யார் இந்த நஜீப் ரசாக்.. மலேசியாவை புரட்டி போட்ட நிதி மோசடி.. இவர் இப்படி செய்யலாமா?

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் மலேசியாவின் முன்னாள் பிரதமரின் மனைவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்த நாட்டு நீதிமன்றம் சில தினங்களுக்கு முன்பு தீர்பளித்தது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. மலேசியாவின் முன்னாள் பிரதமரான நஜீப் ரசாக், ஆட்சியில் அவரது மனைவி ரோஸ்மா மன்சோர் மின்சாரம் தொடர்பான ஒப்பந்தங்களில், லஞ்சம் பெற்று சொத்து குவித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் தான், நஜீப் ரசாக்கின் மனைவிக்கு 10 ஆண்டுகள் … Read more

சிவாஜி சிலையை அரசு திறக்கவில்லை என்றால் நானே திறப்பேன் – சீமான்

வரும் அக்டோபர் மாதம் சிவாஜி பிறந்த நாள் அன்று சிவாஜி சிலையை திறக்க மறுப்பின் தானே முன் நின்று சிவாஜி ரசிகர்களுக்காக சிலையை திறந்து வைப்பதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.  ”திருச்சி பாலக்கரை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிலையைத் திறப்பதற்கு, தமிழ்நாடு அரசு உடனடியாக அனுமதியளிக்க வேண்டும். மேலும் தாமதித்தால் அவருடைய பிறந்தநாளான அக்டோபர் 1-ம் தேதி அவரது ரசிக பெருமக்களின் முன்னிலையில் நான் முன்னின்று சிலையை திறப்பேன்” … Read more

“அமைச்சர்கள், அதிகாரிகளை திமுக அரசு நம்பவில்லை” – இபிஎஸ் முன்வைக்கும் ‘குழு’ விமர்சனம்

கோவை: “திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் 38 அறிவிப்புகள் கொண்டுவந்து 38 குழுக்கள் அமைத்துவிட்டார். இந்த அரசங்கத்துக்கு குழு அரசாங்கம் என்று பெயர் வைத்துவிடலாம்” என்று அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். கோவையில் அதிமுக தொண்டர்கள் மத்தியில், அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது அவர் கூறியது: “திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் 38 அறிவிப்புகள் கொண்டுவந்து 38 குழு அமைத்து விட்டார். இந்த அரசங்கத்துக்கு … Read more

ஈழத் தமிழர்களின் வரலாற்று திருப்பங்கள் – தமிழக சினிமாவினால் முடியாத காரியம்

Courtesy: ஜெரா காத்தவராயன் கூத்தினை நடிகர்கள் ஆடிக்கொண்டிருக்கையில், மெய்மறந்தாவது ஒரு வசனத்தை – ஆட்டமுறையில் பிழைவிட்டால் போதும், உடனடியாகவே பார்வையாளர்கள் மத்தியிலிருந்து கண்டனக் குரல்கள் எழும். “பிழையா ஆடுறான்… பிழையா பாடுறான்” எனப் பார்ப்பவர்கள் உடனடியாகவே சுட்டிக்காட்டிவிடுவர். அந்தளவிற்குக் ஈழத்துக் கூத்துப் பார்வையாளர்கள், கூத்து தொடர்பான அறிவில் மேம்பட்டவர்கள். நன்கு பரிச்சயமானவர்கள். அறிவோடு ஆழப் பழக்கப்பட்டவர்கள்.  அதேபோலவேதான், ஈழத்தமிழர்க்கு ஈழ ஆயுதப் போராட்டமும். அதிலும் தமிழீழ விடுதலைப் புலிகளாகிய “இயக்கத்தின்” வரலாற்றிலும், “தலைவர்” என நினைவில் கல்வெட்டாகி … Read more

PS1 Audio launch: “பொன்னியின் செல்வனை எடுக்காமல் மிச்சம் வைத்த கமல் சாருக்கு நன்றி" – கார்த்தி!

