ரேஷன் கடைகளில் கருவிழி மூலம் பொருட்கள் பெறும் வசதி விரைவில் அறிமுகம்-அமைச்சர் சக்கரபாணி

நியாயவிலைக் கடைகளில் கருவிழி மூலம் பொருட்கள் பெறும் வசதி வரும் அக்டோபர் 15ம் தேதிக்குள் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு தகவல் அளித்த அவர், தமிழகத்தில் நியாயவிலைக் கடைகள் மூலம் அனைத்து அட்டைதாரர்களுக்கும் குறைந்த விலையிலும், இலவசமாகவும் அரிசி, பருப்புகள் உள்ளிட்ட பொருட்கள் போன்றவை வழங்கப்பட்டு வருவதாக கூறினார். மேலும், ரேஷன் கடைகளில் ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கான மின்னணு பதிவேட்டில் (கைரேகை) அவ்வப்போது கோளாறுகள் ஏற்படுவதால், மின்னணு … Read more

கேரளா: பூனைக்கடிக்கு தடுப்பூசி செலுத்தச் சென்ற பெண்ணை தெருநாய் கடித்த கொடூரம்!

பூனைக்கடிக்கு தடுப்பூசி செலுத்த சென்ற இளம்பெண்ணை மருத்துவமனைக்குள் தெருநாய் கடித்த கொடூர சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலுள்ள விழிஞ்சம் நகரைச் சேர்ந்தவர் அபர்னா(31). இவரை பூனை கடித்ததால் மூன்றாவது டோஸ் ஆண்டி – ரேபிஸ் தடுப்பூசி செலுத்த தனது தந்தையுடன் அப்பகுதியிலுள்ள சுகாதார நிலையத்திற்குச் சென்றுள்ளார். காலை எட்டு மணியளவில் சென்ற அவர், அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக அங்கு நாற்காலியின்கீழ் படுத்திருந்த தெருநாள் ஒன்று அவரை கடித்து காயப்படுத்தியுள்ளது. இதுகுறித்து … Read more

மாநில அளவிலான பேச்சு போட்டி: ஆதித்யா மாணவிகள் அபாரம்| Dinamalar

புதுச்சேரி : புதுச்சேரி அரசு தேசிய மனநல திட்டம் மற்றும் சர்வதேச தற்கொலை விழிப்புணர்வு திட்டம் சார்பில் தற்கொலை விழிப்புணர்வு பேச்சு போட்டி இந்திராகாந்தி அரசு மருத்துவ கல்லுாரி வளாகத்தில் நடந்தது.இதில், பல்வேறு கல்லுாரிகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில், புதுச்சேரி ஆதித்யா மேலாண்மை அறிவியல் ஆராய்ச்சி நிறுவன மாணவி அனிஷா மாநில அளவில் இரண்டாம் இடம், மாணவி தாரணி மூன்றாம் இடம் பிடித்தனர். இவர்களுக்கு ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. மாநில அளவிலான பேச்சு … Read more

அருள்நிதியின் 'தேஜாவு' டிவியில் ஒளிபரப்பாகிறது

அறிமுக இயக்குனர் அரவிந்த் ஸ்ரீனிவாசன் இயக்கிய படம் தேஜாவு. இதில் அருள்நிதி, ஸ்ருதி வெங்கட், மதுமிதா, நடிகர்கள் அச்யுத் குமார், காளி வெங்கட் மற்றும் மைம் கோபி ஆகியோர் நடித்துள்ளனர். எழுத்தாளர் ஒருவர் கற்பனையாக எழுதும் அனைத்து சம்பவங்களும் யதார்த்த வாழ்வில் நிகழ்வதைச் சுற்றி இந்தப் படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் எழுத்தாளர் சுப்பிரமணியாக நடிகர் அச்யுத் குமார் நடித்துள்ளார். அவர் எழுதும் கற்பனை கதையின் கதாபாத்திரங்கள் அனைத்தும் யதார்த்த வாழ்வில் தன்னை வந்து அச்சுறுத்துவதாக … Read more

ரி20 உலகக்கிண்ணத்தை வெல்லும் அணிக்கான பரிசுத்தொகை

அவுஸ்திரேலியாவில் ஆரம்பமாகவுள்ள ஐ.சி.சி ரி20 உலகக்கிண்ணத்தை வெல்லும் அணிக்கான பரிசுத்தொகைகளை சர்வதேச கிரிக்கெட் பேரவை உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது. இதன்படி நவம்பர் 13 ஆம் திகதி மெல்போர்னில் நடைபெறும் இறுதிப் போட்டியில் வெல்லும் அணிக்கு 1.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பரிசு தொகையாக வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. உலகக்கிண்ண சம்பியன்களுக்கு வழங்கப்படவுள்ள இந்த தொகையானது இலங்கை ரூபாயில் சுமார் 56 கோடி 87 இலட்சத்து 51 ஆயிரம் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது இடத்தை பிடிக்கும் அணிக்கு சம்பியன்களுக்கு … Read more

விவசாயத்தில் நஷ்டம்.! வாலிபர் எடுத்த விபரீத முடிவு.!

