தமிழகத்தில் பயங்கரவாத செயலில் ஈடுபட பி.எப்.ஐ., முயற்சி அம்பலம்| Dinamalar

புதுடில்லி :தடை செய்யப்பட்டுள்ள பி.எப்.ஐ., எனப்படும் ‘பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா’ அமைப்பு, தமிழகம் உட்பட பல மாநிலங்களில் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.இஸ்லாமிய அமைப்பான, பி.எப்.ஐ., மற்றும் அதன் துணை அமைப்புகள் தடை செய்யப்பட்டவையாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இவை, பயங்கரவாதத்துக்கு நிதி உதவி செய்தல், மத ரீதியில் மக்களிடையே பிளவு ஏற்படுத்த முயற்சி போன்றவற்றில் ஈடுபட்டு வந்ததால், இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய உள்துறை உயரதிகாரிகள் கூறியுள்ளதாவது … Read more

குஜராத் செல்ல வேண்டாம்கனடா விஷமத்தனம்| Dinamalar

ஒட்டாவா :’பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள இந்திய மாநிலங்களுக்கு சுற்றுலா செல்ல வேண்டாம்’ என, கனடா தன் நாட்டு மக்களுக்கு வினோத ஆலோசனை வழங்கிஉள்ளது. இது குறித்து, அந்நாடு சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பு: இந்தியாவில், குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப் மாநிலங்கள் பாகிஸ்தானுடன் எல்லையை பகிர்ந்துள்ளன. இந்த மாநிலங்களில், பாக்., நாட்டு எல்லைக்கு அருகில் உள்ள பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம்.அப்பகுதிகளில் கண்ணி வெடி அச்சுறுத்தல் உள்ளது. மேலும், இந்தியா முழுதும் பயங்கரவாதிகள் எந்நேரமும் தாக்கும் அபாயம் இருப்பதால், கனடா மக்கள் … Read more

வெளியாகாத தென்காசி வடக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் பட்டியல்! – காரணம் என்ன?

தி.மு.க-வின் அமைப்புரீதியான உட்கட்சித் தேர்தல் நடைபெற்றுவருகிறது. இது தொடர்பாக தமிழகம் முழுவதும் உள்ள தி.மு.க மாவட்டச் செயலாளர்கள், துணைச் செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பொறுப்புகளுக்கான பெயர்ப் பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்டது. நெல்லை கிழக்கு மாவட்டத்துக்கு ஆவுடையப்பன், மத்திய மாவட்டத்துக்கு அப்துல் வஹாப் ஆகியோர் மீண்டும் தேர்வாகியுள்ளனர். நெல்லை மாவட்ட தி.மு.க செயலாளர் தென்காசி தெற்கு மாவட்டச் செயலாளராக ஏற்கெனவே பொறுப்பு வகித்த சிவபத்மநாதன் மீண்டும் நியமிக்கப்பட்டிருக்கிறார். தமிழகத்தின் அனைத்து மாவட்ட நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்டபோதிலும், வாசுதேவநல்லூர், … Read more

புதுச்சேரி மின்துறை தனியார்மயமாக்கம் | போராட்டம் செய்வது நல்லதல்ல – ஆளுநர் தமிழிசை எச்சரிக்கை

புதுச்சேரி: புதுச்சேரி மின்துறையை தனியார்மயமாக்க கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக போராட்டம் செய்வது நல்லதல்ல என்றும் போராடக்கூடாது என்றும் ஆளுநர் தமிழிசை எச்சரித்துள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரசு நூலகங்களை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளை ஆராய, துணைநிலை ஆளுநர் தமிழிசை இன்று கலை மற்றும் பண்பாட்டுத்துறை அதிகாரிகளோடு ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக் கூட்டத்தில் இயக்குனர் கந்தன் பங்கேற்றார். அப்போது, நூலகங்களை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை விரைவுப்படுத்துமாறு துணைநிலை ஆளுநர் அறிவுறுத்தினார். அதனைத் தொடர்ந்து முருங்கப்பாக்கம் மற்றும் வில்லியனூரில் உள்ள … Read more

ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு தடை ஏன்? அண்ணாமலை கேள்வி!

