சிகரட்டின் விலை அதிகரிக்கப்பட்டது

சிகரட் வகைகளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.  இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இவ்வாறு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.   விலை விபரம் சிகரட் வகைகளுக்கு ஏற்ப இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.   இதன்படி, சிகரட் ஒன்றின் விலை 3, 5, 10 மற்றும் 15 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. வட் வரி அதிகரிப்பு வட் வரி 12 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதன் காரணமாக இவ்வாறு சிகரெட்டின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. வட் அல்லது பெறுமதி சேர் வரி அதிகரிப்பு … Read more

32 ஆண்டுகளுக்கு முன் பக்கத்துக்கு நாட்டுக்கு மலையேற்றத்துக்குச் சென்ற நபர்: தற்போது கிடைத்துள்ள தகவல்

உருகும் பனிப்பாறைகள் பல இரகசியங்களை வெளிக்கொணர்ந்தவண்ணம் உள்ளன. பல ஆண்டுகளுக்கு முன் விபத்துக்குள்ளான விமானங்கள் முதல் காணாமல் போனவர்களின் உடல்கள் வரை பல விடயங்கள் கிடைத்துவருகின்றன. 32 ஆண்டுகளுக்கு முன், ஜேர்மனியிலிருந்து மலையேற்றத்துக்குச் சென்ற ஒருவர் மாயமானார். தற்போது பனிப்பாறைகள் தொடர்ந்து உருகி வருவதையடுத்து பல ஆண்டுகளுக்கு முன் விபத்துக்குள்ளான விமானங்கள் முதல், காணாமல் போனவர்களின் உடல்கள் வரை பல விடயங்கள் கிடைத்துவருகின்றன. இந்நிலையில், 32 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன அந்த ஜேர்மானியரின் உடலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. … Read more

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: ஈரோட்டில் பாதுகாப்பு முகாம்களை நேரில் ஆய்வு செய்த அமைச்சர் முத்துசாமி…

ஈரோடு: காவிரி ஆற்றில்  ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக, காவிரியோரம் உள்ள கிராம மக்கள் தங்க வைக்க 11 முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த முகாமை நேரில் சென்று ஆய்வு செய்த அமைச்சர் முத்துசாமி, அதிகாரிகளிடம் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகம் மட்டுமின்றி, கர்நாடாகாவிலும் கடும் மழை பெய்து வருகிறது. இதனால் காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே தமிழகத்தில் உள்ள காவிரியில் திறந்துவிடப்பட்டுள்ளதால், வெள்ளம் பாய்ந்தோடுகிறது. … Read more

வருசநாடு அருகே சின்னசுருளி அருவியில் நீர்வரத்து: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

வருசநாடு: தேனி மாவட்டம் மேகமலை, ஹைவேவிஸ், கோம்பைத்தொழு மலைப்பகுதிகளில் நேற்று முன்தினம் பெய்த கனமழையால் மேகமலை சின்ன சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேகமலை – கோம்பைத்தொழு மலை அடிவாரத்தில் அமைந்துள்ள சின்னசுருளி அருவிருக்கு தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த அருவியானது மேகமலை வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. அருவிக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் வனத்துறை அனுமதி பெற்று வருகின்றனர். … Read more

6 வழக்கறிஞர்களை சஸ்பெண்ட் செய்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவு

புதுச்சேரி : 6 வழக்கறிஞர்களை சஸ்பெண்ட் செய்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. 6 வழக்கறிஞர்களில் ஒருவர் கொலை வழக்கை எதிர்கொண்டுள்ளவர், மற்றொரு வழக்கறிஞர் போக்சோ வழக்கில் தொடர்புடையவர், மற்றொருவர் நாகலந்தில் பள்ளி ஆசிரியராக உள்ளார் என தகவல் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் ரூ.1,43,612 கோடி ஜிஎஸ்டி வசூல்; 19% அதிகரிப்பு.! ஒன்றிய நிதியமைச்சகம் அறிவிப்பு

