கை சட்டக் கல்லூரியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தளத்தில் பதிவிறக்கம் செய்ய முடியும்

ராகுல் காந்தி நடைபயணம் குமரியில் இன்று தொடக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

நாகர்கோவில்: குமரி முதல் காஷ்மீர் வரை ஒற்றுமை நடைபயணத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று தொடங்குகிறார். இந்த பயணத்தை கன்னியாகுமரியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். மொத்தம் 150 நாட்களில் 12 மாநிலங்கள் வழியாக 3,500 கி.மீ. தொலைவுக்கு இந்த நடைபயணம் மேற்கொள்ளப்படுகிறது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அகில இந்திய அளவில் கட்சியை பலப்படுத்தவும், தொண்டர்களை உற்சாகமடையச் செய்யவும் ‘பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற இந்திய ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொள்கிறார். கன்னியாகுமரியில் … Read more

உலகளவில் 61.11 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 61.11 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 61.11 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா பாதிப்பால் 65.06 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், பாதிப்பிலிருந்து உலகில் 58.87 கோடி பேர் குணமடைந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே வீட்டில் குடும்பம் நடத்தினர் நடிகை அமலா பால் இரண்டாவது திருமணம்: நீதிமன்றத்தில் ஆதாரங்கள் தாக்கல்: தயாரிப்பாளர் ஜாமீனில் விடுவிப்பு

வானூர்: நடிகை அமலா பால் புகாரில் கைதான தயாரிப்பாளர் பவிந்தர்சிங் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இருவரும் பதிவு திருமணம் செய்துகொண்டு  ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி வந்ததற்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் தாக்கல்  செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே பெரியமுதலியார்சாவடி  பகுதியில் நடிகை அமலா பால் மற்றும் தயாரிப்பாளர் பவிந்தர்சிங் ஆகிய இருவரும்  கடந்த ஓராண்டுக்கு முன்பு சில மாதங்கள் தங்கியிருந்துள்ளனர். அப்போது  இருவருக்குள் சொத்து பரிவர்த்தனை நடந்துள்ளது. மேலும் சில தொழில்களிலும்  முதலீடு … Read more