‘இந்த 6 பேருமே ஒருத்தன் தான்’ – வெளியானது கார்த்தியின் ‘சர்தார்’ பட டீசர்

நடிகர் கார்த்தியின் ‘சர்தார்’ திரைப்படத்தின் டீசர் இன்று வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.  ‘இரும்புத் திரை’, ‘ஹீரோ’ படங்களைத் தொடர்ந்து அடுத்ததாக பி.எஸ். மித்ரன் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘சர்தார்’. இந்தத் திரைப்படத்தில் கார்த்தி, சங்கி பாண்டே, ராஷி கண்ணா, ரஜிதா விஜயன், முரளி சர்மா, முனீஸ்காந்த் ஆகியோர் நடித்துள்ளனர். சுமார் 16 வருடங்களுக்குப் பிறகு இந்தப் படத்தில் நடிகை லைலா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ் குமார் … Read more

21 வருடங்களை கடந்த தபுவின் சாந்தினி பார்

பாலிவுட் இயக்குனர்களில் மதூர் பண்டார்கரும் குறிப்பிடத்தக்க படங்களை கொடுத்து தனக்கென தனி ரசிகர் வட்டத்தை பெற்றுள்ளவர். தற்போது தமன்னா நடிப்பில் பப்ளி பவுன்சர் என்கிற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் தமன்னா லேடி பவுன்சர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கடந்த வாரம் இந்தப்படம் வெளியானது. இந்தநிலையில் மதுர் பண்டார்கர் இயக்கத்தில் கடந்த 2001ல் சாந்தினி பார் என்கிற திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் தபு கதாநாயகியாகவும் அதுல் குல்கர்னி முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இந்தப்படம் வெளியான சமயத்தில் ரசிகர்களிடம் … Read more

திருநெல்வேலியில் மர்ம காய்ச்சலுக்கு 12 வயது சிறுமி பலி!!

திருநெல்வேலி மாவட்டம் மூலைக்கரைப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மர்ம காய்ச்சல் வேகமாக பரவியது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தனியார் மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர். சுகாதார துறையினரும் கிராமம், கிராமமாக சென்று மருத்துவ பரிசோதனை செய்து நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வந்தனர். பாளையங்கோட்டை மூலைக்கரைப்பட்டி பரமசிவன் கோவில் தெருவில் வசித்து வருபவர் டெய்லர் ஆதிநாராயணன் (40). இவரது மூத்த மகள் தங்கவேணி (12). இவர் அதே பகுதியில் உள்ள … Read more

சென்னை: வெட்டிப் படுகொலைசெய்யப்பட்ட ரௌடி… அருகில் துடிதுடித்த நண்பன்! – போலீஸ் தீவிர விசாரணை

சென்னை, பள்ளிக்கரணை பகுதியிலுள்ள அம்பேத்கர் சாலையில் இரண்டு தரப்பினர் ஆயுதங்களுடன் சண்டையிட்டுக் கொள்வதாக காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. தகவலறிந்து பள்ளிக்கரணை போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அந்தப் பகுதியிலிருந்த புதர் ஒன்றில் மேடவாக்கம் பகுதியைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான ஆல்வின்(எ)பிரைட் என்பவர் உடலில் பல வெட்டுக் காயங்களுடன் இறந்துகிடந்தார். அவர் சடலம் அருகில் அவரின் நண்பர் பெருமாள் என்பவர் கை, கால் பகுதிகளில் பலத்த வெட்டுக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கிக் கிடந்துள்ளார். ஆல்வின் காவல்துறையினர் … Read more

அரசு வழங்கிய 500 இலவச ஆடுகளில் 250 இறப்பு: சாப்டூர் விவசாயிகள் புகார்

மதுரை: சாப்டூர் பகுதியில் அரசின் இலவச ஆடுகள் 500 வழங்கியதில் 250 இறந்துவிட்டன என விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். அரசு போதிய நிதி ஒதுக்கியும் தரமில்லாத நோயுள்ள ஆடுகளை வழங்கியும் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயி ஒருவர் அளித்த புகாரால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பில் செப்டம்பர் மாத விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் … Read more

விரைவில் சட்ட சபை தேர்தல்; திரியை கொளுத்தும் எடப்பாடி!

மதுரை மாவட்டம் பழங்காநத்தத்தில் அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. முன்னதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக மதுரை வந்த எடப்பாடி பழனிசாமிக்கு விமான நிலையத்தில் ஆளுயர மாலை அணிவித்து மேள தளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா எம்எல்ஏ, தகவல் தொழில் நுட்ப அணியை சேர்ந்த ராஜ் சத்யன் உள்ளிட்டோரும் சிறப்பான வரவேற்பு வழங்கினர். இந்த பொதுக்கூட்டத்தில் தமிழக சட்டமன்ற … Read more

ஓசி பயணம் வேண்டாம் – டிக்கெடு கொடு! தெறிக்க விட்ட மூதாட்டி – வைரல் வீடியோ…

சென்னை: இலவச பேருந்தில், ஓசி பயணம் வேண்டாம்,  காசு கொடுக்கேன் டிக்கெட் கொடு என 80 வயது மூதாட்டி பேருந்து நடத்துனரிடம் விவாதம் செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது. அரசு பணியில் உள்ள பெண்களே பெரும்பாலும் இலவச பேருந்து பயணத்தை உபயோகப் படுத்தி வரும் நிலையில், அன்றாடங்காய்ச்சியான முதிய பெண்மணி ஓசி பயணம் வேண்டாம், காசு கொடுக்கேன் டிக்கெட்டு  என அனல் தெறிக்க பேசும் பேச்சு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழக அரசு பெண்களுக்கு இலவச பேருந்துகளை … Read more

எடப்பாடி அருகே பில்லுக்குறிச்சி பகுதி வீட்டில் 30 சவரம் நகை கொள்ளை

சேலம்: எடப்பாடி அருகே பில்லுக்குறிச்சி பகுதியில் கோவிந்தராஜ் என்பவர் வீட்டில் 30 சவரம் நகை கொள்ளை அடிக்கப்பட்டது. நகை கொள்ளை குறித்து கோவிந்தராஜ் அளித்த புகாரின் பேரில் பூலாம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாலாஜாபாத் அருகே நேற்று கேஸ் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 2-ஆக உயர்வு

காஞ்சிபுரம்: வாலாஜாபாத் அருகே நேற்று கேஸ் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 2-ஆக உயர்ந்துள்ளது. செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 5 பேரில் சந்தியா (21) என்பவர் உயிரிழந்தார். கேஸ் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய 12 பேரில் 2 பேர் இறந்த நிலையில் 10 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.