தமிழகம் முழுவதும் அக்டோபர் 2ஆம் தேதி மகாத்மா காந்தி பிறந்தநாளன்று ஊர்வலம் நடத்த அனுமதி கோரி ஆர்எஸ்எஸ் அமைப்பு உயர் நீதிமன்றத்தை நாடியிருந்தது. இதனையேற்று, தமிழகம் முழுவதும் 50 இடங்களில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை திரும்ப பெற கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அவரை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யுமாறு … Read more

இலங்கை கடற்படை அட்டகாசம் தொடர்கிறது: ராமேஸ்வரம் மீனவர்கள் மீண்டும் விரட்டியடிப்பு

ராமேஸ்வரம்:  புரட்டாசி மாதம் இறைச்சி மற்றும் மீன்கள் விற்பனை குறைவாக இருக்கும் என்பதால் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் 150க்கும் குறைவான விசைப்படகுகளே கடலுக்கு சென்றன. இரவில் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்துள்ளதாக கூறி விரட்டியடித்தனர். மேலும் அப்பகுதிக்கு மீனவர்கள் வந்து விடாதபடி, இரவு முழுவதும் இலங்கை கடற்படையினர் ரோந்து கப்பல்களில் சுற்றி தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதனால் அச்சமடைந்த மீனவர்கள், வேறு … Read more

விஜய் சேதுபதி அளவுக்கு நடிக்கல… ஹிரித்திக் ரோஷன் ஒப்புதல்

மும்பை: விக்ரம் வேதா இந்தி படத்தில் விஜய் சேதுபதி அளவுக்கு நான் நடிக்கவில்லை என்றார் ஹிரித்திக் ரோஷன். விஜய் சேதுபதி, மாதவன் நடிப்பில் வெளியான விக்ரம் வேதா படம், அதே பெயரில் இந்தியில் ரீமேக் …

கனவு நகர் திட்டத்தால் சூரத் பாதுகாப்பான வைர வர்த்தக மையமாக மாறும்: பிரதமர் மோடி நம்பிக்கை

சூரத், செப்.30: சூரத்தை பாதுகாப்பான, வசதியான வைர வர்த்தக மையமாக மாறுவதற்கு, கனவு நகர் திட்டம்  உதவியாக இருக்கும் என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி, குஜராத்திற்கு 2 நாள் பயணமாக நேற்று சென்றார். சூரத் விமான நிலையத்தில் இருந்து சுமார் இரண்டரை கிலோ மீட்டர் தூரம் பேரணியாக சென்று பொதுமக்களை அவர் சந்தித்தார். பின்னர், சூரத் நகரில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். தொடர்ந்து, ரூ29,000 கோடி மதிப்புள்ள பல்வேறு … Read more

எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஆளுநர்கள் தலையீடு ஏன்?-ராகுல் காந்தி விமர்சனம்

எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஆளுநர்கள் தலையீடு அதிக அளவில் இருப்பதாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மேலும் மத்திய அரசு கொண்டுவந்த பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி நாட்டிலுள்ள இரண்டு தொழிலதிபர்களுக்கு மட்டுமே சாதகமாக அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இரண்டாவது கட்டமாக இந்திய ஒற்றுமை நடைப் பயணத்தை ராகுல் காந்தி இன்று கூடலூரில் மேற்கொண்டார். கோழிப்பாலம் பகுதியிலிருந்து சுமார் 6 கிலோமீட்டர் தூரம் நடைப் பயணமாக வந்து கூடலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று … Read more

பிரபல யூடியூபர் சாலை விபத்தில் உயிரிழப்பு – அதிர்ச்சியில் சப்ஸ்கிரைபர்ஸ்

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபர் அபியுதய் மிஸ்ரா சாலை விபத்தில் உயிரிழந்தார்.   மத்திய பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபர் அபியுதய் மிஸ்ரா. பப்ஜி உள்ளிட்ட பல்வேறு ஆன்லைன் வீடியோ கேம்களில் எளிதில் வெல்வதற்காக டிப்ஸ் சொல்லித்தரும் வகையில் இவர் ‘Skylord’ என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வந்தார். இவருடைய சேனலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உண்டு. 1.64 மில்லியன் பேர் ‘ஸ்கைலார்டு’ சேனலை சப்ஸ்கிரைப் செய்துள்ளனர். இந்த … Read more