அவரை பார்த்தால் எனக்கு பொறாமையாக இருக்கிறது – மீனாவின் வைரல் பதிவு

எழுத்தாளர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவல் மணிரத்னம் இயக்கத்தில் படமாகியுள்ளது. எம்ஜிஆர், கமல் ஹாசன் உள்ளிட்டோரால் சாத்தியப்படாத விஷயத்தை மணிரத்னம் சாத்தியமாகியிருக்கிறார். 70 ஆண்டுகளாக தமிழர்களின் மனக்கண்ணில் விரிந்த கதாபாத்திரங்கள் இன்று முதல் திரையில் அனைவருடைய கண்களின் முன் உலாவ ஆரம்பித்திருக்கின்றன. கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி,ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் பொன்னியின் செல்வன் இன்று வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. இதற்கிடையே பொன்னியின் செல்வன் கதையின் முக்கிய பாத்திரங்களில் ஒன்றான நந்தினி கதாபாத்திரத்தில் … Read more

விலை மதிப்பற்ற உயிர்கள்… முதலமைச்சர் வெளியிட்டிருக்கும் செய்தி

தேசிய தன்னார்வ ரத்த தான தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இதனையொட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பில், “ரத்த தானம் மூலம் மதிக்கத்தக்க மனித உயிரை காப்பாற்றுவது புனிதமான செயலாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ரத்த தானம் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் திங்கள் முதல் நாள் தேசிய தன்னார்வ ரத்த தான தினமாக கொண்டாடப்படுகிறது. தன்னார்வ ரத்த தானத்தின் முக்கியத்துவத்தை மக்கள் அனைவரும் அறிந்திடும் வகையில் விழிப்புணர்வை தமிழ்நாடு … Read more

ஆர்எஸ்எஸ் பேரணி நவம்பர் 6ந்தேதிக்கு மாற்றம்! உயர் நீதிமன்றம்

சென்னை: அக்டோபர் 2ந்தேதி நடைபெற அனுமதி வழங்கிய சென்னை உயர்நீதி மன்றம், ஆர்எஸ்எஸ் பேரணியை நவம்பர் 6ந்தேதி நடத்த அனுமதி வழங்கி உள்ளது. தமிழ்நாட்டில் சில சம்பவங்களால் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறி, காவல்துறை, அக்டோபர் 2ந்தேதி நடைபெற இருந்த  ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தடை விதித்தது. இதை எதிர்த்து ஆர்எஸ்எஸ் தரப்பில் முறையீடு செய்யப்பட்ட நிலையில், காவல்துறை தரப்பிலும், மறுஆய்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுமீதான விசாரணை இன்று நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிமன்றம்,  அக்.2-ம் தேதிக்கு … Read more

ஈரோடு பெரியவலசு பகுதியில் உள்ள விசைத்தறி பட்டறையில் தீ விபத்து ஏற்பட்டதில் ஒருவர் பலி

ஈரோடு: ஈரோடு பெரியவலசு பகுதியில் உள்ள விசைத்தறி கூடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். பெரியசாமி என்பவருக்கு சொந்தமான விசைத்தறி கூடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மாற்றுத்திறனாளி உயிரிழந்தார்.

மத்திய அரசின் செயல்பாட்டை கண்டித்து சேலத்தில் ஷாஹின்பாக் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

சேலம்: மத்திய அரசின் செயல்பாட்டை கண்டித்து சேலத்தில் ஷாஹின்பாக் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். தடையை மீறி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் போலீசார் போராட்டக்காரர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தடையை மீறி ஈடுபட முயன்ற இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்தோர் குண்டுகட்டாக கைது செய்யப்பட்டனர்.