தேனி மாவட்டத்தில் விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தேனி மாவட்டம் கோம்பை அரண்மனை தெரு பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் (37). இவர் உடும்பன் சோலையில் உள்ள தனியார் வங்கியில் பணிபுரிந்து வந்தார். மேலும் அப்பகுதியில் உள்ள ஏலத் தோட்டத்தை குத்தகை எடுத்து ஸ்ரீகாந்த் விவசாயம் பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் மன வேதனையில் இருந்து வந்த ஸ்ரீகாந்த் பூச்சி … Read more

மாணவிகளுக்கு ஆபாச வீடியோ காட்டிய ஆசிரியர்: செருப்பு மாலை அணிவித்த பெற்றோர்..!

வகுப்பறையில் மாணவிகளுக்கு ஆபாச வீடியோ காட்டி பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த ஆசிரியரை அடித்து உதைத்து, அவருக்கு செருப்பு மாலை அணிவித்து பெற்றோர் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். ஜார்க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்புமை அடுத்த பதஜம்டாவில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றுபவர் துகாராம். இவர், வகுப்பறையில் மாணவிகளிடம் ஆபாச படங்கள், வீடியோக்களை காண்பித்து பாலியல்ரீதியாக அவர்களிடம் அத்துமீறியதாக கூறப்படுகிறது. இது குறித்து 6 மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் போலீசில் புகார் அளித்தனர். … Read more

யோகாவை வளர்க்கும் சவுதி | சீனா நடத்தும் சர்வதேச பேட்மின்டன் போட்டி – உலகச் செய்திகள் ரவுண்ட்அப்

ரஷ்யர்கள் பின்லாந்துக்குள் நுழைவதை ஷெங்கன் சுற்றுலா விசாவைக் கொண்டு தடுக்க முடிவெடுத்திருப்பதாக பின்லாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் பெக்கா ஹாவிஸ்டோ தெரிவித்திருக்கிறார். ஆனால் மனித உரிமைகள் அடிப்படையில் படிப்பு, வேலை வேண்டி வருபவர்களுக்கு அதிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. 195 நாள்கள் விண்வெளி பயணத்துக்குப் பிறகு ரஷ்ய விண்வெளி வீரர்கள் வியாழக்கிழமையன்று கஜகஸ்தானில் தரையிறங்கியதாக ரஷ்யாவின் விண்வெளி நிறுவனம் தகவல் தெரிவித்திருக்கிறது. எலிசபெத் மகாராணியின் மறைவுக்குப் பிறகு அவர் வாழ்ந்த விண்ட்சர் மாளிகை கடந்த வியாழனன்று மீண்டும் … Read more

600 பேருக்கு டெங்கு | வீடுகளுக்கே ஆய்வு செய்ய வரும் சென்னை மாநகராட்சி பணியாளர்கள்

சென்னை: சென்னையில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் வகையில் சென்னை மாநகராட்சி பணியாளர்கள் வீடு வீடாக சென்று ஆய்வு செய்யவார்கள் என்று சென்னை மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் வகையில் கொசு ஒழிப்புப் பணிகளை மேற்கொள்ள 2,084 சிறு வட்டங்களாக பிரிக்கப்பட்டு 954 கொசு ஒழிப்பு நிரந்தரப் பணியாளர்கள், 2,317 ஒப்பந்தப் பணியாளர்கள் என மொத்தம் 3,271 பணியாளர்கள் மூலம் கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். 224 மருந்து தெளிப்பான்கள், … Read more

வைத்திலிங்கம் ஒரே போடு; பீதியில் எடப்பாடி பழனிச்சாமி!

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், அதிமுகவில் இலைமறை காயாக இருந்து வந்த தலைமை பதவிக்கான கோஷ்டி பூசல் ஆட்சியை இழந்த பின்னர் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதன் தொடர்ச்சியாக அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி நியமித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்த மற்றும் அவரது ஆதரவாளர்களை எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவை விட்டே நீக்கினார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஓபிஎஸ் பாஜக மேலிடம், தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றம் என ஒரே நேரத்தில் 3 கதவுகளை … Read more