டெல்லி: இந்தியாவில் ஆகஸ்ட் மாதத்தில் ரூ.1,43,612 கோடி ஜிஎஸ்டி வசூல் ஆகியுள்ளதாக ஒன்றிய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தை விட ஜிஎஸ்டி வசூல் 28% அதிகம். தமிழகத்தில் 2021 ஆகஸ்ட்டில் ரூ.7,060 கோடியாக இருந்த ஜிஎஸ்டி வசூல், இந்தாண்டு ஆகஸ்ட்டில் 19% அதிகரித்து ரூ.8,386 கோடியானது என தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்புக்கு பிறகு பொருளாதாரம் தொடர்ந்து மீண்டெழுந்து வருகிறது. தொழில்துறை வளர்ச்சி மற்றும் வர்த்தக அளவும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஜிஎஸ்டி வரி வசூலும் … Read more

'சுடுகாட்டுக்கு பாதை வேண்டும்' – திமுக எம்எல்ஏ காரை முற்றுகையிட்ட பொதுமக்கள்

நாட்றம்பள்ளி அருகே சுடுகாட்டிற்கு பாதை கேட்டு ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினரின் வாகனத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பன்னாடகுப்பம் ஆத்தூர் பஞ்சாயத்து பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அப்பகுதியில் சுடுகாட்டுக்கு செல்லும் பாதையை சிலர் ஆக்கிரமிப்பு செய்து வருவதாக தெரிகிறது. இந்த நிலையில் இறந்தவரின் உடலை எடுத்துச் செல்ல அப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக ஊராட்சி மன்ற தலைவர் செந்தில் … Read more

கர்நாடகா: மடாதிபதி மீது பாலியல் புகார் – 7 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

கர்நாடகா: மடாதிபதி மீது பள்ளி மாணவிகள் பாலியல் புகார் அளித்த நிலையில், 7 நாட்களுக்கு அறிக்கை தாக்கல் செய்ய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடகத்தில் பிரபல மடங்களில் ஒன்று சித்ரதுர்காவில் இருக்கும் முருக மடம். இந்த மடத்தின் மடாதிபதியாக இருப்பவர் சிவமூர்த்தி முருகா சரணரு. இந்த மடத்தின் சார்பில் தங்கும் விடுதியுடன் பள்ளிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மடத்தின் பள்ளியில் தங்கி படித்து வந்த 15 மற்றும் 16 வயதுடைய 2 மாணவிகளை … Read more

கனடாவில் முதலமைச்சர் ரேஸில் இருக்கும் மதுரையில் பிறந்த 90’ஸ் கிட்.. யார் இந்த அஞ்சலி அப்பாதுரை?

International oi-Vignesh Selvaraj விக்டோரியா : கனடா நாட்டின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் முதலமைச்சர் ரேஸில் இருக்கிறார் தமிழ்நாட்டில் பிறந்த அஞ்சலி அப்பாதுரை என்ற இளம்பெண். கனடா நாட்டின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண முதலமைச்சரான ஜான் ஹோர்கன் கட்சித் தலைவர் மற்றும் முதலமைச்சர் பதவிகளில் இருந்து விலக இருப்பதால், தேர்தல் நடைபெற உள்ளது. இதில், தமிழ்நாட்டின் மதுரையை பூர்வீகமாகக் கொண்ட 90’எஸ் கிட்டான அஞ்சலி அப்பாதுரை போட்டியிடவுள்ளார். இது கனடாவில் வசிக்கும் தமிழர்கள் மட்டுமல்லாது, உலகத் தமிழர்களின் … Read more

சீன தயாரிப்பு இந்திய தேசியக்கொடியை ஏந்தி சென்றது வேதனை: சபாநாயகர் அப்பாவு கருத்து| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் சென்னை: சீனாவில் தயாரான இந்திய தேசியக்கொடியை ஏந்தி சென்றது வேதனையான விஷயம் என தமிழக சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார். கனடாவின் ஹாலிபேக்ஸ் நகரில் 65வது சபாநாயகர்கள் மாநாடு நடந்தது. அதில், பல்வேறு நாடுகளின், மாநிலங்களில் சபாநாயகர்கள் பங்கேற்றனர். இந்தியா சார்பில், லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா, தமிழக சபாநாயகர் அப்பாவு மற்றும் பல மாநில சபாநாயகர்கள் பங்கேற்றனர். மாநாடு நடந்த வளாகத்தில் ஓம்பிர்லா தலைமையில் சபாநாயகர்கள் தங்களது கைகளில் தேசியகக்கொடி ஏந்தி … Read more