இன்று எரிபொருள் விலையில் மாற்றமா..! கஞ்சன விஜேசேகர வெளியிட்டுள்ள அறிவிப்பு

எரிபொருள் விலையில் இன்றைய தினம் மாற்றம் மேற்கொள்ளப்படுமா என்பது தொடர்பில் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றும் போதே அவர் இந்த விடயம் தொடர்பில் தெரிவித்துள்ளார்.  அதன்படி எரிபொருள் விலையில் இன்று திருத்தம் இடம்பெறாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.  எரிபொருள் விலை மாற்றம் ஒவ்வொரு மாதமும் இரண்டு தடவைகள் எரிபொருள் விலையில் மாற்றங்களை அறிவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார். ஒவ்வொரு மாதமும் 1ஆம் மற்றும் 15ஆம் திகதிகளில் … Read more

iPhone 14 Price in India: அவசரப்பட்டு ஐபோன் 13 வாங்கிடாதீங்க, ஐபோன் 14 விலை கம்மியாமா!!!

இன்னும் ஒரு சில நாட்களில் ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த நிலை மாடலான ஆப்பிள் ஐபோன் 14 வெளியாக உள்ளது. இந்நிலையில் வழக்கம் போல மொபைல் குறித்தும் அதன் சிறப்பம்சங்கள் குறித்தும் புது புது தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. அப்படி சமீபத்தில் வெளியாகியுள்ள தகவல் மொபைல் காதலர்களை ஆச்சரிய படுத்தியுள்ளது. பொதுவாகவே ஆப்பிள் நிறுவனம் தனது மொபைல்கள் வெளி வருவதற்கு முன்பு அதை பற்றி எந்த தகவல்களும் கசிந்து விட கூடாது என்பதில் கறாராக இருக்ககும். அதன் பாதுகாப்பு … Read more

நாட்டின் முதல் உள்நாட்டு விமானம் தாங்கிக் கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த் : என்னென்ன சிறப்பம்சங்கள் ?

’ஐஎன்எஸ் விக்ராந்த் ‘ என்பது 1961-ம் ஆண்டு பிரிட்டிஷ் கடற்படையிடம் இருந்து வாங்கப்பட்ட கப்பலுக்கு வைக்கப்பட்ட பெயர் ஆகும். 1971-ம் ஆண்டு நடைபெற்ற இந்தியா – பாகிஸ்தான் போரில் இந்தப் போர்க்கப்பல் பெரும் பங்கு வகித்தது. 1997-ம் ஆண்டு இந்தக் கப்பலின் சேவை நிறைவு பெற்ற நிலையில், அக்கப்பலின் நினைவாக முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட விமானந்தாங்கி கப்பலுக்கு ‘ஐஎன்எஸ் விக்ராந்த்’ என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் 2-வது விமானந்தாங்கி  போர்க்கப்பல் ஆகும். ஏற்கனவே … Read more

கடலூர்: செல்போன் மூலம் மருத்துவம் பார்த்ததால் குழந்தை இறந்ததாக புகார்

கடலூர்: செல்போனில் ஒருவர் பிரசவம் பார்ப்பதற்கான வழிமுறையை விளக்க, அதை பார்த்து வேறொருவர் பிரசவம் பார்த்து, குழந்தையை பத்திரமாக தாயின் வயிற்றிலிருந்து வெளியே எடுக்கும் பல காட்சிகளை நாம் பல படங்களில் பார்த்துள்ளோம். அதே போல் ஒரு சம்பவம் நிஜத்தில் நடந்துள்ளது. ஆனால், இதன் முடிவு நல்ல முடிவாக இருக்கவில்லை. செல்போன் மூலம் மருத்துவர்கள் மருத்துவம் பார்த்ததால் குழந்தை இறந்ததாக பரபரப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது. தச்சம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆரோக்கிய ஜெபராஜ். இவர் காவல் நிலையத்தில் இந்த … Read more

சூயஸ் கால்வாயில் சிக்கிய எரிபொருள் டேங்கர் கப்பல் 5 மணிநேரத்திற்கு பிறகு மீட்பு.!

