முன்னாள் படைவீரர் சங்கத்திற்கான நிரந்தர அலுவலகக் கட்டிடம் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது – பாதுகாப்பு செயலாளர்

இலங்கை முன்னாள் படைவீரர் சங்கத்திற்கான நிரந்தர அலுவலகக் கட்டிடத்தை பாதுகாப்பு தலைமையக வளாகத்திற்குள் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார். இதற்கமைய, 175 பேர்ச்சஸ் பரப்பு கொண்ட காணியொன்று ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இலங்கை முன்னாள் படைவீரர் சங்கத்தின் 78 ஆவது ஆண்டு நிறைவு விழா நிகழ்வு அத்திடியவிலுள்ள ஈகிள்ஸ் லேக்சைட் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.இங்கு … Read more

புதன்கிழமை நீட் ரிசல்ட்: செக் செய்வது எப்படி?

NEET Exam 2022 results how to check online? : தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) UG, 2022 க்கான முடிவு வெளியீட்டு தேதி மற்றும் நேரத்தை தேசிய தேர்வு முகமை (NTA) அறிவித்துள்ளது. NTA அட்டவணையின்படி, நீட் தேர்வு 2022க்கான மதிப்பெண் அட்டைகள் செப்டம்பர் 7 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும். இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வு ஜூலை 17 அன்று நடைபெற்றது. மொத்தம் 18.72 லட்சம் … Read more

திமுக தலைவர் யார் ஸ்டாலினா? இல்லை அம்மையப்பனா?.. கேள்வி எழுப்பிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்..!

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட புலியூர் பேரூராட்சியில் தலைவர் பதவிக்கு இன்று செப். 6 நடைபெற்ற மறைமுகத் தேர்தலில் முன்பு தலைவர் பதவியை ராஜினாமா செய்த, திமுக வார்டு உறுப்பினர் மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வார்டு உறுப்பினர் கலாராணி, தான் தலைவராக தேர்ந்தெடுக்கப்படாததால் பேரூராட்சி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். கரூர் மாவட்டம் புலியூர் பேரூராட்சியில் 8வது வார்டில் சுயேச்சை வேட்பாளராக அடைக்கப்பன் போட்டியின்றி … Read more

தொடர்ந்து 50 நாட்களுக்கும் மேலாக முழு கொள்ளளவில் மேட்டூர் அணை: டெல்டா பகுதியில் 14 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடிக்கு வாய்ப்பு

திருச்சி: மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 50 நாட்களுக்கும் மேல்முழு கொள்ளளவில் நீடிப்பதால்,காவிரி டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு 14 லட்சம் ஏக்கரில் சம்பா, தாளடி நெல் சாகுபடிக்கு வாய்ப்பு இருப்பதாக வேளாண்மைத் துறையினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு வழக்கத்துக்கு முன்பாக மே 24-ம் தேதியே தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் காரணமாக காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி, கடலூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக அளவாக ஏறத்தாழ … Read more

டெல்லி அரசின் மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: 7 மாநிலங்களில் அமலாக்கத் துறை சோதனை

புதுடெல்லி: டெல்லி அரசின் மதுபானக் கொள்கை தொடர்பான ஊழல் வழக்கில், நாடு முழுவதும் 7 மாநிலங்களில் 35-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறையினர் நேற்று சோதனை மேற்கொண்டனர். டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் உள்ளது. கடந்த ஆண்டு நவம்பரில் டெல்லி அரசு புதிய மதுபானக் கொள்கையை நடைமுறைப்படுத்தியது. இதன்படி, டெல்லி பல மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, 800-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களுக்கு மதுபானம் விற்க உரிமம் வழங்கப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து, … Read more

"இதற்குத்தான் கடவுள் 2 கைகளை கொடுத்துள்ளார்" ஆண்டுதோறும் ஒரே நேரத்தில் இரண்டு தடுப்பூசி! அமெரிக்கா திட்டம்

