`ஈச்சர் லாரி… ஆந்திரா டு கரூர்!' – நீண்ட நாள்களாக டிமிக்கி கொடுத்த கஞ்சா புள்ளி கைது!

கரூரில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீஸாருக்கு தொடர் தகவல் வந்தவண்ணம் இருந்திருக்கிறது. அதுவும், ஆந்திராவில் இருந்து மொத்தமாக வாங்கி வந்து, கரூரில் விற்பனை செய்வதாக தெரியவந்தது. இந்தக் காரியத்தை தலைமையேற்று, கரூரை அடுத்த மொச்சக்கொட்டாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கந்தன் என்கின்ற கந்தசாமி செய்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. இதனால், அவனைப் பிடிக்க போலீஸார் தேடுதல் வேட்டையை நடத்தி வந்தனர். இந்த நிலையில், அவர்களுக்கு நீண்டகாலமாக டிமிக்கி கொடுத்துவந்த கந்தன், தற்போது போலீஸாரிடம் வசமாக மாட்டியிருக்கிறான். அவன் மட்டுமின்றி, அவர் … Read more

விலை உயர்ந்த பொருட்களை குறிவைத்து நூதன முறையில் திருடி வந்த 5 பேர் கைது

வெளிநாடுகளுக்கு கொண்டு செல்வதற்காக லாரிகளில் எடுத்து செல்லப்படும் விலை உயர்ந்த பொருட்களை குறிவைத்து நூதன முறையில் திருடி வந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். தாம்பரம் சானடோரியத்தில் இயங்கி வரும் கெமிக்கல் தயாரிக்கும் தொழிற்சாலையில் இருந்து ஜெர்மன் அனுப்புவதற்காக அனுப்பப்பட்ட 24 டன் பேரல்களில் 9 டன் கெமிக்கல் பேரல்கள் காணாமல் போனது. இது தொடர்பாக அந்த நிறுவனம் கொடுத்த புகாரின் அடிப்படையில் குற்றவாளிகளை தாம்பரம் போலீசார் தேடிவந்தனர். இந்நிலையில், 5 பேர் கைது செய்யப்பட்டனர். குற்றவாளிகளை … Read more

திமுக அரசு கோவை மாவட்டத்தை புறக்கணிக்காமல் திட்டப்பணிகளை மேற்கொள்ள வேண்டும்: எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தல்

கோவை: கோவை மாவட்டத்தை புறக்கணிக்காமல் திமுக அரசு திட்டப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும், தங்களது சட்டப்பேரவைத் தொகுதியில் நிலவும் முக்கியப் பிரச்சினைகள் குறித்த மனுவினை அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என முதல்வர் அறிவித்தார். கோவை மாவட்டத்தில் 10 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. முதல்வரின் அறிவிப்பைத் தொடர்ந்து கோவை தெற்கு தொகுதி பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கடந்த வாரம் தனது தொகுதி பிரச்சினைகள் … Read more

PS1 Audio launch: “நம்ம விக்ரம்" – கமலைப் பாராட்டி நெகிழ்ந்த ரஜினி!

மிக பிரமாண்டமாக உருவாகியிருக்கும் `பொன்னியின் செல்வன்’ படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. ரஜினி காந்த், கமல்ஹாசன், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, இயக்குநர் ஷங்கர், நடிகர் கார்த்தி, ஜெயம் ரவி இசையமைப்பாளர்கள் யுவன் சங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். விழாவில் நடிகர் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் குறித்த காணொளி ஒளிபரப்பப்பட்டது. அதன் பிறகு மேடையில் ஒன்றாக நின்று ரஜினியும் கமலும் பேசினர். … Read more

அனைத்து சாதியினரையும் அர்ச்சகர்களாக்கும் சட்டத்துக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு…

டெல்லி:  அனைத்து சாதியினரையும் அர்ச்சகர்களாக நியமிக்கும் தமிழக அரசின் சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் 6 வாரத்திற்கு ஒத்தி வைத்துள்ளது. தமிழ்நாட்டில் அரசு கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களை தனியார் வசம் ஒப்படைக்க கூடிய வழக்கு மற்றும் அனைத்து சாதியினரையும் அர்ச்சகர்களாக நியமிக்கும் சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பாஜக மூத்த தலைவர்  சுப்பிரமணிய சாமி  தொடர்ந்த வழக்கு கடந்த ஆகஸ்டு மாதம் கடைசியில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக கோவில்களில் அனைத்து ஜாதியினரையும் தமிழக அரசு அர்ச்சகராக … Read more

