5G சேவை இந்தியாவில் அறிமுகம்! Jio மற்றும் Airtel பயனர்களுக்கு 5G சேவை எப்போது கிடைக்கும்?

5G இனைய சேவையை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் நடைபெற்ற Indian Mobile Congress 2022 நிகழ்ச்சியில் துவக்கிவைத்தார். இதில் ஏர்டெல், ஜியோ மற்றும் Vi ஆகிய நிறுவனங்கள் கலந்துகொண்டன.

தற்போது ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகிய நிறுவனங்கள் முதல்கட்டமாக இந்த 5G இனைய சேவையை முக்கிய இந்திய நகரங்களில் துவங்கவுள்ளதாக தெரிவித்துள்ளன.

இதில் ஜியோ நிறுவனம் இந்தியாவில் வரும் 2023 ஆம் டிசம்பர் மாதத்திற்குள் அணைத்து இடங்களிலும் 5G சேவையை வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. ஏர்டெல் நிறுவனமும் இதையே தெரிவித்துள்ளது.

5G சேவையை தொடங்கிவைத்தார் பிரதமர் நரேந்திர மோடி! இனி இந்தியா No 1!

வரும் தீபாவளி அன்று இந்த முக்கிய நகரங்கள் அனைத்திலும் 5G சேவை துவங்கும் என்று தெரிவித்துள்ளது. ஏர்டெல் நிறுவனம் அதன் 5G வசதி கொண்ட சிம் அனைத்தையும் வரும் தீபாவளி முதல் விற்பனை செய்யவுள்ளது.

முதல்கட்டமாக நான்கு நகரங்களில் இந்த சேவை வழங்கப்டும். அந்த நகரங்களானது சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா ஆகியவை ஆகும். இந்த நகரங்களை தவிர மற்ற 9 நகரங்களுக்கு தீபாவளி முதல் 5G சேவை வழங்கப்படும்.

Twitter செயலியில் புதிய ஆப்ஷன்! ட்வீட் Edit வசதி!

இந்த நகரங்கள் அகமதாபாத், பெங்களூரு, சண்டிகர், காந்திநகர், குறுகிராம், ஐதராபாத், ஜாம்நகர், லக்னோ, புனே ஆகியவை ஆகும். ஜியோ மற்றும் ஏர்டெல் அதன் அறிவிப்பை வெளியிட்ட நிலையில் வோடோபோன்-ஐடியா நிறுவனங்கள் இதில் பின்தங்கியுள்ள.

இந்த 5G டேட்டா விலையை பொறுத்தவரை 4G பிளான் விலையிலேயே கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் முழுமையான 5G சேவையை வழங்கிவுடன் இந்த டேட்டா விலை உயர்த்தப்படும் என்று தெரிகிறது.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.