காய்ச்சலைப் போலவே ஆண்டுதோறும் கோவிட் தடுப்பூசிகளை வழங்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. காய்ச்சலுக்கான தடுப்பூசியை எடுத்துக்கொள்ளும் அதே நேரத்தில் கோவிட் பூஸ்டர் டோஸ் ஊசியையும் எடுக்கலாம். காய்ச்சல் (influenza) தடுப்பூசிகளைப் போலவே கோவிட் பூஸ்டர்களும் ஆண்டுதோறும் பரிந்துரைக்கப்படலாம் என்று அமெரிக்க சுகாதார அதிகாரிகள் செவ்வாயன்று தெரிவித்தனர். கடந்த வாரம் அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA ) அங்கீகரித்து, கொரோனா வைரஸின் அசல் திரிபு (original strain) மற்றும் ஓமிக்ரான் மாறுபாட்டின் BA.4 மற்றும் BA.5 வரிசைகளுக்கு … Read more

டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற தலைமை ஆசிரியைக்கு சிறப்பு வரவேற்பு

செய்யூர்: டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளான செப்டம்பர் 5ம் தேதியன்று ஒவ்வொரு ஆண்டும், மாநில  அளவில் பள்ளிகளில் சிறப்பாக சேவையாற்றிய ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படுகிறது. அதன்படி, செங்கல்பட்டு மாவட்டத்தில் சிறப்பாக சேவையாற்றிய 10 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ராதாகிருஷ்ணன் விருது நேற்று முன்தினம் முதல்வர் ஸ்டாலினால் வழங்கப்பட்டது. இந்த 10 பேரில் மதுராந்தகம் ஒன்றியத்தில் உள்ள சாலையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை கவிதாவும் ஒருவர். இந்நிலையில், விருது பெற்ற தலைமை ஆசிரியை … Read more

ஆந்திராவில் ஆளும் கட்சி நிர்வாகி மது விருந்து விநாயகர் ஊர்வலத்தில் குடிமகன்களான பக்தர்கள்

திருமலை: விநாயகர் சிலையை விஜர்சனம் செய்யும் நிகழ்ச்சியில் பிரசாதம் அல்லது அன்னதானம் வழங்குவார்கள். ஆனால், ஆந்திராவில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் முதல்வர் ஜெகன்மோகன் வீட்டிற்கு ஒரு கி.மீட்டர் தூரத்தில் உள்ள குண்டூர் மாவட்டம், தாடேப்பள்ளியில் உள்ள கேட் சென்டர் அருகே  டிராக்டரில் குழாய் பொருத்திய பேரலில் ஒயின் கொண்டு வந்து போலீசார் கண்முன்னே வினியோகம் செய்தனர். இந்த மது விருந்து குறித்து அறிந்த மது பிரியர்கள் விநாயகர் ஊர்வலத்தை காண வந்ததை விட மது குடிப்பதற்காக … Read more

கர்நாடக அமைச்சர் மாரடைப்பால் காலமானார்| Dinamalar

பெங்களூரு: பெலகாவி மாவட்டம், ஹுக்கேரி சட்டசபை தொகுதி பா.ஜ., எம்.எல்.ஏ.,வும், கர்நாடக வனத்துறை மற்றும் உணவு பொது விநியோகத்துறை அமைச்சராக இருந்தவர் உமேஷ் கத்தி, மூத்த அமைச்சரான இவர், பல்வேறு நிகழ்ச்சிகளிலும் ஆலோசனைக் கூட்டங்களிலும் பங்கேற்றார். இரவில் டாலர்ஸ் காலனியில் உள்ள வீட்டிற்கு வந்தார். உணவு சாப்பிட்ட பின்னர் கழிப்பறைக்கு சென்றார். நீண்ட நேரம் ஆகியும் வராததால், சமையல்காரர் கழிப்பறை கதவை தட்டினார்.எந்த பதிலும் வராததால் மற்ற ஊழியர்களை அழைத்து வந்து கதவை உடைத்துப் பார்த்தனர். அப்போது … Read more

ஓடும் ஆற்றை பைக்கில் கடந்த அஜித் – வைரலான வீடியோ

நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களை அடுத்து எச்.வினோத் இயக்கத்தில் அஜித் மூன்றாவது முறையாக நடித்து வருகிறார். அஜித்தின் 61வது படமாக உருவாகும் இதில் மஞ்சு வாரியர் நாயகியாக நடிக்கிறார். வங்கி கொள்ளை தொடர்பான கதையில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இந்நிலையில் அஜித் லடாக் பகுதியில் பைக்கில் தனது நண்பர்கள் குழுவுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தனது பைக்கில் காடு மலைகளில் செல்வது போன்ற புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக பரவி … Read more