சூயஸ் கால்வாயில் சிக்கிய எரிபொருள் டேங்கர் கப்பல் 5 மணிநேரத்திற்கு பிறகு மீட்கபபட்டது. போர்ச்சுக்கல்லில் இருந்து சவுதி அரேபிய செங்கடல் துறைமுகமான யான்புவை  நோக்கி புறப்பட்ட சிங்கப்பூரின் ‘அபினிட்டி வி’ என்ற சரக்கு கப்பல், தொழில்நுட்பக் கோளாறால் உலகின் முக்கிய நீர் வழித் தடங்களில் ஒன்றான எகிப்தின் சூயஸ் கால்வாயில் சிக்கியது. 252 மீட்டர் நீளமும் 45 மீட்டர் அகலமும் கொண்ட கப்பல், கால்வாயை மறித்துக் கொண்ட நிலையில், ஐந்து இழுவை படகுகளை கொண்டு அந்த சரக்கு … Read more

டீசல் , விமான எரிபொருள் ஏற்றுமதி மீதான மூலதன ஆதாய வரியை உயர்த்தியுள்ளது மத்திய அரசு.!

Windfall Tax எனப்படும் மூலதன ஆதாய வரியை மத்திய அரசு இன்று முதல் உயர்த்தியுள்ளது. அதன்படி, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் டீசல் மீதான சந்தை ஆதாய வரி ஒரு லிட்டருக்கு  7 ரூபாயில் இருந்து 13 ரூபாய் 50 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளன. மேலும், விமான எரிபொருள் ஏற்றுமதி மீதான சந்தை ஆதாய வரி இரண்டு ரூபாயில் இருந்து 9 ரூபாயும், உள்நாட்டில் தயாரிக்கப்படும் கச்சா எண்ணெய் மீதான சந்தை ஆதாய வரியை டன்னுக்கு 13 ஆயிரம் ரூபாயில் … Read more

கனடாவில் ஒன்றரை வயது குழந்தை சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு: 3 பொலிஸார் மீது குற்றச்சாட்டு

கனடாவில் ஒன்றரை வயது குழந்தை சுட்டு கொல்லப்பட்ட வழக்கில் 3 பொலிஸார் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நடந்து கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் கழித்து அவர்கள் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர். 2020-ஆம் ஆண்டு ஒன்ராறியோவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டின் போது ஒன்றரை வயதுக் குழந்தை உயிரிழந்தமை தொடர்பில் மூன்று கனேடிய பொலிஸ் அதிகாரிகள் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் புதன்கிழமை அறிவித்தது. நவம்பர் 26, 2020 அன்று ரொறன்ரொவிற்கு வடக்கே சுமார் 100 கிலோமீட்டர் (60 மைல்) … Read more

பல்கலைக்கழகங்களின் வேந்தராக மாநில முதல்வரே நியமனம் செய்யும் மசோதா! கேரள சட்டப்பேரவையில் நிறைவேற்றம்…

திருவனந்தபுரம்: பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநரின் அதிகாரத்தை குறைக்கும் மசோதாவை கேரள சட்டமன்றம்  நிறைவேற்றியது. ஏற்கனவே தமிழநாட்டில் இதுபோன்ற மசோதா நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், தற்போது கேரள அரசு நிறைவேற்றி உள்ளது. கேரள மாநிலத்தில், பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் செய்யப்படும் விஷயத்தில், மாநில முதல்வருக்கும், கவர்னருக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.  கண்ணூர் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான எல்.டி.எஃப் அரசுக்கும் இடையே சில … Read more

டெல்டாவில் மழை நீடிப்பு 17,000 ஏக்கர் குறுவை பயிர் மூழ்கியது; மின்னல் தாக்கி 2 பேர் பலி

திருச்சி: டெல்டாவில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக 17,000 ஏக்கர் குறுவை பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளது. அரியலூரில் மின்னல் தாக்கி 2 பேர் இறந்தனர். நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தென் தமிழகம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. நாகை மாவட்டத்தில் பரவலாக நேற்று காலை முதல்  மாலை … Read more

திரையரங்குகளில் வாகன நிறுத்த கட்டணத்தை மறு நிர்ணயம் செய்ய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னையில் உள்ள திரையரங்குகளில் வாகன நிறுத்த கட்டணத்தை மறு நிர்ணயம் செய்ய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நியாயமான பார்க்கிங் கட்டணத்தை நிர்ணயிக்கக் கோரி சென்னை ராயப்பேட்டை திரையரங்கம் சார்பில் 2017-ல் வழக்கு தொடரப்பட்டது.