கொதித்த பால் உடலில் கொட்டி குழந்தை பலி

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோட்டயம் அருகே காஞ்சிரப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் பிரின்ஸ் தாமஸ். அவரது மனைவி தியா மேத்யூ. இவர்களது மகள் செரா மரியா பிரின்ஸ்(2). சம்பவத்தன்று தியா மேத்யூ வீட்டில் டீ தயாரிப்பதற்காக பாலை அடுப்பில் சுட வைத்துக் கொண்டிருந்தார். அப்போது பால் சூடான பிறகு பாத்திரத்தை அவர் கையில் எடுத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக செரா மரியா மீது கொதிக்கும் பால் விழுந்தது. இதில் படுகாயமடைந்த குழந்தையை எருமேலியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். … Read more

அரசியலில் நாங்கள் ஜீரோ என்றனர்; இனி நாங்கள்தான் ஹீரோ – ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம்

அரசியலில் எங்களை ஜீரோ என விமர்சித்தனர்; ஆனால் இனி நாங்கள்தான் ஹீரோ என்று ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். அதிமுக விவகாரத்தில் ஈபிஎஸ் தரப்புக்கு ஆதரவாக சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் அந்த மனு மீதான விசாரணையில் இன்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டது. மேல்முறையீட்டு வழக்கில் பொதுச் செயலாளர் தேர்தலுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது … Read more

PS1 – நினைத்ததை சாதித்திருக்கிறாரா மணிரத்னம்? #PTReview

கல்கியின் பொன்னியின் செல்வன் கதைக்கு, திரை வடிவத்தைக் கொடுத்திருக்கிறார் மணிரத்னம். அரியணைக்கான போர், சூழ்ச்சியால் நிகழும் குழப்பங்கள், வஞ்சத்தால் நிகழ்த்தப்படும் சூழ்ச்சிகள், உறவு, காதல், நட்பு, பகை என அனைத்தும்தான் பொன்னியின் செல்வன். அதை கூடிய வரை உயிர்ப்புடன் திரைக்குக் கடத்தியிருக்கிறார். ராஷ்ட்ரகூடத்தில் போர் வெற்றிக்குப் பின் ஆதித்த கரிகாலன் (விக்ரம்), தன் நண்பன் வந்தியத்தேவனிடம் (கார்த்தி) ஒரு பொறுப்பை ஒப்படைக்கிறார். சோழ சாம்ராஜ்யத்துக்கு எதிரான சதித் திட்டம் ஒன்று கடம்பூர் மாளிகையில் தீட்டப்படுகிறது. அது என்னவென … Read more

குப்பை கிடங்கிற்கு அனுமதி அளிக்கும் முன்கவனம் தேவை: பசுமை தீர்ப்பாயம் அறிவுரை| Dinamalar

சென்னை : ‘நீர்நிலைகளை ஒட்டிய பகுதிகளில், குப்பை கிடங்குகளுக்கு அனுமதி அளிக்கும் முன் கவனமாக இருக்க வேண்டும்’ என, புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டு குழுவுக்கு, தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் அறிவுறுத்தியுள்ளது. புதுச்சேரி உச்சிமேடு ஏரியில், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து கழிவுகள் கொட்டப்படுவதாக, உச்சிமேடு ஏரி சங்கம், பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. இதை விசாரித்த தீர்ப்பாயம், பல்வேறு இடைக்கால உத்தரவுகளை பிறப்பித்தது.இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு … Read more

மணிரத்னம் Vs ராஜமவுலி, யார் பெஸ்ட்? – சர்ச்சை ஆரம்பம்

தமிழ் சினிமாவின் பெருமையாக இன்று வெளிவந்திருக்கும் 'பொன்னியின் செல்வன்' படத்தின் முதல் பாகம் அமைந்துள்ளதாக காலைக் காட்சிகளைப் பார்த்த பெரும்பாலான ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். அதே சமயம் சில தெலுங்கு ஊடகங்களும், சில தெலுங்கு ரசிகர்களும் 'பொன்னியின் செல்வன்' படம் பற்றி சமூக வலைத்தளங்களில் நெகட்டிவ்வான கமெண்ட்டுகளைப் பரப்பி வருகின்றனர். ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த 'பாகுபலி' படத்துடன் 'பொன்னியின் செல்வன்' படத்தை ஒப்பிட்டுப் பலரும் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். 'பாகுபலி' படம் ஒரு கற்பனைக் கதை, அதை படமாக்குவதற்கு … Read more