மிக பிரமாண்டமாக உருவாகியிருக்கும் `பொன்னியின் செல்வன்’ படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. ரஜினி காந்த், கமல்ஹாசன், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, இயக்குநர் ஷங்கர், நடிகர் கார்த்தி, ஜெயம் ரவி இசையமைப்பாளர்கள் யுவன் சங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். கார்த்தி விழாவில் பேசிய நடிகர் கார்த்தி, “இது நிச்சயமாக ஒரு வரலாற்று மேடைதான். காதல், வீரம், துரோகம், ஆன்மிகம் கலந்த வரலாற்று … Read more

ஓய்வுபெறும் உயர்நீதிமன்ற தலைமைநீதிபதிக்கு இன்று இரவு நட்சத்திர ஒட்டலில் விருந்து வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: ஓய்வுபெறும் சென்னை  உயர்நீதிமன்ற தலைமைநீதிபதி முனிஸ்வர்நாத் பண்டாரிக்கு, சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஒட்டலில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று இரவு  விருந்து வைக்கிறார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றி வரும் முனிஷ்வர்நாத் பண்டாரி வரும் 12ந்தேதியுடன் ஓய்வுபெற உள்ளார். இதையடுத்து, அவருக்கு தமிழக முதலமைச்சர் விருந்து வழங்கி மரியாதை செய்கிறார். முனிஸ்வர்நாத் பண்டாரி, இதுவரை எந்தவொரு வழக்கிலும், தமிழகஅரசுக்கு விரோதமாகவோ, சர்ச்சைக்குரிய வகையிலோ எந்தவொரு கருத்தும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில், தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் … Read more

திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் தெப்ப உற்சவம்

திருவையாறு: தஞ்சை மாவட்டம் திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் உள்ள சூரிய புஷ்கரணி தீர்த்த குளத்தில் நேற்றிரவு தெப்ப உற்சவம் நடைபெற்றது. தெப்பத்தில் ஐயாறப்பர் அறம் வளர்த்த நாயகியுடன் எழுந்து 5 சுற்றுகள் தெப்பத்தை வலம் வந்தார். பிறகு குளத்தின் நடுவே உள்ள நீராழி மண்டபத்தில் ஐயாறப்பர் அறம்வளர்த்த நாயகியுடன் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. அதை தொடர்ந்து தீபாரதனை நடைபெற்றது. பிறகு தெப்பத்தில் ஐயாறப்பர் அறம் வளர்த்த நாயகியுடன் 2 சுற்றுகள் வந்தபிறகு சாமி புறப்பட்டு கோயில் உள்பிரகாரம் … Read more

தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலை. நீர் நிலையை ஆக்கிரமித்துள்ளது வருவாய் ஆவணங்கள் மூலம் உறுதி

சென்னை: தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலை. நீர் நிலையை ஆக்கிரமித்துள்ளது வருவாய் ஆவணங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. 31.37 ஏக்கர் பரப்பளவிலான அரசு புறம்போக்கு நிலத்தை ஒதுக்க வேண்டும் என்ற சாஸ்த்ரா பல்கலைக்கழக கோரிக்கையை தமிழக அரசு நிராகரித்தது.

பாஜ இல்லாத ஆட்சி அமைந்தால் விவசாயிகளுக்கு நாடு முழுவதும் இலவச மின்சாரம்: சந்திரசேகரராவ் பேச்சு

திருமலை: தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் புதிய கலெக்டர் அலுவலக கட்டிடம், மாவட்ட தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி அலுவலகத்தை முதல்வர் சந்திரசேகரராவ் நேற்று திறந்து வைத்தார். பின்னர் கிரிராஜ் கல்லூரி மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது: 2024ல் பாஜகவை ஆட்சியில் இருந்து இறக்க தெலங்கானாவில் இருந்து போராட்டம் தொடங்கப்படும். அடுத்த தேர்தலில் பாஜக அல்லாத கொடி பறக்கும். பாஜக அல்லாத அரசை தேர்ந்தெடுத்த பின்னர் நாடு முழுவதும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும். … Read more