இரயில்வே மேம்பாலத்தில் மின்னல் வேகத்தில் தாறுமாறாக சென்ற கார் எதிரே வந்த ஆட்டோ மீது மோதி விபத்து.!

விருதுநகரில், இராமமூர்த்தி சாலையில் உள்ள இரயில்வே மேம்பாலத்தில் விதிகளை மீறி மின்னல் வேகத்தில் தாறுமாறாக சென்ற கார் எதிரே வந்த ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானது. கார் மோதிய விபத்தில் பாலத்தின் தடுப்புச்சுவரின் மீது ஆட்டோ ஏறி நின்ற நிலையில், காயமடைந்த ஓட்டுநர்கள் சண்முகம், முத்து கண்ணன் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். Source link

கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் உயர் நீதிமன்ற கருத்து அவசியமற்றது: சீமான்

சென்னை: “கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் உயர் நீதிமன்றத்தின் கருத்து, அநீதிக்கு எதிராக நீதியைக் கேட்டு தர்மத்தைக் காக்க அதர்மத்தை எதிர்த்து போராடுகிற யாருக்குமே மனச்சோர்வையும், நம்பிக்கையின்மையையும் தரக்கூடிய ஒன்றாக உள்ளது” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். சென்னையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மரண வழக்கை தமிழக அரசு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றியது. … Read more

கலைஞர் கருணாநிதி படத்தை பயன்படுத்தலாமா? விசாரணை ஒத்திவைப்பு!

அரசு இணையதளங்கள், விளம்பரங்களில் மறைந்த முதல்வர் கலைஞர் புகைப்படம் பயன்படுத்த தடை கோரிய வழக்கை செப்டம்பர் 23ஆம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது. மதுரையைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கில், கட் அவுட் கலாச்சாரத்தை நீதிமன்றம் தலையிட்டு தடுத்திருக்கும் நிலையில் தற்போது புகைப்பட கலாச்சாரம் பரவி வருகிறது எனக் குறிப்பிட்டுள்ளார். உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, அரசு விளம்பரங்களில் குடியரசு தலைவர், பிரதமர், முதல்வர்கள், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் அமைச்சர்களின் … Read more

ஆளுநரின் அதிகாரத்தைக் குறைக்கும் மசோதா: கேரளாவில் நிறைவேற்றம்!

பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுநரிடம் இருக்கிறது. இந்த நிலையில், பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை மாநில அரசு நியமிக்கும் சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் அண்மையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் மீதுமுடிவெடுக்காமல் வழக்கம் போல் அவர் தாமதித்து வருகிறார். துணை வேந்தர் நியமன மசோதா தொடர்பாக விளக்கம் அளிக்க கோரி தலைமைச் செயலருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதமும் எழுதியுள்ளார். இந்த மசோதா மூலம், துணைவேந்தர்களை இனி ஆளுநருக்கு பதில், தமிழக அரசே நியமிக்கும். இதுவரை … Read more

உக்ரைனிய அகதிப்பெண்ணால் வாழ்விழந்த பிரித்தானிய பெண் முதன் முறையாக மௌனம் கலைக்கிறார்

உக்ரைன் அழகிக்காக தன் மனைவியைக் கைவிட்டார் பிரித்தானியர் ஒருவர். அவர் உக்ரைனியர்களுக்கு உதவ இருப்பதாக சமீபத்தில் தெரிவித்திருந்தார்.  தன் சொந்தப் பிள்ளைகளை கவனித்துகொள்ள முடியாதவர் உக்ரைன் பிள்ளைகளுக்கு உதவப்போகிறாராம் என்கிறார், உக்ரைன் அழகிக்காக தன் கணவரால் கைவிடப்பட்ட பிரித்தானிய பெண். ரஷ்யா போர் தொடுத்ததால் உக்ரைனிலிருந்து உயிர் தப்ப பிரித்தானியாவுக்கு அகதியாக ஓடி வந்தார் சோபியா (Sofiia Karkadym, 22) என்ற அழகான உக்ரைன் இளம்பெண். Bradfordஇல் வாழும் டோனி (Tony Garnett, 29), லோர்னா (Lorna) … Read more