கடலூரிலிருந்து விருத்தாசலம் வரை 125 கிலோ மீட்டர் வேகத்தில் ரயிலை இயக்கி சோதனை ஓட்டம்

கடலூர்: கடலூர் முதுநகரிலிருந்து விருத்தாசலம் வரை 125 கிலோமீட்டர் வேகத்தில் ரயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடைபெற்றது. சென்னையிலிருந்து திருச்சி, திருச்செந்தூர், கன்னியாகுமரி, நாகர்கோவில் உள்ளிட்ட ஊர்களுக்கும், தென் தமிழகத்தில் இருந்து சென்னை, காசி, ராமேஸ்வரம் மற்றும் வட மாநிலங்களுக்கும் கடலூர் வழியாக எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதேபோல விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறைக்கும், கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்திலிருந்து திருச்சிக்கும் பயணிகள் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடலூர் வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் மற்றும் பயணிகள் … Read more

ஓணம் பண்டிகை சிறப்பு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

திருவனந்தபுரம்: ஓணம் பண்டிகை சிறப்பு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. இன்று முதல் 10ம் தேதி வரை ஐயப்பன் கோயில் நடை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மதரஸாவில் படித்து வந்த மாணவனின் உடல் மீட்பு: அரியானா போலீஸ் விசாரணை

சண்டிகர்: அரியானா மதரஸாவில் படித்து வந்த மாணவனின் சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அரியானா மாநிலம் நுஹ் அடுத்த சோகா என்ற கிராமத்தில் அமைந்துள்ள மதரஸாவில் படிக்கும் 11 வயது சிறுவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீஸ் ஏஎஸ்பி உஷா குண்டு கூறுகையில், ‘மத்ரஸா வளாகத்தில் உள்ள அறையில் சடலமாக மீட்கப்பட்ட சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக மண்டிகெடா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. உயிரிழந்த சிறுவன் மதரஸாவில் சுமார் ஒரு வருடமாக படித்து வந்ததாக … Read more

ஹீரோயின் இல்லாத படத்தில் 3 தோற்றத்தில் நடிக்கும் சிபிராஜ்

சிபிராஜ் அடுத்து நடிக்கும் புதிய படத்தை அறிமுக இயக்குனர் இளையராஜா கலிய பெருமாள் இயக்குகிறார். லதா பாபு, துர்க்கைனி தயாரிக்கிறார்கள். இன்னும் பெயரிடப்படாத இப்படம், ஒரு கொலையைச் சுற்றி நடக்கும் இன்வஸ்டிகேசன் திரில்லராக உருவாகிறது. இப்படத்தில் சிபி சத்யராஜ் மூன்று வித்தியாசமான தோற்றங்களில் தோன்றுகிறார். அவருக்கு ஜோடி இல்லை. அதாவது படத்தில் ஹீரோயின் இல்லை. ஆனால் 25 முக்கிய கதாபாத்திரங்களைச் சுற்றி நகரும் வித்தியாசமான கதையில் உருவாகிறது. இப்படத்தில் வத்திக்குச்சி புகழ் திலீப், கஜராஜ், ஆடுகளம் முருகதாஸ், … Read more

முதல் பான் இந்தியா இயக்குநர் மணிரத்னம் தான்.. பொன்னியின் செல்வன் விழாவில் இயக்குநர் ஷங்கர் புகழாரம்!

சென்னை: லைகா தயாரிப்பில் உருவாகி உள்ள பொன்னியின் செல்வன் படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் பங்கேற்று பேசிய இயக்குநர் ஷங்கரின் பேச்சு டிரெண்டாகி வருகிறது. மணிரத்னம் தான் தனக்கு இன்ஸ்பிரேஷன் என்றும் அவர் தான் பான் இந்தியா இயக்குநர் என்றும் பாராட்டி பேசினார். லைகா சுபாஸ்கரன், கமல்ஹாசன் மற்றும் ஷங்கர் ஒரே மேடையில் அருகருகே அமர்ந்திருந்த புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கொண்டாத்தில் ஆழ்த்தின. ஜெயராம் மிமிக்ரி நடிகர் ஜெயராம் நிகழ்ச்சியில் பேசும் போது ஜெயம் … Read more