குலாம் நபி ஆசாத்துக்கு ஆதரவாக காஷ்மீரில் காங்கிரஸ் தலைவர்கள் கூண்டோடு விலகல்…

டெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில்,  குலாம் நபி ஆசாத்துக்கு ஆதரவாக அம்மாநில முன்னாள் துணை முதல்வர் தாரா சந்த் உட்பட காங்கிரஸ் தலைவர்கள் 64 பேர் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகிவிட்டு, குலாம் நபி ஆசாத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். மூத்த காங்கிரஸ் தலைவரான குலாம் நபி ஆசாத், காங்கிரஸ் தலைமை மற்றும், ராகுல்காந்தி மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை சுமத்திய நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகினார். ஆனால்,  காங்கிரஸ் கட்சியை … Read more

இளம் சாதனை மாணவர்களுக்கான உதவித்தொகை திட்டத்திலும் இந்தி வெறி: மதுரை எம்பி சு. வெங்கடேசன் குற்றச்சாட்டு

மதுரை: ‘இளம் சாதனை மாணவர்களுக்கான உதவித்தொகை திட்டத்திலும் இந்தி வெறி நிலவுகிறது என்று மதுரை எம்பி சு. வெங்கடேசன் குற்றம் சாட்டினார். இது தொடர்பாக அவர் கூறி இருப்பதாவது: கடந்த வருடம் கிஷோர் வைக்யானிக் புரோட்சகான் யோஜனா கல்வி உதவித்தொகைக்கான தகுதித் தேர்வு கேள்வித் தாள்கள் இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டும் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளிலும் கேள்வித்தாள் தரப்பட வேண்டுமென வலியுறுத்தினேன். அப் பிரச்சினையில் ஒன்றிய அரசு சென்னை உயர் … Read more

மாயாஜால் பொழுதுபோக்கு நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட 2 ஏக்கர் பட்டா ரத்து: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: மாயாஜால் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட 2 ஏக்கர் நிலத்திற்கான பட்டாவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2015ல் மாயாஜால் நிறுவனத்துக்கு 2 ஏக்கர் நிலத்துக்கு பட்டா வழங்குமாறு தனி நீதிபதி உத்தரவிட்டார். தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் காஞ்சிபுரம் வட்டாச்சியர் மேல்முறையீடு தாக்கல் செய்தார்.  

62 ஆம்ஆத்மி எம்.எல்.ஏ.க்களில் 58 பேர் ஆதரவு; டெல்லி சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் கெஜ்ரிவால் அரசு வெற்றி..!

டெல்லி: டெல்லி சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் கெஜ்ரிவால் அரசு வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 62 ஆம்ஆத்மி எம்.எல்.ஏ.க்களில் 58 பேர் கலந்து கொண்டு கெஜ்ரிவால் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். டெல்லி மாநில சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பில் முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் அரசு வெற்றி பெற்றது. தனது கட்சி எம்எல்ஏக்களுக்கு 800 கோடி ரூபாய் வரை பேரம் பேசப்படுவதாகவும், டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியை கவிழ்க்கவே தொடர்ந்து பல இடையூறுகளை பாஜக செய்வதாகவும் அர்விந்த் … Read more

’’நான் இயேசு அல்ல; அடிச்சீங்கன்னா… திருப்பி அடிப்பேன்’’ – அண்ணாமலை பேச்சு!

நான் தன்மானமிக்க அரசியல்வாதி. கண்ணியமாக பேசினால் இந்த கட்சிக்கு தலைவராக இருக்க வேண்டிய அவசியமில்லை என்று பேசியுள்ளார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. சுதந்திர போராட்ட தியாகி பூலித்தேவனின் 307-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த பூலித்தேவன் திருவுருவ படத்திற்கு தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பூலித்தேவனின் புகழ் மற்றும் வீரம் குறித்து விவரித்தார். தொடர்ந்து, … Read more